Who Should Not Eat Walnuts in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வால்நட் யார் சாப்பிட கூடாது என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. நட்ஸ் வகைகளில் வால்நட் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளது. நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. இதனை நாம் சாப்பிடுவதால் உடலிற்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல், இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துகொள்ளும்போது ஒரு சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.
என்னதான் வால்நட்ஸ் அதிக நன்மைகளை அளித்தாலும் இது ஒரு சிலருக்கு ஒத்துப்போவதில்லை. அதாவது, வால்நட்டை இவர்கள் சாப்பிட கூடாது. அவர்கள் யார் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வால்நட் என்பதன் தமிழ் பெயர் என்ன.
வால்நட் யார் சாப்பிட கூடாது.?
- வயிற்றில் எரிச்சல், புண்கள் போன்ற வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் வால்நட்ஸ் சாப்பிட கூடாது. முடிந்த வரை வால்நட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடலில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உண்டாகிறது.
- நட்ஸ் ஒவ்வாமை உள்ளவர்கள் வால்நட் சாப்பிடக்கூடாது. அப்படி மீறி சாப்பிட்டால் சொறி அல்லது படை நோய் போன்ற தோல் நோய்களும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற சுவாச பிரச்சனைகளும் ஏற்படும்.
- 7 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு வால்நட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
- வால்நட் அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகமாகும் என்பதால், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் வால்நட் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். மீறி அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை இன்னும் அதிகமாகும்.
- முக்கியமாக, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் வால்நட் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். வாயு பிரச்சனைகள் இருப்பவர்கள் வால்நட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தினமும் 5 வால்நட் சாப்பிடுவதனால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |