திரிபலா சூரணம் யார் சாப்பிட கூடாது..?

Advertisement

Who Should Not Eat Triphala Suranam In Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திரிபலா சூரணம் யார் சாப்பிட கூடாது..? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுவது திரிபலா சூரணம். திரிபலா சூரணம் நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றும் கலந்த கலவையாகும். இதனை பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடம்புக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

திரிபலா சூரணத்தை மழைக்காலங்களில் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும். அதேபோல் குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். பனிக்காலங்களில் தேனுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இப்படி திரிபலா சூரண பொடியை சாப்பிடுவதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. அதேபோல், திரிபலா சூரணம் பொடியை சிலர் சாப்பிட கூடாது என்றும் கூறப்படுகிறது. எனவே, இப்பதிவின் வாயிலாக திரிபலா சூரணம் யார் சாப்பிட கூடாது.?என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

திரிபலா சூரணம் பயன்கள்

திரிபலா சூரணம் யார் சாப்பிட கூடாது.?

திரிபலா சூரணம் யார் சாப்பிட கூடாது

  • திரிபலா சூரணம் பொடியை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • முக்கியமாக பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் திரிபலா சூரண பொடியை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • அப்படி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சித்த மருத்துவரின் அனுமதி பெற்று கொடுக்க வேண்டும்.
  • வேறு ஏதேனும் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள் திரிபலா சூரணம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அல்லது சித்த மருத்துவரின் அனுமதி பெற்று சாப்பிட வேண்டும்.
  • திரிபலா சூரணம் பொடியை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் எதையும் அளவோடு எடுத்து கொள்ள வேண்டும்.

திரிபலா சூரணம் பொடியை வீட்டில் தயார் செய்வது எப்படி.?

முதலில் உங்களுக்கு தேவையான அளவில் நெல்லிக்காய் – 4 பங்கு, தான்றிக்காய் – 2 பங்கு, கடுக்காய் – 1 பங்கு அளவில் எடுத்துகொள்ள வேண்டும். நெல்லிக்காய் மற்றும் கடுக்காயின் விதையை நீக்கி இந்த மூன்று பொருட்களையும் நிழலில் நன்கு காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும் பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தாங்க திரிபலா சூரணம் பொடி தயார். இதனை தேவையான பொழுது 1 கிராம் அல்லது 2 கிராம் எடுத்து பயன்படுத்தலாம்.

திரிபலா சூரணம் பொடியை வீட்டில் தயார் முடியாதவர்கள் நாட்டு மருந்துகடைகளில் வாங்கி கொள்ளலாம்.

திரிபலா சூரணம் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement