Whooping Cough என்றால் என்ன..? முழு விவரம் இதோ..!

Advertisement

Whooping Cough Meaning in Tamil

வணக்கம் இப்பதிவில் Whooping Cough என்பதற்கான தமிழ் அர்த்தம் மற்றும் அதனை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க. Whooping Cough என்ற வார்த்தையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். ஆனால், அதனை பற்றி நம்மில் பலபேருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் தமிழில் சொன்னால் தான் தெரியும். ஆனால், காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு எல்லாமே மாறி வருகிறது. முக்கியமாக, எல்லா இடங்களிலும் ஆங்கிலம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகையால், நாம் அனைவருமே ஆங்கில வார்த்தைகளை கற்று கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் அனைத்து ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்த வகையில் இப்பதிவில் Whooping Cough என்பதற்கான அர்த்தத்தையும், அதனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்வோம் வாங்க.

Whooping Cough in Tamil:

Whooping Cough என்றால் தமிழில் கக்குவான் இருமல் ஆகும். இது தொடர் இருமல் அல்லது 100 நாள் இருமல் (100-day cough) என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் பயங்கரமான தொற்று நோயாகும். இது பெர்டெடெல்லா பெர்டுஸிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. Whooping Cough சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கக்கூடியது.

Whooping Cough in Tamil

ஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..

கக்குவான் இருமல் in English:

கக்குவான் இருமல் என்பதனை ஆங்கிலத்தில் Pertusis அல்லது Whooping Cough என்று அழைக்கப்படுகிறது.

கக்குவான் இருமல் வருவதற்கான காரணங்கள்:

கக்குவான் இருமல் பெர்டெடெல்லா பெர்டுஸிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு பாக்டீரியா நோய் தொற்று ஆகும். இவ்வாறு உருவாகும் பாக்டீரியா தொற்று ஆனது, நுரையீரலில் நுழைந்து வீக்கம், சுவாசப் பாதை குறிப்பாக மூச்சுக்குழாய், மூச்சுக்குழலில்  எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இதனால், பல்வேறு சுவாச பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்நோய் நோய் தொற்று உள்ளவர்களிடம் இருந்து தும்மல், இருமல் மூலம் மற்றவர்களுக்கு பரவக்கூடியது.

Whooping Cough Symptoms in Tamil

Whooping Cough Symptoms in Tamil:

கக்குவான் இருமலின் அறிகுறிகள் ஆறு முதல் 20 நாட்களுக்குள் தோன்றும். Whooping Cough ஏற்பட்டால் 3 மாதங்கள் வரை நீடிக்கும். கக்குவான் இருமல் அறிகுறிகள் பின்வருமாறு:

  • மூக்குச் சளி
  • காய்ச்சல்
  • லேசான இருமல்
  • மூக்கு ஒழுகுதல்
  • நீர்கசிகிற கண்கள்
  • விழி வெண்படல அழற்சி
  • தொண்டை புண்
  • தும்மல்
  • அதிக உடல் வெப்பம்
  • வாந்தி

Whooping Cough Treatment in Tamil:

  • பெர்டுஸிஸ் தடுப்பூசி போட வேண்டும்.
  • குழந்தைகளுக்கு தொண்டை அழற்சி நோய் (திஃப்தீரியா), இசிவு நோய், மற்றும் பெர்டுஸிஸ் தடுப்பூசி போடப்படுகிறது.
  • வாந்தி குறைய அல்லது தடுக்க குறைந்த அளவிலான உணவினை உட்கொள்ள வேண்டும்.
  • Nasal drops
  • Plenty of rest

வறட்டு இருமல் குணமாக மருந்து

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement