வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நுங்கு யார் சாப்பிட கூடாது தெரியுமா.?

Updated On: May 15, 2026 5:09 PM
Follow Us:
Who Should Not Eat Nungu in Tamil
---Advertisement---
Advertisement

Who Should Not Eat Nungu in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நுங்கு யார் சாப்பிட கூடாது என்றும் துங்கு சாப்பிட்டால் என்ன தீமைகள் என்பதையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். இந்த வெயில் காலத்தில் நுங்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. இந்த சீசனில் தான் நுங்கு அதிகமாக கிடைக்கும். இதனால் பலரும் நுங்கை வாங்கி அதிகமாக சாப்பிடுவார்கள். நுங்கு நம் உடலிற்கு பல நன்மைகளை அளித்தாலும் அதில் கொஞ்சம் தீமைகளும் இருக்க தான் செய்கிறது. அதுமட்டுமில்லாமல், நுங்கை யார் சாப்பிட கூடாது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் நுங்கு யார் சாப்பிட கூடாது என்பதையும் நுங்கின் தீமைகள் பற்றியும் இப்பதிவில் படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

நுங்கு யார் சாப்பிட கூடாது.?

நுங்கு யார் சாப்பிட கூடாது

நுங்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆனால், ஒரு சில உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் நுங்கினை சாப்பிட கூடாது. கிட்னி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் நுங்கு சாப்பிட கூடாது. ஏனென்றால், ஆரோக்கியமில்லாத கிட்னியால் நுங்கில் உள்ள மினரல்சை ஒழுங்காக வடிகட்ட முடியாது. ஆகையால், கிட்னி பிரச்சனை உள்ளவர்கள் நுங்கு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

நுங்கின் சதைப்பகுதியினை மட்டும் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலபேருக்கு இருக்கும். ஆனால், நுங்கினை அதன் தோல் பகுதியுடன் சேர்த்து தான் சாப்பிட வேண்டும். அப்போது தான் அதில் உள்ள முழுமையான சத்துக்கள் நம் உடலிற்கு கிடைக்கும். ஆனால், சில பேருக்கு நுங்கினை சதைப்பகுதியுடன் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை ஏற்படும். எனவே, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் நுங்கின் சதைப்பகுதியை மட்டுமே சாப்பிட வேண்டும். தோல் பகுதியுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நுங்கு கனவில் வந்தால் என்ன பலன் |

யார் நுங்கு சாப்பிடலாம்.?

இதய நோய் உள்ளவர்கள் நுங்கினை மருத்துவர் ஆலோனை செய்த அளவில் எடுத்து கொள்ளலாம். இதனால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

கர்ப்பிணி பெண்கள் நுங்கு சாப்பிடுவதன் மூலம் செரிமானம் நன்றாக நடைபெறும். அஜீரண கோளாறு, மலசிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்/தடுக்கும். எனவே, கர்ப்பிணி பெண்கள் நுங்கினை அளவோடு எடுத்து கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா.?

சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாம். நுங்கு ஆனது, உடலின் சர்க்கரையை அதிகப்படுத்தக்கூடிய என்சைம்களை கட்டுப்படுத்தக்கூடியது. இதனால், சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் அனுமதியும் அளவோடு சாப்பிட வேண்டும்.

நுங்கு தோலுடன் சாப்பிடலாமா:

நுங்கை தோலுடன் சாப்பிடலாம். நுங்கின் தோலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. நுங்கின் தோலுடன் சாப்பிடுவதால் வெப்ப நோய்கள் குறையும்.

கர்ப்பிணி பெண்கள் நுங்கு சாப்பிடலாமா:

கர்ப்பிணி பெண்கள் நுங்கு சாப்பிடலாம். நுங்கில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது  உடல் நலத்திற்கு நன்மை தரும். அதற்காக அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது.

நுங்கு தீமைகள்:

நுங்கு தீமைகள்

நுங்கு நம் உடலிற்கு அதிக நன்மைகளை அளித்தாலும், அதனை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அவை பின்வருமாறு:

  • செரிமான பிரச்சனை
  • வயிற்று போக்கு 
  • உடல் உபாதை 

நுங்கு அதிகமாக சாப்பிடும்போது, இதுபோன்ற வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆகையால், நுங்கை அளவோடு எடுத்து கொள்வது தான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஐஸ் ஆப்பிள் என்றால் என்ன.?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now