ராகி (கேழ்வரகு) யார் சாப்பிடக்கூடாது தெரியுமா.?

Advertisement

Who Should Not Eat Ragi in Tamil | ராகி யார் சாப்பிடக்கூடாது 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ராகி யார் சாப்பிடக்கூடாது.? (Who Should Not Eat Ragi in Tamil) என்பதை விவரித்துள்ளோம். பொதுவாக, கேழ்வரகில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது என்று நம் அனைவருக்குமே தெரியும். இதனால், தான் கேழ்வரகில் கூழ், களி, தோசை என செய்து சாப்பிட்டு வருகிறோம். ஆனால், ஒரு சிலர் இந்த கேழ்வரகினை சாப்பிடக்கூடாது.

அரிசியை விட ராகியை கார்போஹைட்ரேட் அளவு குறைவாக உள்ளது. இதனால் ராகியை பெரும்பாலானவர்கள் டயட்டில் சேர்த்து கொள்வார்கள். ஆனால், ராகி அனைவருக்கும் ஏற்றது என்று சொல்ல முடியாது. எனவே, ராகியை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று பின்வருமாறு விவரித்துள்ளோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மொறு மொறு ராகி தோசை இப்படி செய்ங்க வேலை ரோம்ப ஈஸி

ராகி யார் சாப்பிடக்கூடாது.?

ராகி யார் சாப்பிடக்கூடாது

  • சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் ராகியை அதிகமாக சேர்த்துக்கொள்ள கூடாது. முடிந்தவரை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் 100 கிராம் ராகியில் 20 மிலி கிராம் ஆக்ஸாலிக் அமிலம் உள்ளது.  அதிக அளவில் ஆக்ஸாலிக் அமிலம் சேரும்போது அது சிறுநீரக கற்களை உருவாக்குகிறது. எனவே, சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் ராகி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
  • தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ராகி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் ராகியை குறைவாக சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • செரிமான பிரச்சனை உள்ளவர்கள் ராகி சாப்பிட கூடாது. ராகியை நார்ச்சத்து அதிகமாக உள்ளது. சிலருக்கு அதிக நார்ச்சத்து உள்ள உணவினை எடுத்துக்கொண்டால் வயிற்று பிரச்சனைகள் ஏற்படுத்தும். எனவே, வயிற்று போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் ராகி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • ஒரு சிலருக்கு ராகி சாப்பிட்டால் அழற்சி, அரிப்பு, தோல் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் ராகி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் ராகி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது எடையை குறைக்க கூடிய உணவு.
  • பசியின்மை பிரச்சனை உள்ளவர்கள் ராகியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • குளிர்காலத்தில் ராகியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ராகி (கேழ்வரகு) பயன்படுத்துபவரா நீங்கள்..! அப்போ இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement