குழந்தைகளிடமிருந்து கவனிக்க வேண்டியவை:
பெற்றோர்களின் பங்கு:
ஒரு குழந்தை பிறப்பது கடவுள் தந்த வரம் அவர்களை பெற்றோர்கள் ஆகிய தாங்கள் தான் கவனமாக பாதுகாக்க வேண்டும். குழந்தை எதிர்காலத்தில் நல்லவராக வாழ்வதும் அல்லது தீயவராவதும் பெற்றோர்களின் வளர்ப்பில்தான் இருக்கிறது.
அதே போல் குழந்தை நன்றாக படிப்பதற்கும் அல்லது படிப்பில் குறைந்த நாட்டம் இருப்பதற்கும் பெற்றோர்களே காரணமாகின்றனர்.
அதாவது கணவன் மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் வாழ்க்கை முறையில் குழந்தைகளின் கல்வி அறியும் தன்மை குறித்து தேவைப்படும் கவனத்தை செலுத்த முடிவதில்லை.
இந்த குறைபாடானது கல்வியில் துவங்கி, தொடர்ச்சியாக மனக்குறைப்பாடு, தாழ்வு மனப்பான்மை, மனசோர்வு, சக மாணவர்களை போல் இயல்பாக இருப்பதில்லை என பலவகையான பிரச்சனைகளுக்கு இழுத்து சென்றுவிடும்.
இந்த பிரச்சனைகளை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்ய முயற்சி செய்வது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும்.
குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சிகோங்க..!
ஆசிரியர்களின் பங்கு:
குழந்தைகளின் பிரச்சனைகளை சரிசெய்வதற்கு ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அதாவது சக மாணவர்களுடன் பழகும் தன்மை, ஒதுங்கும் மனப்பான்மை, கோபம், தகவல் பரிமாற்றம், புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம், ஒப்பிட்டு முடிவெடுக்கும் திறன் போன்றவற்றில் குழந்தையின் நிலை என்ன என்பதை ஆசிரியர்களால் மட்டுமே உணர முடியும்.
இது போன்ற பிரச்சனைகள் குழந்தையிடம் இருந்தால் கண்டிப்பாக அவர்களது பெற்றோர்களிடம் தெரிவிப்பது ஆசிரியர்களின் தலையாய கடமையாகும்.
டிஸ்பிராக்சியா:
ஒருங்கிணைப்பற்ற செல்கள், அதிக பயம், குறைந்த மொழி வளர்ச்சி, கல்வியில் போதுமான கவனமில்லாதிருப்பது, குழந்தை தூக்கத்தில் பிரச்சனை ஆகிய குறைப்பாடுகள் குழந்தைக்கு இருக்கிறது என்றால் அது டிஸ்பிராக்சியா.
ஒலி, ஒளி குறித்த குறைப்பாடுகள்:
புரிந்து கொள்ளும் திறன் அதாவது விஷூவல் மற்றும் ஆடியோவை ஒரு குழந்தை எப்படி புரிந்து கொள்கிறது என்பது தொடர்பான குறைபாடு இது. இதை ஆசிரியர்கள்தான் முதலில் அறிகிறார்கள்.
டிஸ்கால்குலியா:
குழந்தை கணிதத்தை புரிந்து கொள்வதில் உள்ள பிரச்சனை.
வரிசைப்படுத்துவது, பெருக்குவது, வகுப்பது, சூத்திரங்களை புரிந்து கொள்வதில் பிரச்சினைகள் இருந்தால் அது டிஸ்கால்குலியாவின் அறிகுறிகளாக இருக்கலாம்.
குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் ?
டிஸ்கிராபியா:
மனதில் நினைப்பதை எழுதுவதில் பிரச்சினைகள் இருந்தாலோ கையெழுத்து மிகவும் மோசமானதாக இருந்தாலோ அது டிஸ்கிராபியாவாக இருக்கலாம்.
டிஸ்லெக்சியா:
படிப்பது, எழுதுவது மற்றும் உச்சரிப்பில் பிரச்சினை இருந்தால் அது டிஸ்லெக்சியாவின் அறிகுறியாக இருக்கலாம். தயக்கமான பேச்சு, வலது மற்றும் இடது அறிவதில் குழப்பம், வார்த்தைகளை உச்சரிப்பதில் குழப்பம், ரைம்ஸ் உரைப்பதில் சிரமம், குழப்பமான கையெழுத்து போன்றவை இதன் அறிகுறிகள்.
இந்த குறைப்பாடுகளை தெரிந்துகொள்ள வேண்டுமா ?
குழந்தையின் பிரச்சனையை உணர குழந்தைகளுக்கான சிறந்த பள்ளிகள் உள்ளன. குழந்தையை அந்த பள்ளியில் சேர்க்க தயக்கமே எழவேண்டாம்.
குழந்தையை எல்.கே.ஜி. வகுப்புகளில் சேர்ப்பதற்கு முன் பிரீகேஜி வகுப்புகளில் சேர்ப்பது கூட ஒரு விதத்தில் பிரச்சினையை முதற்கட்டத்திலேயே அறிய இயலும்.
இந்த குறைபாடுகள் ஒரு நோயல்ல என்பதையும் சரியான கவனிப்பின் மூலமாகவும் நமது உடனடி நடிவடிக்கைகளின் மூலமாகவும் இவற்றை களைந்து குழந்தையை சரிசெய்ய இயலும் என்பதையும் பெற்றோர் உணர வேண்டும்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும்?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.