What Should Eat During Ramadan Fasting in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். பொதுவாக, ரமலான் நோன்பு தொடக்க காலம் முதல் முடிவு காலம் வரை இஸ்லாமியர்கள் பகல் வேளையில் உணவு அருந்தாமல் இருந்து நோன்பு கடைபிடிப்பார்கள். அதிகாலையில் உணவு எடுத்துக் கொண்டார்கள் என்றால் அன்றைய நாள் முழுவதும் வேறு எந்த விதமான உணவுகளையும் எடுத்து கொள்ள மாட்டார்கள். இதனால், இக்காலத்தில் பெரும்பாலனவர்களுக்கு உடலில் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
அதாவது, ஒழுங்கற்ற உணவு முறையால், உடலில் பல விதமான ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆகையால், ரமலான் நோன்பு தொடங்க உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எந்த விதமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இப்பதிவில் விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
ரம்ஜான் நோன்பு இருப்பது எப்படி?
What to Eat Before Fasting Ramadan in Tamil:
பழங்கள்:
காலை உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது பழங்களை அதிகமாக எடுத்து கொள்ளுங்கள். பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி, அத்திப்பழம் மற்றும் அவகோடா போன்ற பழங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது, அன்றைய நாள் முழுவதும் உடலை நீர்ச்சத்துடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள உதவுகிறது.
தானிய வகைகள்:
தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவை மெதுவாக செரிமானம் ஆகும் உணவு பொருட்கள் ஆகும். அதுமட்டுமில்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனவே, ஓட்ஸ், கோதுமை, பருப்பு வகைகள், ஆளி விதை போன்றவற்றை அதிகாலையில் நோன்பு ஆரம்பிக்கும் முன் உட்கொள்வது நல்லது.
காய்கறிகள்:
நோன்பு காலத்தில் அதிகமாக காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் அவசியம். காய்கறிகளில் அதிகம் நார்ச்சத்து உள்ளதால், அன்றைய நாள் முழுவதும் உடலை நீரோற்றமாக வைத்து கொள்ள உதவுகிறது. அதிலும், குறிப்பாக பட்டாணி, பீன்ஸ், கொண்டைக்கடலை போன்றவற்றை சேர்த்து கொள்வது நல்லது.
பேரிச்சை பழம்:
பேரிச்சை பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் சர்க்கரை போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால், தான் நோன்பு இருப்பவர்கள் மாலையில் நோம்பினை முடிக்கும்போது, பேரிச்சை பழம் சாப்பிட்டு முடிப்பார்கள். பேரிச்சை பழம் அதிகமாக சாப்பிடுவதன் மூலம் நோன்பு காலத்தில் உடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படும்.
ரமலான் நோன்பு பற்றிய சிறப்பு கட்டுரை..!
உலர் பழங்கள்:
பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை நோன்பு இருப்பவர்கள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கிமாக பாதாம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. பாதாமில் புரோட்டீன், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளது. ஆகையால், நோம்பு இருப்பவர்கள் பாதாம் அதிகமாக எடுத்து கொள்ளுங்கள்.
ஜூஸ் வகைகள்:
நோன்பு இருப்பவர்கள், அதிகாலையில் நோம்பு தொடங்குவதற்கு முன்பாக அதிகமான தண்ணீரை எடுத்து கொள்ள வேண்டும். முக்கியமாக, பழச்சாறுகளையும் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும். ஜூஸ் வகைகளில் இளநீர், தர்பூசணி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், அன்னாசி ஜூஸ், திராட்சை ஜூஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் உடல் நீரோட்டமாக இருக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |