உள்ளூர் பழங்கள் Vs வெளிநாட்டு பழங்கள் -எது பெஸ்ட்..?

Advertisement

உள்ளூர் பழங்கள் VS வெளிநாட்டு பழங்கள்

பருவத்திற்கு ஏற்ப உள்நாட்டு பழங்கள் (fruits benefits) வந்தாலும், வெளிநாட்டு பழங்களுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கின்றது என்று பழ வியாபாரிகள் பலர் கூறுகின்றனர். இருப்பினும் நாம் நாட்டில் விளையும் பழங்களில் அதிக சத்துக்கள் உள்ளதா அல்லது வெளிநாடுகளில் (foreign fruits) விளையும் பழங்களில் சத்துக்கள் அதிகம் உள்ளதா என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

சிம்லா, காஷ்மீர் என உள்நாட்டு ஆப்பிள் பழங்கள் (fruits benefits) இருந்தாலும், வாஷிங்டன் ஆப்பிளுக்கு கிராக்கி அதிகம். ஆஸ்திரேலியா மற்றும் கலிஃபோர்னியாவில் இருந்து வரும் திராட்சைப் பழம் சில்லறை வியாபாரிகளிடம் சுமார் ரூ.300க்கு கிடைக்கும்.

ரோஸ் செடி நல்ல வளர்வதற்கு சில டிப்ஸ்..!

மக்கள் அதிகம் விரும்பி வாங்குவதால், வெளிநாட்டு பழங்களின் (fruits benefits) வரவும் அதிகரித்து உள்ளது.

எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி ஆகும் ஆரஞ்சு பழங்கள் (foreign fruits) பழக்கடைகளில் பெரிய பெரிய பெட்டிகளில் அடிக்கி வைப்பதை நாம் அனைவரும் பார்க்க முடியும்.

ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதியாகியுள்ள கண்ணை கவரும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற பேரிச்சை பழங்கள் (fruits benefits) பழச்சந்தையின் தெருக்களில் உள்ள சிறிய கடைகளில் கூட குவியல் குவியலாக கிடைக்கின்றன.

இப்போது புதுவிதமாக பழ சந்தைகளில் இறக்குமதியாக்கும் வெளிநாட்டு பழங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்று பலரது எண்ணமாக உள்ளது. அதாவது உள்நாட்டில் இருக்கும் பழங்களை (fruits benefits) விட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பழங்களில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது என பலரது நினைப்பாக உள்ளது.

மாடித்தோட்டத்தில் விளையும் திராட்சை கொடி..!

உதாரணத்திற்கு:

நம் நாட்டில் விளையும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடும் என்றும், சப்போட்டா பழத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்றும் பலர் நினைத்து கொண்டு, மக்கள் வெளிநாட்டு பழங்களை வாங்குகின்றனர்.

சுவைக்காகச் சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால் நாம் வாழும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற பழங்களை உண்பது நம் உடலுக்கு நல்லது.

உள்நாட்டு பழமோ (native fruits) அல்லது வெளிநாட்டு பலமோ அவற்றில் எது ஆரோக்கியம் என்பதை தெரிந்து கொண்டு, உள்நாடு வெளிநாடு என்ற வித்தியாசம் பார்க்காமல் உட்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.

அதே போல் அதிக அளவில் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு பதப்படுத்தி வைக்கப்படும் பழங்களில் ஊட்டச்சத்து நாளுக்கு நாள் குறைந்துகொண்டேவரும் என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

உள்நாட்டு பழங்கள் (native fruits):

இரண்டு அல்லது மூன்று கிவி பழத்தில் (fruits benefits) கிடைக்க வேண்டிய வைட்டமின் சி ஒரு பெரிய நெல்லிக்கனியில் உள்ளது.

ஆஸ்திரேலியா ஆப்பிள் அல்லது வாஷிங்டன் ஆப்பிள் பழத்தில் கிடைக்கும் சத்தைக் காட்டிலும் நம் நாட்டில் விளையும் சப்போட்டாவில் நார்சத்து மற்றும் ஊட்டச்சத்து அதிகம்.

தோட்டம் பராமரிப்பிற்கான எளிய டிப்ஸ்..!

ஒரே விதமான சத்துகொண்ட உள்ளூர் (native fruits) மற்றும் வெளிநாட்டு பழங்கள் பட்டியல்:

வெளிநாட்டு பழம் (foreign fruits) உள்ளூர் பழம் (native fruits) சத்து
கிவி நெல்லிக்காய் வைட்டமின் சி
ஆஸ்திரேலியா திராட்சை உள்நாட்டு திராட்சை மற்றும் நாவல் பழம் சோடியம், மக்னீசியம்
டிராகன் ப்ரூட் சீத்தாபழம் சீத்தாபழம் வைட்டமின் பி
வாஷிங்டன் ஆப்பிள் சப்போட்டா நார்சத்து
ஸ்ட்ராபெரி உள்நாட்டு ப்ளம்ஸ்  பொட்டாசியம்

 

இன்றைய இளம்தலைமுறையினர்களுக்கு பலஉள்நாட்டு பழங்களின் சுவை மற்றும் அருமைகள் தெரியாமல் இருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது.

ப்ளுபெரி, ராஷ்பெரி, வெளிநாட்டு (foreign fruits) ஆரஞ்சு என இறக்குமதியாகும் பழங்களை விரும்பி வாங்குவோர் பலரும், மிகவும் எளிதாகக் கிடைக்கும் கலாக்காய், இளந்தைப் பழம், பனம்பழம், வில்வப்பழம் போன்ற பழங்களின் சுவைகளை அறியாமல் இருப்பது வருத்தமாக உள்ளது.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –>  Whatsapp Group Link.
Advertisement