Who Should Not Eat Chia Seeds in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சியா விதை யார் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. சியா விதை ஆனது சால்வியா ஹிஸ்பானிக மரத்திலிருந்து கிடைக்கக்கூடியது ஆகும். சியா விதைகளில் ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸ்டெண்ட் போன்ற சத்த்துகள் நிறைந்துள்ளது. ஆகையால், இதனை பலரும் இந்த வெயில் காலத்தில் அதிகமாக எடுத்துக்கொள்வார்கள். ஆனால், ஒரு சிலர் இந்த சியா விதைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சியா விதைகள் அனைவருக்கும் நன்மை அளித்தாலும் ஒரு சில பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆகையால், சியா விதையை யாரெல்லாம் சாப்பிட கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சியா விதை பற்றி உங்களுக்கு தெரியுமா..?
சியா விதையை இவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்:
அழற்சி உள்ளவர்கள் சியா விதையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இரைப்பை குடம் பிரச்சனைகள் உள்ளவர்கள் சியா விதையை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சியா விதை உட்கொள்ளும்போது ஒரு சிலருக்கு செரிமான பிரச்சனை வாயு அல்லது வீக்கம் போன்ற வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்கூடும். இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள் சியா விதைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நபர்கள் சியா விதைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சியாவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் மற்ற மருந்துகளுடனும் சேர்த்து எடுத்துக் கொள்ளும்போது எதிர்வினைகளை ஏற்படுத்தலாம்.
முக்கியமாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சியா விதைகளை எடுத்து கொள்ள கூடாது. கர்ப்ப காலத்தில் சியா விதைகள் நன்மை பயக்கும் என்றாலும், ஒரு சிலருக்கு இது தீங்கினை விளைவிக்கலாம். ஆகையால், மருத்துவரின் அனுமதியின்றி கர்ப்பிணிகள் சியா விதைகளை எடுத்துக்கொள்ள கூடாது.
அதேபோல், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சியா விதைகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
வயிறு உப்புசமாக இருந்தாலும், இந்த விதைகளை சாப்பிட வேண்டாம்.
தினமும் சியா விதைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சியா விதைகளை சாப்பிடும்போது அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடல் எடையை குறைக்க சியா விதை சிறந்ததா..? சப்ஜா விதை சிறந்ததா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |