Yogurt in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆரோக்கிய பதிவில் Yogurt சாப்பிடுவதினால் கிடைக்கும் பல ஆரோக்கிய நன்மைகள் என்னவென்றுதான் தெரிந்து கொள்ளப்போகிறோம். Yogurt என்பது தயிர், மோர், வெண்ணெய், சீஸ்,பன்னீர், பால் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுவது தான் Yogurt ஆகும். இதில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்து உள்ளது. இவற்றை சாப்பிடுவது மட்டுமன்றி இவற்றை முகத்தின் அழகிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவற்றில் நிறைந்துள்ள சத்துக்கள் என்னவென்றும் இவற்றை சாப்பிடுவதினால் என்ன பிரச்சனைகள் தீர்வு அடையும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் |
யோகர்ட் நன்மைகள் | Yogurt Benefits inTamil
யோகர்ட்டில் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதாவது கால்சியம், வைட்டமின், புரதம், பொட்டாசியம், கலோரிகள், பாஸ்பரஸ், துத்தநாகம், ரிபோபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகமாகவே நிறைந்துள்ளது.
இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் யோகர்ட் சாப்பிடுவது மிகவும் நல்லது. யோகர்ட்டில் உள்ள பொட்டாசியமானது நாம் சாப்பிடும் பொழுது சோடியத்தை அழித்து உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையை சரிசெய்ய உதவியாக இருக்கிறது.
யோகார்டில் இருக்கும் புரோபயாடிக்குகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கிறது. அதோடுமட்டுமின்றி பல்வேறு வகையான நோய்கள் உடலில் வராமல் தடுக்கிறது. எனவே இதனை நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் சாப்பிடுவது நல்லது.
மூளை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு யோகர்ட்டை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடுவதினால் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இவை மனநிலைகளை சமாளிக்கவும், பதட்டம் போன்றவற்றை குறைக்கிறது.
யோகர்ட்டை உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வருவதினால் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் சரி செய்வதற்கு உதவியாக இருக்கிறது. அதேபோல் வயிற்று பிரச்சனை உள்ளவர்கள் யோகர்ட் சாப்பிடுவது மிகவும் நல்லது.
இந்த யோகர்ட்டில் உள்ள கால்சியம் உடலில் உள்ள எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கிறது. எனவே இதனை பெண்கள் அதிகமாக சாப்பிட்டு வருவதினால் உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருகிறது.
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த யோகார்ட்டை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடுவதால், இவை உடலில் உள்ள கலோரிகளை குறைப்பதற்கு அதிக நன்மை புரிகிறது. அதோடு உடலில் ஹார்மோன்களை அதிகரிக்கவும் பயனுள்ளதாக உள்ளது.
Skin Benefits of Yogurt in Tamil:
யோகர்ட்டை சாப்பிடுவது மட்டுமின்றி இவை சருமத்தை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதற்கு யோகர்ட், தேன், எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் போன்றவற்றை கலந்து முகத்தில் தினமும் பூசி வருவதால் ஈரப்பதத்துடன் இருப்பதற்கு உதவியாக இருக்கிறது.
தினமும் யோகர்ட்டை தடவி வருவதினால் முகத்தில் ஏற்படும் பருக்கள், வறண்ட சருமம், கருவளையம், கரும்புள்ளிகள், தோல் நோய்கள் போன்ற சரும பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் தினமும் இதை Face பேக்காக பயன்படுத்தி வரலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |