நாவல்பழத்தை யார் சாப்பிட கூடாது தெரியுமா.?

Advertisement

Who Should Not Eat Jamun Fruit in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நாவல்பழம் யார் சாப்பிட கூடாது.? (Who Should Not Eat Jamun Fruit in Tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.  நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற  சத்துக்கள் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் Jamun Fruit என்று கூறுவார்கள். இப்பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

நாவல்பழம் மட்டுமின்றி, இதன் இலைகள், பட்டைகள், விதை போன்றவையும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. நாவல் பழம் நம் உடலிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இருந்தாலும் இதனை சில பேர் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அவர்கள் யார் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

Jamun Fruit என்பதன் தமிழ் பெயர் என்ன.? அதன் முழு விவரம் இதோ..!

நாவல்பழம் யார் சாப்பிட கூடாது.?

நாவல்பழத்தை யார் சாப்பிட கூடாது

  • இரத்த சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் இதனை அளவோடு உட்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாவல்பழம் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது. எனவே, நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் நாவற்பழத்தை அதிகம் சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை குறைக்கக்கூடும்.
  • மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தை அதிகமாக சாப்பிட கூடாது. நாவல் பழம் செரிமான பிரச்சனையை போகும் என்றாலும், இதனை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது செரிமான பிரச்சனை இன்னும் அதிகமாகலாம். மேலும், மலசிக்கல் பிரச்சனையையும் ஏற்படுத்தலாம்.
  • சரும பிரச்சனைகள் உள்ளவர்கள், நாவல் பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் போன்ற சரும பிரச்சனைகள் இருந்தால் நாவல்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • கர்ப்பிணி பெண்கள், நாவல் பழத்தை குறைவாக சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

How Many Jamun Fruit to Eat in a Day in Tamil:

ஒரு நாளைக்கு அதிகபட்சம் 100 கிராம் நாவல்பழம் மட்டுமே சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது அல்ல.

கர்ப்பிணி பெண்கள் நாவல் பழம் சாப்பிடலாமா..?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement