ஆரோக்கியமான உணவு முறைகள்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம். காம் பதிவில் நாம் தினமும் சாப்பிட கூடிய உணவு முறைகளில் காலையில் இருந்து இரவு வரை எந்த மாதிரியான உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளப்போகிறோம். சாப்பாடு இல்லாவிட்டால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியாது. அப்படி நாம் சாப்பிடும் சாப்பாடு ஆரோக்கியமானதாக இருப்பது மட்டும் இல்லாமல் அதை சரியான நேரத்திலும் நாம் சாப்பிட வேண்டும். இந்த மாதிரி சாப்பிட்டால் தான் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய உணவுகள் என்னென்ன என்பதை தொடரை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ இரவு சாப்பாட்டில் இந்த 5 வகையான உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்..!
காலை உணவு என்ன சாப்பிடலாம்:
நீங்கள் எப்போதும் காலை உணவு சாப்பிடுவதை தவிர்க்க கூடாது. உணவு முறைகளில் கட்டாயமான ஒன்று காலை உணவு. தினமும் நீங்கள் காலையில் மென்மையான உணவுகளை சாப்பிட வேண்டும். அந்த உணவு நார்சத்து கொண்ட சூடான உணவாக இருக்க வேண்டும். இந்த மாதிரி உணவுகளை காலையில் நீங்கள் சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்கும்.
நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டின் நேரமானது இயற்கையோடு தொடர்புடையது. அதனால் உடலுக்கு சரியான உணவு நேரம் என்று உள்ளது. அந்த நேரத்தில் தான் நீங்கள் சாப்பிட வேண்டும். ஆகவே நீங்கள் காலை எழுந்ததும் 1 மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் காலை 7 மணியில் இருந்து 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். இது தான் நீங்கள் காலை உணவு சாப்பிடுவதற்கான சரியான நேரம்.
மதிய உணவு முறை:
சிலர் காலை உணவுகளை தவிர்த்து மதிய உணவுகளை சாப்பிடுவார்கள். அப்படி இருக்க கூடாது. நீங்கள் மதிய நேரங்களில் புரதங்கள், கார்போஹைட்ரேட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அதுபோல பசி எடுக்கும் போது தான் சாப்பிட வேண்டும். நீங்கள் சாப்பிடும் மதிய உணவு உங்களுக்கு எப்போதும் ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்க வேண்டும்.
காலை உணவு சாப்பிட பிறகு 4 மணி நேரம் இடைவெளி விட்டு தான் நீங்கள் மதிய உணவு எடுத்து கொள்ள வேண்டும். அது தான் சரியான உணவு நேரம். கண்ட நேரங்களில் உணவு சாப்பிடுவதை தவிர்த்து விடுவது நல்லது.
இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அது விஷமாக மாறும்..! |
இரவு நேர உணவு:
நீங்கள் இரவில் சாப்பிடும் உணவானது உங்களுடைய நிம்மதியான தூக்கத்திற்கு காரணமாக இருக்கும். அதனால் நீங்கள் இரவில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
அதுபோல இரவு சாப்பாட்டினை நீங்கள் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் களித்து தான் நீங்கள் தூங்க செல்ல வேண்டும். அப்படி செய்தால் தான் அன்றைய நாள் நிம்மதியான தூக்கத்தை தூங்க முடியும் மற்றும் மறுநாள் காலையில் நீங்கள் சுறுசுறுப்பாக எழும்ப முடியும்.
இடையில் பசி எடுத்தால் என்ன செய்வது?
காலை, மதியம் என இரண்டு வேளை உணவருந்திய பிறகு இடையில் சிலருக்கு பசி எடுக்கும். அப்போது நீங்கள் நொறுக்கு தீனிகளை சாப்பிட கூடாது. எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலை- 11 மணியில் இருந்து 11.30 மணி வரை சத்தான பழங்கள் மற்றும் வேக வைத்த பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும்.
மாலை- 4 மணியில் இருந்து 4.30 மணி வரை சத்தான பழச்சாறு வகைகளை குடிக்க வேண்டும்.
நீங்கள் எப்போதும் பசி எடுத்த பிறகு தான் எந்த உணவையும் சாப்பிட வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |