வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தர்பூசணி யாரெல்லாம் சாப்பிட கூடாது

Updated On: April 18, 2024 1:14 PM
Follow Us:
Yarellam tharpoosani sapida kudathu
---Advertisement---
Advertisement

தர்பூசணி யாரெல்லாம் சாப்பிட கூடாது

இந்த வெயில் காலங்களில் வெளியில் சென்றாலே நுங்கு, தர்பூசணி, இளநீர் போன்றவை விற்கப்படும். இதனை பார்த்தாலே வாங்கி வந்து விடுவோம். ஏனென்றால் இந்த வெயிலின் தாக்கத்தினால் இந்த பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனால் வாங்கி வந்து சாப்பிடுவோம். ஆனால் சிலவகை பழங்கள் சியா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட கூடாது என்ற வரைமுறை இருக்கிறது. அதனை அறிந்து கொள்ளாமலே சாப்பிடுகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தர்பூசணி பழம் யாரெல்லாம் சாப்பிட கூடாது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

சிறுநீரக பிரச்சனை:

சிறுநீரகத்தில் கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. இந்த தர்பூசணியில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கீழ்வாதம் பிரச்சனை:

தர்பூசணியில் பியூரின்கள் இருக்கிறது, இவை கீழ்வாதத்தின் பிரச்சனையை அதிகப்படுத்தும். அதனால் கீழ்வாதம் பிரச்சனை உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோய்:

தர்பூசணி யாரெல்லாம் சாப்பிட கூடாது

சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் தர்பூசணியை அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. நீங்கள் சர்க்கரையின் அளவை பரிசோதித்து விட்டு மருத்துவரின் அறிவுரையின் படி தர்பூசணியை எடுத்து கொள்ள வேண்டும்.

தர்பூசணி சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்

வயிறு சம்மந்தப்ட்ட பிரச்சனை:

தர்பூசணி சாப்பிட்ட பிறகு சில பேருக்கு செரிமானம் ஆகுவதற்கு நேரம் எடுத்து கொள்ளும். அதனால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் தர்பூசணி எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

அலர்ஜி:

தர்பூசணி யாரெல்லாம் சாப்பிட கூடாது

தர்பூசணியை சாப்பிட பிறகு சில பேருக்கு அலர்ஜி பிரச்சனை ஏற்படும். அதாவது அரிப்பு, எரிசிகள், வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால் இந்த மாதிரி பிரச்சனை உள்ளவர்கள் தர்பூசணி எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சளி பிரச்சனை:

சளி மற்றும் இருமல் பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் தர்பூசணி எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தர்பூசணியில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால் உங்களின் பிரச்சனையை அதிகப்படுத்தும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள்:

தர்பூசணி யாரெல்லாம் சாப்பிட கூடாது

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தர்பூசணியை அளவோடு எடுத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள் அதிகமாக எடுத்து கொண்டால் உங்களின் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.

தர்பூசணி வாங்குவது எப்படி

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now