கால்சியம் குறைபாட்டை அதிகரிக்கும் வெள்ளை எள்..! Sesame Seeds Benefits In Tamil..!
White Sesame Seeds In Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கால்சியம் குறைபாட்டை அதிகரிக்க செய்யும் வெள்ளை எள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் அடங்கியுள்ளது என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். இப்போது உள்ள காலகட்டத்தில் சத்து குறைபாட்டால் உடலில் ஏராளமான விளைவுகள் ஏற்படுகிறது. குழந்தைகள் கீழே விழுவதால் எலும்பு முறிவுகள் அதிகமாக ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதன் காரணம் உடலில் சத்துக்கள் குறைபாட்டால் வருகிறது எனலாம். வயதானவர்களுக்கு எலும்பு, மூட்டு வலி வருவது இயல்பு. நம் உடல் பகுதியின் எலும்பு முறிவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க கால்சியம் அவசியம் தேவைப்படுகிறது. சரி வாங்க நண்பர்களே உடலுக்கு நன்மை தரக்கூடிய வெள்ளை எள் பற்றிய விவரங்களை படித்தறிவோம் வாங்க..!
எள்ளில் அடங்கியுள்ள சத்துக்கள்:
இந்த வெள்ளை எள்ளில் கால்சியம், ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின் டி, பி 1, பி 6 அதிகமாக நிறைந்துள்ளது. சர்க்கரை நோய் அதிகமாக உள்ளவர்கள் இதனை எடுத்துக்கொண்டால் உடலில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
கால்சியம் அதிகரிக்க எள் பொடி தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு பவுல் அளவிற்கு எள்ளை எடுத்துக்கொண்டு வாணலியில் நன்றாக வறுத்து கொள்ளவும். நன்றாக வறுத்து எடுத்துக்கொண்ட பிறகு சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.
அடுத்து மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும். இதனை அதிகமாக அரைத்து மாத கணக்கிலும் வைத்து கொள்ளலாம்.
இந்த எள் பொடியை காற்று புகாத வண்ணம் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து கொள்ளலாம்.
குறிப்பு:
நீங்கள் தினமும் இரவு படுக்கைக்கு முன்பு 6 அல்லது 7 பாதாமை நீரில் நன்றாக ஊறவைத்து கொள்ளவும். காலையில் எழுந்தவுடன் ஊறவைத்த பாதாமை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
பாதாம் எதனால் சாப்பிட வேண்டும் என்றால் பாலிற்கு இணையான கால்சியம் சத்துக்கள் பாதாமில் இருக்கிறது. நம் உடற்பகுதியான எலும்பு மற்றும் சதை பகுதிகளுக்கு நல்ல பலம் கொடுக்கின்றன.
பாதாம் மேல் உள்ள தோலினை நீக்கிவிட்டு உள் பகுதியான பருப்பை மட்டும் சாப்பிட வேண்டும். இதோடு ஒரு கிளாஸ் பால் குடித்தால் போதும்.
எள் பொடி சாப்பிடும் முறை:
தினமும் இரவு தூங்கும் முன் அல்லது மாலை நேரத்தில் 1ஸ்பூன் அளவிற்கு எள் பொடியினை 1 கிளாஸ் பாலில் கலந்து குடிக்கலாம். உடல் வலி அதிகமாக உள்ளவர்கள் 2 ஸ்பூன் கூட சேர்த்துக்கொள்ளலாம்.
சிலருக்கு பாலில் கலந்து குடிக்க பிடிக்காதவர்கள் வெறும் வாயில் பொடியினை சேர்த்து தண்ணீர் குடித்து கொள்ளலாம்.
இது போன்று செய்து வருவதால் கால்சியம் சத்துக்கள் அதிகரிப்பதோடு எலும்பு பலமாகிவிடும். அதோடு வலிகளும் குறைந்துவிடும்.
கவனிக்க வேண்டியவை:
இந்த எள் பொடியினை பிரசவ காலத்தில் இருக்கும் பெண்கள் மட்டும் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் நம் உடல் பகுதியில் வெப்பத்தினை அதிகரிக்க செய்யும் எள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |