வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தினமும் யோகா செய்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள்..!

Updated On: April 21, 2023 8:08 AM
Follow Us:
Yoga Benefits in Tamil
---Advertisement---
Advertisement

Yoga Benefits in Tamil

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் யோகாசனம் செய்யும் பழக்கம் இருக்கும். யோகா என்பது நம் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும் ஒரு கலை ஆகும். நம் உடலில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து மன நிலையை அமைதியாக வைத்திருக்க செய்ய கூடிய பயிற்சியாகும். அதுமட்டுமில்லாமல் நம் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சியாக வைக்கவும் யோகா உதவுகிறது. எனவே  ஒருவர் தினமும் யோகா செய்வதன் மூலம் அவர் உடலில் என்னென்ன நன்மைகள் உண்டாகுகிறது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கருப்பை இறக்கம் வராமல் தடுக்க யோகாசனம்..!

தினமும் யோகா செய்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள்:

யோகா நன்மைகள்

மன அழுத்தத்தை குறைக்கும்:

மன அழுத்தத்தை குறைப்பதற்கு பெரும்பாலான மக்கள் யோகாசனத்தை செய்து வருகிறார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்பங்கள் உங்கள் மனதில் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் தினமும் யோகா செய்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

உடல் உஷ்ணத்தை குறைக்கும்:

உடல் உஷ்ணம்

உங்கள் உடலில் மற்றும் தலையில் உள்ள உஷ்ணத்தை சரியான அளவில் வைத்து கொள்ள யோகாசனம் மிகவும் உதவுகிறது. கோடை காலத்தில் உண்டாகும் உடல் உஷ்ணத்தை தடுப்பதற்கு தினமும் காலையில் யோகா செய்ய வேண்டும்.

மன பதட்டத்தை கட்டுப்படுகிறது:

மன பதட்டம்

உங்கள் மனதில் உள்ள ஏராளமான பதட்டத்தை குறைப்பதற்கு யோகா மிகவும் உதவுகிறது என்று ஆய்வில் கூறப்படுகிறது. எனவே ஒருவர் தினமும் யோகா செய்வதன் மூலம் மனதில் ஏற்படும் பதட்டத்தை குறைக்கலாம்.

ஒரு நாள் இந்த யோகாவை செய்தால் போதும்..! பெண்கள் நினைத்ததை போல அழகாக மாறிவிடுவார்கள்..!

இதயத்திற்கு நல்லது:

யோகா செய்வதன் மூலம் இதயத்திற்கு சரியான அளவில் இரத்த ஓட்டம் செல்கிறது. மேலும் இதயத்தில் உள்ள திசுக்களின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. எனவே இதயத்தில் பிரச்சனைகள் உள்ளவர்கள் தினமும் யோகா பயிற்சி செய்தால் அவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

தூக்கமின்மையை தீர்க்கிறது:

தூக்கமின்மை

இரவில் தூக்கம் வராதவர்கள் அல்லது இரவில் திடீரென்று முழிப்பு வருபவர்களுக்கு யோகா ஒரு சிறந்த தீர்வாகும். எனவே தூக்கம் வராதவர்கள் தினமும் காலையில் 30 நிமிடங்கள் யோகா பயிற்சி செய்தால் போதும் தூக்கமின்மையில் இருந்து விடுபடலாம்.

சுவாச பிரச்சனை நீங்கும்:

சுவாச பிரச்சனை

ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனை உள்ளவர்கள் தினமும் யோகா செய்வதன் மூலம் ஆஸ்துமா பிரச்சனையை குறைக்கலாம். மேலும் தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் தினம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்தால் மயக்கம் வராமல் தடுக்கலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉 Health tips tamil

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now