ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..!

குழந்தை உணவு

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள் ..!

குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். அதன்பிறகு குழந்தைக்கு திட உணவு கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இருப்பினும் குழந்தைக்கு திட உணவு கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக குழந்தைக்கு எந்த உணவு கொடுக்கிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

1 வயது குழந்தை உணவு வகைகள்..!

 

நமக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுகள் அனைத்தும், குழந்தைக்கும் ஆரோக்கியம் அளிக்கும் என்று நினைப்பது தவறான செயலாகும்.

எனவே குழந்தைக்கு எந்த உணவு ஆரோக்கியம் அளிக்குமோ அந்த உணவை மட்டும் குழந்தைக்கு உணவாக கொடுக்க வேண்டும்.

இவற்றில் ஒரு வயதுவரை குழந்தைக்கு என்னென்ன உணவுகளை கொடுக்கக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தையின் ஒரு வயதுவரை அந்த உணவுகள் கொடுக்காதீர்கள்.

குழந்தை வளர்ப்பு முறைகள் பற்றிய முக்கிய குறிப்புகள் !!!

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள் ..!

பசும்பால்:

ஒரு வயது குழந்தை உணவு முறையில் பசும்பால் மற்றும் சோயா பால் போன்றவற்றை குழந்தைக்கு கொடுக்க கூடாது.

ஏன் என்றால் குழந்தைக்கு இந்த பாலை கொடுப்பதன் மூலமாக குழந்தைக்கு செரிமானம் அடைவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள்.

மேலும் இந்த பாலில் இருக்கும் புரோட்டின் மற்றும் மினரல்கள் குழந்தையின் சிறுநீரகத்தை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.

இதை தவிர குழந்தைக்கு வயிற்று போக்கையும் ஏற்படுத்தும்.

எனவே குழந்தையின் ஒரு வயது வரை பசும்பால் மற்றும் சோயா பால் கொடுக்க கூடாது. இதற்கு பதிலாக தாய்ப்பால் கொடுக்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்:

ஒரு வயது குழந்தை உணவு முறையில் ஸ்ட்ராபெர்ரிகள், ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி ஆகியவற்றில் அதிகளவு புரோட்டின் உள்ளது. இவை குழந்தைக்கு எளிதில் செரிமானமாகாது.

திராட்சை மற்றும் ஆரஞ்ச் போன்ற பழங்களில் அதிகமாக அமில தன்மை உள்ளது. இது குழந்தைகளுக்கு தடிப்பு அல்லது வயிற்று உபாதைகளை கொடுக்கும்.

தேன்:

ஒரு வயது குழந்தை உணவு முறையில் குழந்தைகளுக்கு ஒரு வயது வரை இனிப்புகளை கொடுக்க கூடாது. குறிப்பாக தேன் கொடுக்க கூடாது.

தேன் என்பது பாக்டீரியாக்களின் ஆதாரமாக உள்ளது. குழந்தைக்கு தேன் மற்றும் திரவ இனிப்புகள் ஏற்றதல்ல.

எனவே குழந்தைக்கு இவற்றை கொடுத்தோம் என்றால் குழந்தைக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதேபோல் திரவ இனிப்புகள் மற்றும் மாப்பிள் சிரப் போன்றவையும் ஒரே மாதிரியான பிரச்சனையை தான் குழந்தைக்கு தருகின்றன.

இரண்டு மாத குழந்தைக்கு மலச்சிக்கலா அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

வேர்க்கடலை வெண்ணெய் (பினட் பட்டர்):

ஒரு வயது குழந்தை உணவு முறையில் நிலக்கடலையில் இருந்து பெறப்படும். இந்த பினட் பட்டரும் கூட குழந்தைகளுக்கு அலர்ஜியை உண்டாக்க கூடியதாக இருக்கிறது. எனவே இதை எல்லாம் நீங்கள் குழந்தை கொஞ்சம் வளர்ந்ததுக்கு பிறகு கொடுப்பது நல்லதாகும்.

சில வகையான காய்கறிகள்:

ஒரு வயது குழந்தை உணவு முறையில் கீரைகள், பீட்ரூட் போன்றவற்றில் லேக்டோஸ் அளவு அதிகமாக உள்ளது. இது ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான உணவாகும்.

இதில் இருக்கும் சத்துக்களை செரிக்கும் அளவுக்கு குழந்தைகளின் உடலில் ஆசிட் சுரப்பது இல்லை. எனவே நீங்கள் இது போன்ற காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

உப்பு:

ஒரு வயது குழந்தை உணவு முறையில் குழந்தையின் உணவில் ஒரு கல் உப்பு ஒரு நாளுக்கு போதுமானதாகும். குழந்தைக்கு தேவையான அளவு உப்பு தாய்ப்பாலிலேயே இருக்கின்றது. அதிகளவு  உப்பை குழந்தைக்கு கொடுத்து ஆபத்தை ஏற்படுத்திவிடாதீர்கள்.

நட்ஸ் வகைகள்:

ஒரு வயது குழந்தை உணவு முறையில் உணவுகள் பாதம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை குழந்தைக்கு மொத்தமாக கொடுக்க கூடாது. ஏன்னென்றால் இவை குழந்தைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.

மேலும் குழந்தைக்கு இவை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியவை.

எனவே குழந்தைக்கு எந்த ஒரு காரணத்திற்க்காகவும் இந்த நட்ஸ் வகைகளை ஒரு வயதுவரை கொடுக்கக்கூடாது.

சாக்லேட்:

ஒரு வயது குழந்தை உணவு முறையில் உணவுகள் எல்லா குழந்தைகளுக்கும் மிகமிக பிடித்த ஒன்று எதுவென்றால் அதுதான் சாக்லேட். இவை குழந்தை அதிகம் சாப்பிட்டால் சாக்லேட்டில் உள்ள காஃபின் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

பாப்கார்ன்:

ஒரு வயது குழந்தை உணவு முறையில்பாப்கார்ன் ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான தினியாகும் இருப்பினும் இது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே குழந்தைக்கு ஒரு வயது முடியும் வரை கண்டிப்பாக குழந்தைக்கு பாப்கார்ன் கொடுக்கக்கூடாது.

குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை ..!

முட்டை:

ஒரு வயது குழந்தை உணவு முறையில் முட்டையின் வெள்ளைக்கருவானது குழந்தைக்கு அலர்ஜுயை கொடுக்க கூடியதாக உள்ளது.

உங்களது குழந்தைக்கு முட்டை கொடுக்க வேண்டும் என்றால் முழுமையாக முட்டையின் வெள்ளைக் கருவை நீங்கிவிட்டு, மஞ்சள் கருவை மட்டும் சமைத்து கொடுக்கலாம்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.