Who Should Not Eat Pomegranate in Tamil | மாதுளை யார் சாப்பிட கூடாது.?
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மாதுளை யார் சாப்பிட கூடாது.? (Who should not eat pomegranate in tamil) என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. மாதுளை பழத்தில் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது என்று தெரியும். அதனால், தான் உடல் பலவீனமாக உள்ளவர்களுக்கு மாதுளை பழம் வாங்கி கொடுப்பார்கள்.
அதிலும், குறிப்பாக உடலில் இரத்தம் இல்லாதவர்களுக்கு மாதுளை பழம் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். மாதுளையில் ஆன்டி ஆக்ஸிடன்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் இ போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இருந்தாலும் இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது. அதேபோன்று, இப்பழத்தை ஒருசிலர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவர்கள் யார் என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.
மாதுளை பழத்தினை சாப்பிடுவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
மாதுளை யார் சாப்பிட கூடாது.?
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாதுளை பழம் சாப்பிட கூடாது. ஏனென்றால் இதில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் இதனை உட்கொள்வதால் சர்க்கரையின் அளவு இன்னும் அதிகமாகிவிடும்.
- உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மாதுளை சாப்பிட கூடாது. ஏனென்றால், மாதுளை பழத்தில் கலோரிகள் அதிகமாக உள்ளது. இதனை எடுத்துக்கொள்ளும்போது உடல் எடை அதிகரிக்க கூடும். அதேபோல், உடல் எடையை குறைக்க நினைத்து டயட்டில் இருப்பவர்கள் மாதுளை எடுத்துக்கொள்ள கூடாது.
- இருமல் பிரச்சனை இருந்தால் மாதுளை யார் சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் இருமல் பிரச்சனை இன்னும் அதிகமாகும்.
- குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாதுளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- சருமத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மாதுளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி இருக்கும்போது மாதுளை சாப்பிடும்போது தோலில் சிகப்பு தடுப்புகள் உருவாகும்.
- அமிலத்தன்மை பிரச்சனைகள் உள்ளவர்கள் மாதுளை சாப்பிட கூடாது. மாதுளை குளிர்ச்சி என்பதால், உணவு சரியாக ஜீரணமாகாமல் போக வாய்ப்புள்ளது.
- மன அழுத்தம் இருந்து அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் மாதுளம்பழம் சாப்பிட கூடாது.
- போதை பொருள் பழக்கத்தில் இருந்து விடுப்பட சிகிச்சை பெற்று வருபவர்கள் மாதுளம் பழத்தை சாப்பிட கூடாது.
1 கப் தேங்காய் பால் போதும் மாதுளை செடியில் உள்ள பிஞ்சிகள் அனைத்தும் காய்களாக மாற..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |