உங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றி தெரிஞ்சிக்க இந்த சோதனையை செய்து பாருங்கள் !

குழந்தையின் எதிர்காலம்

குழந்தையின் செயல் திறனை வைத்தே உங்களது குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று அறிந்து கொள்ளமுடியும்.

இவற்றை அறிந்து கொள்ளவே 40 ஆண்டிற்கு முன் வெளிநாட்டில் ஸ்டான் ஃபோர்ட் பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி ஒன்றை நடத்தினர்.

இந்த ஆராய்ச்சி மிகவும் பிரசித்தி பெற்ற மார்ஷ்மெல்லோ டெஸ்டு “Marshmallow Test”, இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டவர்களை 40 வருடங்களாக தொடர்ந்து கவனித்து வந்ததில் பல விஷயங்களை அறிந்துள்ளார்கள்.

குழந்தையின் எதிர்காலம் பெற்றோர்கள் வளர்ப்பதில் தான் இருக்கிறது.

சரி வாருங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றி தெரிந்துகொள்ள இந்த சோதனையை செய்து பார்க்கலாம்.

மார்ஷ்மெல்லோ டெஸ்டு (“Marshmallow Test”):

மார்ஷ்மெல்லோ டெஸ்ட் ஆராச்சியின் போது, ஒரு அறையில் பலவகையான மிட்டாய்கள் வைத்து இருந்தார்கள்.

பிறகு அந்த அறைக்குள் 5-7 வயதுள்ள குழந்தைகளை அனுப்பி, உடனே ஒரு மிட்டாய் எடுத்து கொள்ளலாம் அல்லது 15 நிமிடம் காத்திருந்தால் 2 மிட்டாயாக எடுத்து கொள்ளலாம் என்று கூறினார்கள்.

அனைத்து குழந்தைகளும் காத்திருப்போம் என்று கூறினார்கள்.

குழந்தைகளிடமிருந்து கவனித்தது:

காத்திருந்த நேரத்தில் சில குழந்தைகள் உடனே மிட்டாயை வாயில் போட்டு கொண்டனர்.

சில குழந்தைகள் மிட்டாய் மீது இருக்கும் கவனத்தை குறைத்து கொண்டனர்.

இன்னும் சில குழந்தைகள் பாட்டு பாடியும், கால் கையை ஆட்டியும் தன்னை சமாதானம் படுத்தி 15 நிமிடத்தை கழித்தனர்.

காத்திருக்கும் குழந்தைகள் மிகவும் தெளிவான சிந்தனையில் வளர்ந்தனர். இவர்களது நுண்ணறிவு எண் சரியாக இருந்தது.

அதிக மதிப்பெண்களை பெற்றனர், படிப்பை முழுமையாகவும் முடித்தனர், உறவுமுறைகளும் நன்றாக இருந்தது.

இவர்களது செயல் திறனை “காக்நிடிவு கண்ட்ரோல்” “cognitive control” “அறிந்து புரிந்து செய்வது” என்போம்.

குழந்தை அறிந்து புரிந்து செய்வது:

ஒரு செயலை குழந்தை அறிந்து புரிந்து செய்கிறது என்றால் நிச்சயம் அந்த குழந்தை எதிர்காலத்தில் எடுத்த குறிக்கோளை அடைய முடியும்.

வாழ்க்கை பாதையில் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும், அப்போது துவண்டு போகாமல், செயல் திறனுக்கு ஏற்ப அமைத்து கொள்ள முடியும்.

பதட்டப்படுவது, சந்தோஷப்படுவது போன்ற தருணங்களில் நம்மை சமநிலை படுத்திக்கொள்வதே “காக்நிடிவு கண்ட்ரோல்” அதாவது அறிந்து புரிந்து செய்வது என்பதாகும்.

குழந்தைக்கு சொல்லித்தர வேண்டியவை:

வளரும் பருவத்திலேயே குழந்தைகளுக்கு நல்ல குணத்தை வளர்ப்பது மிகவும் நன்மையாகும்.

அதாவது என்ன செய்கிறோமோ அதில் மட்டுமே கவனம் இருக்கும். அதே போல் செய்கின்ற செயல் நன்றாக செய்வதால், விளைவும் நன்றாகவே அமையும்.

கடமைக்காக செய்ய வேண்டும் என்று நினைக்காமல் செய்வதை விரும்பி செய்ய வேண்டும்.

இது குறிப்பாக படித்து கொண்டிருந்தாலும் சரி அல்லது வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி, இருவருக்கும் பொருந்தும்.

குழந்தையின் மனதில் புகட்ட வேண்டியது:

சில குழந்தைகள் பெற்றோர்களின் சொல் பேச்சை கேட்கமாட்டார்கள், அந்த குழந்தைகளிடம் மிகவும் பொறுமையாக கலந்துரையாட வேண்டும்.

அதேபோல் குழந்தை எந்த வழியில் சென்றால் வாழ்க்கை நல்லதாக இருக்கும் என்பதை பெற்றோர்களும் வழி நடத்துவது மிகவும் நல்லது.

குழந்தை அவசரமாக எடுக்கும் எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அவற்றில் அறிந்து புரிந்து செய்யும் திறன் இருக்காது.

எனவே எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடனும், சிந்தித்தும் செயல்பட வேண்டும்.

குழந்தைகளிடம் பெற்றோர்கள் சரி, தவறு எது என்று சொல்லித்தர வேண்டும்.

மனதை அமைதி படுத்த:

மனதில் குழப்பங்கள் எழும் போது அதற்கான தீர்வினை தேட வேண்டும்.மனதை என்றும் அமைதியுடன் வைத்து கொள்ளவேண்டும்.

மனதின் அழுத்தத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.என்றும் மனதில் நற்சிந்தனைகளை நினைவூட்ட வேண்டும்.

குழந்தைகள் முடிவு எடுப்பதில் தைரியம் தேவை. அப்போதுதான் தெளிவான சிந்தனை எழும் , இதற்கு ஒரு சிறந்த வழிதான் அறிந்து புரிந்து செயல்படுவது.

உணர்ச்சிகளை புரிந்து கொண்டால் குழந்தையின் எதிர்காலம் மிகவும் நல்லதாக அமையும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE