கோடை காலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்கு எடுத்து கொள்ளும் ஜூஸ் வகைகள்..!

body heat reduce juice in tamil

              How to Reduce Body Heat in Tamil 

கோடை காலத்தில் சூரியனில் தாக்கம் அதிகரித்து உடலின் ஆற்றல் நிலையை குறைத்து விடும். அதிலும்  நமது  உடலானது  உஷ்ணம் அதிகரித்து பல விதமான நோய்கள் வருகின்றன. அதாவது வயிற்று போக்கு, வயிற்று வலி, அதிகமான வியர்வை, சிறுநீரகத்தில் பிரச்சனை மற்றும் சருமத்தில் ஏற்படும்  பல விதமான நோய் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். அதற்காக கோடை காலத்தில் சாப்பிட கூடிய ஜூஸ்களை குடிப்பதன் மூலம் நமது உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது. அந்த வகையில் இந்த பதிவை முழுமையாக பார்த்து உடல் சூடு குறைய  எந்தெந்த ஜூஸ்களை குடிக்கலாம் என்பதை பற்றி கீழே தெரிந்து கொள்வோம் வாங்க.

ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா..?

தர்பூசணி : 

உடல் சூடு குறைய ஜூஸ்

தர்பூசணி உடல் சூட்டை குறைப்பதற்கு மிகவும் உதவுகிறது. தர்பூசணியில் உள்ள சத்துக்கள் உடலில் ஏற்படும் சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்று வலியை குறைக்க உதவும். நம் முகத்தின் அழகை கூட்ட கூடிய பழமாக தர்பூசணி உள்ளது. அதிலும்  கோடை காலத்தில் விற்கக்கூடியது தர்பூசணி ஆகும். தர்பூசணி சாப்பிடுவதால் உடல் சூட்டை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

இளநீர்:

 body cooling juice in tamil

உடல் சூடு உள்ளவர்களுக்கு இளநீர் சிறந்த மருந்தாக இருக்கிறது. காலையில் இளநீர் குடித்து வருவதால் உடலை எப்பொழுதும் குளிச்சியாக வைத்து கொள்ள உதவுகிறது.

இளநீர் உடல் சூட்டை கட்டுப்படுத்தி மலச்சிக்கல் மற்றும் வயிற்று புண்களை குறைக்க உதவுகிறது. கோடை காலத்தில் தொடர்ச்சியாக இளநீர் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.

நுங்கு:

how to reduce body heat immediately at home in tamil

பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடியது நுங்கு. இதில் அதிகம் நீர்ச்சத்துகள் மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளது. கோடை காலத்தில் ஒரு சிலருக்கு எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. ஆனால் நுங்கு சாப்பிடுவதன் மூலம் தாகம் அடங்கி விடும்.

பப்பாளி ஜூஸ் தினமும் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

கொடம்புளி சாறு:

 

 உடல் சூடு குறைய ஜூஸ்

கோடை கால வெப்பத்தை சூட்டை தணிப்பதற்கு சத்தான பானமாக கொடம்புளி  சாறு உள்ளது. இது வயிற்று பிரச்சனையை சரி செய்வதோடு மட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. வைட்டமின் A, மற்றும் B இரும்பு, பொட்டாசியம் போன்ற தாதுச்சத்துக்கள் உள்ளன. இந்த சாற்றை குடிப்பதால் உடல் சூட்டை தணிப்பதற்கு பெரிதும் உதவுகிறது. இதை காலை உணவு மற்றும் மதிய உணவு சாப்பிடுவதற்கு முன் குடிக்கலாம்.

கரும்புச்சாறு:

 உடல் சூட்டை குறைக்க என்ன சாப்பிட வேண்டும்

கோடை காலத்தில் நமது உடலை நீர்ச்சத்துடன் வைத்து கொள்ள கரும்புச்சாறு பயனுள்ளதாக இருக்கிறது. இதில் கார்போஹைட்ரேட்  சத்துக்கள் உள்ளது. கரும்புச்சாறை குடிப்பதால் உடலின் சக்தியை பராமரிக்க உதவுகிறது. கருப்பு சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக உள்ளது.

விளாம்பழம் சாறு:

 How to reduce body heat in tamil

நமது உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை தருகிறது. விளாம்பழ சாறு குடிப்பதால் உடலின் பல்வேறு பிரச்சனையை குணப்படுத்தி விடும். விளாம் பழத்தில் நீர்ச் சத்து கொண்ட பழமாக உள்ளது. இதை அதிகாலையில் குடிப்பது நல்லது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil