உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!!

குழந்தை சிவப்பாக

குழந்தை சிவப்பாக மாற டிப்ஸ் :-

ஒரு பெண் தாய் ஆகிறாள் என்றால் முதலில் அவள் நினைப்பது என்னவாக இருக்கும் என்றால் தன்னுடைய குழந்தை சிவப்பாகவும் நல்ல அழகாகவும் பிறக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

இந்த ஆசை அனைவருக்குமே நிறைவேறும் என்பது கண்டிப்பாக முடியாத காரியமாகும். இருந்தாலும் தன் குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்று கர்ப்பகாலத்தில் அதிகமாக குங்குமப்பூ சாப்பிடுவார்கள்.

குழந்தை பிறந்த பிறகு பார்த்தால் குழந்தையின் தோல் நிறம் கருப்பாக இருப்பதை பார்த்து கவலைப்படுவார்கள்.

இனி அவ்வாறு கவலை பட தேவையில்லை நீங்கள் மனது வைத்தால் கண்டிப்பாக உங்கள் குழந்தைக்கு சிவப்பு தோலை தரமுடியும்.

எப்படி என்றுதானே கேக்குறீங்க…

உங்களது குழந்தையின் தோல் நிறத்தை சிவப்பாக மாற்றுவதற்கு இந்த 10 எளிய முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி?

சரி வாங்க குழந்தை சிவப்பாக மாற (baby skin colour improvement tips) அப்பிடி என்ன 10 வழிமுறைகள் இருக்கிறது என்று இவற்றில் பார்ப்போம்.

குழந்தையின் நிறம் அதிகரிக்க டிப்ஸ்:-

குழந்தையின் நிறம் அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க போதும். உங்கள் குழந்தையின் நிறம் அதிகரிப்பதை நீங்களே சில நாட்களில் உணருவீர்கள்.

அதாவது ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பஞ்சியை பயன்டுத்தி குழந்தையின் சருமத்தில் அப்ளை செய்யுங்கள்.

பின்பு 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து பின்பு குழந்தையின் சருமத்தை வாஷ் செய்துவிடுங்கள். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வரலாம். குறிப்பாக பிறந்த குழந்தைகள் முதல், 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த டிப்ஸை பாலோ பண்ணலாம்.

5 வயது மேல் உள்ள குழந்தையாக இருந்தால் 2 அல்லது 3 துளிகள் எலுமிச்சை சாறை இந்த கலவையடன் கலந்து அப்ளை செய்யுங்கள்.

பச்சிளம் குழந்தை சிவப்பாக டிப்ஸ்:

பச்சிளம் குழந்தைகள் முதல் வளரும் குழந்தைகள் வரை இந்த டிப்ஸை பாலோ செய்தால். கண்டிப்பாக சிவப்பழகு பெறலாம். அதாவது ஒரு பவுலில் 1/4 பச்சை பயிர் எடுத்துக்கொள்ளுங்கள், அதனுடன் 4 முட்டையின் வெள்ளை கருவை உடைத்து ஊற்ற வேண்டும்.

பின்பு நன்றாக கலந்து ஒரு அகலமான தட்டில் இந்த பச்சை பயறை கொட்டி பரப்பி விடுங்கள். பின்பு 5 அல்லது 6 நாட்கள் நிழலில் காயவைக்க வேண்டும்.

இப்பொழுது இந்த பச்சை பயறை கட்டிகள் இல்லாதவாறு உடைத்து கொள்ளுவோம், பின்பு இதனுடன் 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் மற்றும் 50 கிராம் பூலாங்கிழங்கு இவைகளை மிக்ஷியல் சேர்த்து நன்றாக பவுடர் போல் அரைத்து கொள்ளுங்கள். இவ்வாறு அரைத்த கலவையை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி அடைத்து வைத்து கொள்ளுங்கள்.

பவுடரை பயன்படுத்தும் முறை: ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் அரைத்து வைத்துள்ள பவுடரை எடுத்து கொள்ளுங்கள். பின்பு அவற்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து வைத்து கொள்ளவும். குழந்தைக்கு சோப்பு போடு குளிப்பாட்டிய பிறகு, கலந்து வைத்துள்ள இந்த கலவையை குழந்தையின் சருமத்தில் தடவி இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள் பின்பு குளிப்பாடுங்கள். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர குழந்தையின் நிறம் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

குழந்தை சிவப்பாக மாற – ஆயில் மசாஜ்:

குழந்தைக்கு வாரத்தில் இருமுறை மிதமான சூட்டில் ஆயில் மசாஜ் செய்தால் உங்கள் குழந்தையின் தோலுக்கு சிவப்பு நிறத்தை தர மிகவும் உதவியாக இருக்கிறது.

ஆனால் உங்களது குழந்தையின் தோலானது உலர்ந்து போனால் அதாவது வறட்சியான தோல், கண்டிப்பாக குழந்தைக்கு தோலில் நிறமாற்றம்  ஏற்படும்.

குழந்தை சிவப்பாக மாற – மிதமான வெந்நீரில் குளியல்:

குழந்தையை தினமும் மிதமான சூட்டில் குளிக்கவைப்பதினால் குழந்தையின் உடல் வலி குறையும், அது மட்டுமின்றி குழந்தையின் தோலை (baby skin colour improvement tips) மென்னையாக வைத்துக்கொள்கிறது.

