வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இளம் வயதிலேயே தோல் சுருங்குவதற்கு காரணம் என்ன.?

Updated On: April 18, 2023 7:16 AM
Follow Us:
wrinkles at young age reasons in tamil
---Advertisement---
Advertisement

தோல் சுருங்க காரணம்

அழகாக இருக்க வேண்டும் என்று பல கிரீம்களை முகத்தில் அப்ளை செய்கின்றோம். சில நபர்கள் இயற்கை முறையில் தங்களை அழகு படுத்தி கொள்கின்றனர். இருந்தாலும் பல நபர்களுக்கு இருக்க கூடிய தோல் சுருக்கம், அதிலும் வயதானால் தோல் சுருக்கம் ஏற்படுவது இயல்பானது. அதுவே இளம் வயதிலேயே தோல் சுருங்குகிறது. இளமையிலேயே தோல் சுருக்கம் ஏற்படுவதற்கு நாம் எடுத்து கொள்ளும் உணவு முறை, பழக்க வழக்கம் போன்றவை தான் இளமையிலே முதுமை தோற்றம் வருவதற்கு காரணமாக இருக்கிறது. இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம் வாங்க..

இளமையிலே முதுமை தோற்றம் ஏற்படுவதற்கு காரணம்:

புற ஊதா கதிர்கள்:

புற ஊதா கதிர்கள் தோலில் ஏற்படும்  சுருக்கங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இவை தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோல் சுருக்கம் அடைய செய்கின்றன. நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்று பார்த்தாலும் சரி வெயில் படாதவாறு உங்களின் உடல் முழுவதையும் மறைக்கும் ஆடைகளை பயன்படுத்துவது நல்லது.

முகத்தில் சுருக்கம் இல்லாமல் என்றும் இளமையாக இருக்க இதை ட்ரை பண்ணுங்க..!

புகை பிடிக்கும் பழக்கம்: 

புகை பிடிப்பது மற்றும் மது அருந்தும் பழக்கம் உடையவர்களுக்கு இரத்த ஓட்டத்தை குறைத்து விடும். இதனால் தோல்கள் பலமில்லாமல் தொங்க ஆரம்பித்து விடும். அதனால் உங்களின் இளமையை கடைபிடிப்பதற்கு புகை மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

மன அழுத்தம்:

 தோல் சுருங்க காரணம்

 நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது கொலாஜன் உற்பத்தியை குறைய செய்கிறது. எப்பொழுதாவது ஒரு முறை மன அழுத்தம் ஏற்பட்டால் பிரச்சனையில்லை, அதுவே அடிக்கடி மன அழுத்தம் ஏற்பட்டால் கார்டிசோல் என்ற மன அழுத்தம் ஹார்மோனின் அதிகப்படியான சருமத்தின் கொலாஜன் மற்றும் எலாஸ்டினைச் பாதிக்க செய்கிறது. அதனால் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மன அழுத்தத்திலுருந்து வெளியே வருவதற்கு முயற்ச்சி செய்ய வேண்டும்.  

வறண்ட சருமம் உள்ளவர்கள்: 

 தோல் சுருங்க காரணம்

வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தோல் சுருக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதனால் வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும். சருமம் ஈரப்பதமாக இருப்பதால் வறண்ட சருமம் ஏற்படாமலும், தோலில் சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கிறது. 

தூக்கமின்மை பிரச்சனை:

 தோல் சுருங்க காரணம்

நீங்கள் சரியாக தூங்காமல் இருந்தால் ph நிலை ஈரப்பதம் இவை இரண்டும் குறைந்து தோலின் ஆரோக்கியத்தை பாதிக்க செய்கிறது. மேலும் கொலாஜன் உற்பத்திக்கும் உதவி செய்கிறது. அதனால் சரியான நேரத்திற்கு தூங்குவது அவசியமானது.

என்றும் இளமையாக இருப்பதற்கும், முகம் பளபளப்புக்கும் இந்த ஒன்று போதும் ட்ரை பண்ணி பாருங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க…

அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவது:

 தோல் சுருங்க காரணம்

அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் போது நன்மைகளை தந்தாலும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது சருமத்தில் பல் பிரச்சனைகளை ஏற்படுத்தி கொலாஜன் உற்பத்தியை குறைய ஆரம்பித்து தோல் சுருக்கங்கள் ஏற்படும்.

சத்து குறைபாடு:

சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் சி,டி,பி, ஈ, கே போன்ற சத்துக்கள் உடைய உட்கொள்வது அவசியமானது. இந்த சத்துக்கள் குறைந்தாலும் தோலில் முகப்பரு, தோல் சுருக்கம், முகத்தில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now