நோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் நிறைந்த உணவுகள் | Zinc Rich Foods in Tamil

ஜிங்க் பயன்கள் | Zinc அதிகம் உள்ள உணவுகள் | Zinc Rich Foods in Tamil

ஜின்க் அதிகம் உள்ள உணவுகள் – Zinc Rich Foods in Tamil:- நோய் தொற்றுகள் அதிகரித்துள்ள இந்த கால கட்டத்தில் உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஆரோக்கியம் மிகுந்த உணவுகளை மக்கள் இப்போதேல்லாம் அதிகளவு எடுத்துக்கொள்கின்றன. அந்த வகையில் நமது உடலின் பல விதமான இயக்கங்களுக்கு பயன்படும் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று தான் ஜிங்க். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி-யை போலவே ஜிங்க் (Zinc) என்று சொல்லப்படும் துத்தநாகம் சத்தும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய ஜிங்க் சத்து நாம் அன்றாட உணவுகளில் எடுத்துக்கொள்ளும் காய்கறிகள், பழங்கள், அசைவ உணவுகளில் அதிகளவு நிறைந்துள்ளது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்திக்கு ஜிங்க் சத்து  அவசியம் தேவையான ஒரு ஊட்டச்சத்தாகும். சரி இந்த பதிவில் ஜிங்க் நிறைந்த உணவுகள் என்ன இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

நாள் ஒன்று தேவைப்படும் ஜிங்க் சத்து:

ஒரு நாளில் பெண்களுக்கு 8 மிகி ஜிங்க் மற்றும் கர்ப்பிணிகள், ஆண்களுக்கு 11 மிகி ஜிங்க் தேவைப்படுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு 12 மிகி ஜிங்க் தேவைப்படுகிறது.

Zinc அதிகம் உள்ள உணவுகள்..!

ஜிங்க் சத்து அதிகமுள்ள காய்கறிகள்:

vegetables

ஜிங்க் நிறைந்த உணவுகள்: உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, ப்ரக்கோலி, காளான் மற்றும் பூண்டு போன்றவற்றில் கணிசமான அளவில் ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. நமது அன்றாட உணவுகளில் இத்தகைய காய்கறிகளை அதிகளவு சேர்த்து கொள்வதன் மூலம் துத்தநாகம் ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம்.

zinc உள்ள உணவுகள் – விதைகள்:-

Zinc-rich foods in tamil:- பெரும்பாலும் நாம் பயன்படுத்திய பிறகு தூக்கி எரியும் விதைகளில் கூட ஜிங்க் சத்து கணிசமான அளவில் நிறைந்துள்ளது. அதாவது சணல் விதைகள், பூசணி விதைகள், பரங்கி விதைகள், தர்பூசணி விதைகள் போன்றவற்றிலும் குறிப்பிட்ட அளவில் ஜிங்க் சத்துக்கள்  நிறைந்திருக்கிறது. ஆகவே இது போன்ற விதைகளை உட்கொள்வதன் மூலம் உடலில் ஜிங்க் சத்தை அதிகரிக்க முடியும்.

ஓட்ஸ்:

Zinc rich foods in tamil:- ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவு என்று சொல்லலாம். ஓட்ஸில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் துத்தநாகம், ஃபைபர், ஃபோலேட், வைட்டமின் பி 6 மற்றும் பீட்டா-குலுக்கன் ஆகியவை உள்ளன. குறிப்பாக அரை கப் ஓட்ஸில் 1.3 மி.கி துத்தநாகம் உள்ளது.

பருப்பு வகைகள்:

pulses

ஜிங்க் சத்து அதிகம் உள்ள உணவுகள் – பொதுவாக பருப்பு வகைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பருப்பு வகைகளில் கொழுப்பு, கலோரிகள் குறைவாகவும், புரதங்கள் மற்றும் ஃபைபர் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் பருப்புகள் கொண்டிருக்கின்றன. ஒரு கப் பயறு வகைகளில் கிட்டத்தட்ட 4.7 மி.கி துத்தநாகம் சத்து நிறைந்துள்ளது.

டார்க் சாக்லேட்:-

zinc foods in tamil – 100 கிராம் டார்க் சாக்லேட்டில் 3.3 மி.கி ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. இருப்பினும் டார்க் சாக்லேட்டில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகளவு நிறைந்துள்ளது. எனவே ஜிங்க் சத்துக்களை மட்டும் பெற விரும்புபவர்கள் இனிப்பு சுவை இல்லாத டார்க் சாக்லெட்டை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

எலும்பு பலம் பெற கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்