குழந்தை சிவப்பாக மாற – பேபி ஸ்கரப்:

குழந்தையின் முகம், கழுத்து மற்றும் உடல் இருக்கும் முடிகளை நீக்கும் முறையாகும்.

கொண்டைக்கடலை (கடலை மாவு), தண்ணீர், பால், ரோஜா எண்ணெய் சமமாக கலந்து அதை குழந்தைக்கு அடித்தளமாக ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு துடைக்கலாம்.

இந்த கலவையை ஸ்கரப்கள் கொண்டு தேய்க்கும் போது அனைத்து அசுத்தங்கள் மற்றும் குழந்தையின் தோலிலிருந்து தேவையற்ற முடி சுத்தம் செய்யப்படுகிறது.

இது இரத்த ஓட்டத்தையும் அதிகரித்து, உங்கள் பிள்ளையின் தோலில் (baby skin colour improvement tips) நிறத்தையும் அதிகரிக்க உதவுகிறது.

குழந்தை நிறம் அதிகரிக்க இந்த பேக் ஒன்றே போதும்..!

குழந்தை சிவப்பாக மாற – லேசான பேக் குழந்தையின் உடலுக்கு:

சந்தன தூள், குங்குமப்பூ மற்றும் பால் ஒரு பேஸ்ட் போல செய்து உங்கள் குழந்தையின் உடலில் பூசி 10 நிமிடங்கள் உலர விடவும். இது உங்கள் குழந்தையை இன்னும் அழகாக செய்யும். மேலும், தோல் நோய்க்கு எதிராக அவனை / அவளை பாதுகாக்க முடியும்.

குழந்தை சிவப்பாக மாற – மாய்ஸ்சரைசிங்:

குழந்தையின் உடல் நிறத்தை தக்கவைத்துக்கொள்ள ஒரு சிறந்த வழி எது என்றால் அது கண்டிப்பாக மாய்ஸ்சரைசிங் தான். எனவே குழந்தையின் உடலுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத எந்த பிராண்டுகளை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

இந்த முறை குழந்தையின் (baby skin colour improvement tips) நிறத்தை தக்கவைக்க உதவுகிறது.

அதிகாலை சூரிய ஒளி:

குழந்தையை காலை வெயிலில் சிறிது நேரம் வைத்திருந்தால் குழந்தைக்கு அதிக ஆற்றல் கிடைக்கும், எனவே குழந்தைக்கு சூரிய ஒளியால் அதிக ஆரோக்கியம் கிடைக்கிறது என்று அதிகநேரம் வெயிலில் வைத்திருக்கக்கூடாது. ஏன் என்றால் குழந்தையின் தோல்நிறத்தை (baby skin colour improvement tips) கருமையடைய வழிவகுக்கும்.

குழந்தை சிவப்பாக மாற செயற்கை முறையை தவிர்க்கவும்:

குழந்தைக்கு குளிக்க பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் சோப்பை இயற்கை முறையில் பயன்படுத்துவது மிகவும் நல்லதாகும்

அதுவும் பால் மற்றும் பால் பன்னீர் பயன்படுத்தலாம். நீங்கள் கிளிசரின் பார்கள் மற்றும் பால் கிரீம் நிறைந்த பொருள்களை குழந்தைக்கு பயன்படுத்தலாம்.

அவற்றை பின்பற்றமுடியவில்லை என்றால் சாதாரணமாக பயத்தமாவு, கடலைமாவை குழந்தையின் உடலுக்கு சோப்பாக பயன்படுத்தலாம்.

குழந்தைகளை பராமரிக்க உதவும் அடிப்படை டிப்ஸ் !!!

தண்ணீர்:

குழந்தைக்கு தினமும் தேவையான அளவு தண்ணீர் கொடுக்கவேண்டும், குழந்தைக்கு தேவையான அளவு தண்ணீர் கொடுக்காவிட்டால் குழந்தையின் உடலானது வறட்சி அடையும். இதன் காரணமாகக்கூட குழந்தையின் தோல் நிறம் பொலிவிழக்க நேரிடும்.

அதுமட்டுமின்றி குழந்தையின் உடலுக்கு தேவையற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

பழச்சாறு:

குழந்தைக்கு தினமும் ஒரு முறையாவது பழச்சாறு கொடுக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.

திராட்சை, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றில் ஏதாவது ஒரு பழத்தின் சாறினை தினமும் குழந்தைக்கு கொடுத்துவர குழந்தை சிவப்பாக மாற வழிவகுக்கும் அதுமட்டும் அல்ல குழந்தையின் தோலுக்கு அதிக ஆரோக்கியமாகும்.

பேபி துடைப்பான்:

குழந்தைக்கு ஏற்படும் தோல் தடிப்புகள் மற்றும் வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் பேபி துடைப்பான் வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்கவேண்டும்.

அதுவும் கிளிசரின் மற்றும் பால் கிரீம் நிறைந்த துடைப்பான்களை பயன்படுத்த வேண்டும்.

இது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மிகவும் உதவுகிறது.

குழந்தை வளர்க்க சிரமப்படுகிறீர்களா? – கவலை வேண்டாம்… இந்தாங்க சில குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்