Who Should Not Eat Peanuts in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நிலக்கடலை யார் சாப்பிட கூடாது.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. ஏழைகளின் முந்திரி என்று அழைக்கப்படுவது வேர்க்கடலை அல்லது நிலக்கடலை. இதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து இருந்தாலும், ஒரு சிலருக்கு இந்த நிலக்கடலை ஆனது ஒற்றுக்கொள்ளாமல் போகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் நிலக்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருந்தாலும், நிலக்கடலை சாப்பிவது ஒரு சிலருக்கு தீங்கு விளைவிக்கும். அவர்கள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நிலக்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்
நிலக்கடலை யார் சாப்பிட கூடாது.?
ஒரு சிலருக்கு இந்த நிலக்கடலை ஆனது ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதாவது, நிலக்கடலையில் இருக்கக்கூடிய ஒருவிதமான புரோட்டீன் ஆனது உடலில் செல்லும் போது உடலில் அழற்சியை ஏற்படுத்தும். இது, மூன்று விதமான அழற்சி பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒன்று, உடலில் அங்கு அங்கு தடித்து அரிப்பு ஏற்படுகின்ற நிலை. இரண்டாவதாக, பருக்கள் உருவாவதற்கான வாய்ப்பு மற்றும் மூன்றாவதாக ஆசன வாயில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், நிலக்கடலை சாப்பிடும்போது எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
- ஒவ்வாமை பிரச்சனைகள் உள்ளவர்கள் வேர்கடலை சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால், அதிகப்படியான அழற்சி, வீக்கம், அரிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
- உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடக்கூடாது. வேர்க்கடலை இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால் இதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், நிலக்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நிலக்கடக்கலையில் அதிக அளவில் கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் இதனை சாப்பிடும்போது உடல் எடை இன்னும் அதிகமாகும்.
- மூட்டு வலி உள்ளவர்கள் நிலக்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வேர்க்கடலையில் லெக்டின் உள்ளது. இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கும்.
- செரிமானம் பிரச்சனைகள் உள்ளவர்கள் வேர்க்கடலையை சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால், வயிற்று வலி, வாயு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படும்.
ஒரு முறை வேர்க்கடலை சட்னி இப்படி ட்ரை செய்து பாருங்கள்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |