இந்த உணவுகளுடன் அந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்..! அந்த உணவு எது தெரியுமா..?

Advertisement

Serthu Sapida Kudatha Unavu in Tamil

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான டேஸ்ட் இருக்கும்.  அப்படி இருக்கின்ற பட்சத்தில் ஒருவருக்கு பிடித்த உணவு தான் மற்றவர்களுக்கும் பிடிக்கும் என்று நிச்சயம் கிடையாது. அதேபோல் முக்கியமாக சொல்லப்போனால் சில உணவுகளுடன் சில உணவு பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் அவர்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

முக்கியமாக சொல்லப்போனால் நாம் சாப்பிட்டதால் தான் இதுபோன்ற பிரச்சனைகள் வருகிறது என்று கூட தெரியாமல் அதனை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அப்படி செய்வது தவறு. அவ்வளவு ஏன் வீட்டில் உள்ள பெரியவர்கள் இதுபோன்ற பொருட்களை சாப்பிடாத உடம்புக்கு நல்லது அல்ல என்று சொல்வது இன்றும் கூட அனைவரின் வீட்டிலும் நடந்து வருகிறது. ஆகவே அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Which Foods Should Not Be Eaten Together in Tamil:

Which Foods Should Not Be Eaten Together in Tamil

நாம் அனைவருமே விருந்து நடக்கும் விழாக்களில் கலந்திருப்போம் அல்லவா..! அப்படி நாம் கலந்துகொள்ளும் போது நம் பக்கத்தில் உள்ளவர்கள் பாயசத்தில் வாழைப்பழத்தில் பிசைந்து சாப்பிடுவார்கள். அதன் பின்பு தான் தயிர் சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிடுவது தவறு. முக்கியமாக தயிர் சாப்பிட்ட பின்பு வாழைப்பழம் சாப்பிடுவது தவறு. இதனால் உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

 which combination of food we should avoid in tamil

நம்மில் சிலர் கீரை உணவுகளை சாப்பிடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி சாப்பிட்ட பிறகு பால் முட்டை போன்றவற்றை சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்படும். அதாவது செரிமான கோளாறுகள் ஏற்படும்.

Which Foods Should Not Be Eaten Together in Tamil

சிலர் மீன் சாப்பிட்ட பிறகு மீனுடன் சில உணவு பொருட்களை சேர்த்து சாப்பிடுவார்கள். அதாவது பால், தயிர், மோர் சேர்த்து சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுவதன் மூலம் அஜீரண கோளாறுகள் ஏற்படும். தோல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கியமாக மீன் மட்டுமல்லாமல் பொதுவாக சைவ உணவுகளுடன் பால், தயிர் போன்ற பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

டீயுடன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து சாப்பிடக் கூடாதாம் உங்களுக்கு தெரியுமா

அதேபோல் சமைத்த உணவுகளுடன் சமைக்காத உணவு பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது. அதாவது உப்பு இல்லையென்றால் உடனே அந்த உணவுகளுடன் உப்பு சேர்த்து சாப்பிடுவது. அப்படி சாப்பிடுவதால் அதனாலும் உடலில் பிரச்சனைகள் ஏற்படும். எப்போதும் இல்லாமல் எப்போதாவது சாப்பிட்டால் நல்லது ஆகும்.

பாகற்காய் சாப்பிட்ட பிறகு மறந்தும் இதை மட்டும் சாப்பிடாதீங்க மீறி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement