முட்டைக்கு இணையான சத்துக்களை தரக்கூடிய காய்கறிகள் எதுவென்று உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

 Which Vegetables Are Equivalent to Egg Food in Tamil

நம் உடலின் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். அதாவது இது நம் உடலின் திசுக்களை கட்டமைக்கவும் சரிசெய்யவும் புரதம் மிகவும் முக்கியம். அதுமட்டுமில்லாமல் இரத்தம், தசைகள், எலும்புகள் போன்றவற்றின் வளர்ச்சிக்கு புரதம் மிகவும் இன்றியமையாதது ஆகும். எனவே நம் உடலிற்கு தேவையான புரதச்சத்து அசைவ உணவில் தான் கிடைக்கிறது என்று அனைவரும் நினைக்கிறோம். ஆனால் புரதச்சத்து அதிகம் உள்ள சில சைவ உணவுகளும் உள்ளன. அதாவது முட்டை சாப்பிடுவதால் நம் உடலிற்கு எந்த அளவு புரதச்சத்து கிடைக்கிறதோ அதே அளவிற்கு சில காய்கறிகளை உண்பதின் மூலமாகவும் கிடைக்கிறது. எனவே முட்டைக்கு இணையான புரோட்டீன் சத்துக்களை தரக்கூடிய காய்கறிகள் பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

வைட்டமின் டி அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள்

முட்டைக்கு நிகரான புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள்:

ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. மேலும், குறைந்த அளவில் கொழுப்பு மற்றும் குறைந்த அளவில் கலோரிகளை கொண்டுள்ள காய்கறி ஆகும். எனவே ப்ரோக்கோலி நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதுடன் நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளவும் உதவுகிறது. மேலும் இது புற்றுநோயை எதிர்த்து போராட கூடிய காய்கறியாகவும் உள்ளது.

பச்சை பட்டாணி:

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணியில் அதிக அளவில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் குறைந்த அளவில் கொழுப்பு சத்துக்களும் கொலஸ்ட்ராலும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பச்சை பட்டாணியில் மாங்கனீசு, தாமிரம், பாஸ்பரஸ், ஃபோலேட், துத்தநாகம், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது. மேலும் இது வயிற்று புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும் காய்கறியாகவும் உள்ளது.

இனிப்பு சோளம்:

 which food is equivalent to egg in tamil

ஸ்வீட் கானில் அதிக அளவில் புரதச்சத்தும், குறைந்த அளவில் கொழுப்பு சத்தும் நிறைந்துள்ளது. மேலும் இதில் தியாமின், வைட்டமின் சி, வைட்டமின் B6, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் அடங்கியுள்ளது. எனவே நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான 9 சதவீத அளவிலான புரதச்சத்து இனிப்பு சோளத்தை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கிறது.

கீரை வகைகள்:

கீரை வகைகள்

கீரையில் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் புரதம் நிறைந்த உணவுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது கீரைகள் தான். இதில் வைட்டமின் K, வைட்டமின் C மற்றும் வைட்டமின் A போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் கண் பார்வையை சீராக பராமரிக்கவும் உதவுகிறது.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள்

காலிஃபிளவர்:

 which food is equivalent to egg in tamil

காலிஃபிளவரில் அதிக அளவில் புரதச்சத்து நிறைந்துள்ளது. மேலும், காலிஃபிளவரில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின்கள் C மற்றும் K மற்றும் இரும்புச்சத்து, சினிக்ரின் போன்ற சத்துக்கள் உள்ளது.

கேல் கீரை (பரட்டை கீரை):

கேல் கீரை

பச்சைபட்டாணியை போலவே கேல் கீரையும் புரதச்சத்து நிறைந்த காய்கறியாகும். இதனை நீங்கள் வேகவைத்தோ அல்லது வதக்கியோ உட்கொள்ளலாம். இதில் ஒமேகா -3, ஒமேகா -6 போன்ற கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் C, A, K மற்றும் B6, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.

பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகள்..

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil
Advertisement