குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யனுமா?

Baby Massage Benefits

குழந்தைக்கு ஆயில் மசாஜ் (Baby Massage Benefits)..!

குளிர்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம். குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு சில பிரட்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தை இந்த இயற்கை மாற்றங்களை சந்திக்க தயார் படுத்த வேண்டும்.

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். இதனால் குழந்தை நிம்மதியான தூக்கம் இல்லாமல் அழுவார்கள் மற்றும் செரிமானம் இன்மை போன்ற பிரட்சனைகள் ஏற்படும்.

எனவே குளிர்காலத்தில் குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் ஆயில் மசாஜ் (baby massage benefits) செய்யுங்கள்.

குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் ???

சரி குழந்தைக்கு ஆயில் மசாஜ் (baby massage benefits) செய்வதினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் இங்கு காண்போம்.

ஆயில் மசாஜ் (baby massage benefits) செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:

 • குழந்தையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்
 • குழந்தையின் தசை மற்றும் எலும்பு பிடிப்புகளை தளர்த்தும்.
 • செரிமானத்தை சீர் செய்யும்
 • குழந்தை நிம்மதியாக உறங்கும்.

ஆயில் மசாஜ் (Baby Massage Benefits) செய்யும் முறை:

 1. உங்களுக்கு விருப்பமான எந்த எண்ணெய் வேண்டும் என்றாலும் தேர்வு செய்து மிதமான சூட்டில் எடுத்துக் கொள்ளவும்.
 2. உங்கள் உள்ளங்கையில் சில துளி எண்ணெய் விட்டு உங்கள் இரு கைகளையும் தேயுங்கள், இதனால் குழந்தையின் உடலுக்கு வெப்பம் மிதமாக பரவும்.
 3. இப்போது குழந்தையின் உடலில் பொறுமையாக ஆயில் மசாஜ் செய்ய தொடங்கவும்.
 4. குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யும் போது அதிக அழுத்தம் தர வேண்டிய அவசியம் இல்லை, மிகவும் பொறுமையாக சில நேரங்களில் ஒரே பகுதியில் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.
 5. எண்ணெய் தடவிய சில நேரங்கள் கழித்து குழந்தையின் உடல் சில எண்ணெய்கள் உரிந்து கொள்ளும், சில எண்ணெய்கள் அப்படியே இருக்கும். எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் எண்ணெய்யை சரியாக தேர்ந்தெடுக்கவும்.
 6. உங்கள் குழந்தைக்கு எங்காவது தோல் தடிப்பு அல்லது புண் இருந்தால் அங்கு ஆயில் மசாஜ் செய்ய வேண்டாம். குறிப்பாக நீங்கள் தேர்வு செய்த எண்ணெய்யால் உங்கள் குழந்தைக்கு அலர்ஜி வராமல் இருக்க வேண்டும்.
 7. குழந்தை தூங்கும் போது குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்ய கூடாது. குழந்தையுடன் பேசி. சிரித்து. விளையாடிக் கொண்டு ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.

குழந்தை ஆயில் மசாஜ்

குழந்தைக்கு ஆயில் மசாஜ் மூலம் கிடைக்கும் நன்மைகள்:

1.பாதாம் எண்ணெய் (Baby Massage Benefits):

பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து உள்ளதால் குழந்தைக்கு குளிர்காலத்தில் சளி பிரட்சனை வராமல் பாதுக்காக்கிறது. மேலும் பாதாம் எண்ணெய்யின் மணம் குழந்தையை குஷியாக வைத்திருக்கும்.

2. கடுகு எண்ணெய்:

இந்த எண்ணெய் குழந்தையின் உடலை குளிர்காலத்தில் கதக்கதப்பாக வைத்திருக்கும். ஆனால் உணர்ச்சிகரமான (சென்சிடிவு) சர்மம் உள்ள குழந்தைக்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தினால் குழந்தைக்கு எரிச்சலை மூட்டும். ஆகையால் இந்த எண்ணெய்யை தவிர்த்து கொள்வது நல்லது.

3. ஆலிவு எண்ணெய் (Baby Massage Benefits):

ஆலிவு எண்ணெய் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். அதனால் பொதுவாக குழந்தைக்கு ஆயில் மசாஜ் என்றாலே ஆலிவு எண்ணெய் அதில் இடம் பிடித்து இருக்கும். உணர்ச்சிகரமான சர்மம் உள்ளவர்கள் கடுகு எண்ணையை இதில் கலந்து குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

4. டீ மர எண்ணெய் (Baby Massage Benefits):

டீ மர எண்ணெய்யால் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் குளிர்காலத்தில் குழந்தைக்கு எந்த ஒரு நோய்களும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

குழந்தைகளுக்கு வயிற்று வலி நீங்க..!

5. ஆமணக்கு எண்ணெய்:

இந்த எண்ணெய் பிசு பிசுப்பு தன்மை உடையது என்பதால், குழந்தையின் வறட்சி சருமத்தை சரி செய்யும். எனவே இந்த எண்ணெய்யை குழந்தையின் தலை முடி மற்றும் நகத்திலும் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

6 சூரியகாந்தி எண்ணெய் (Baby Massage Benefits):

சூரியகாந்தி எண்ணெய் எளிதாக குழந்தையின் உடல் உரிந்து கொள்கிறது. இவற்றில் வைட்டமின் ஈ சத்து உள்ளதால். குழந்தையின் சருமத்திற்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.

7 நல்லெண்ணெய் (Baby Massage Benefits):

இந்த எண்ணெய் மிகவும் மருத்துவக் குணம் வாய்ந்தது. இந்த எண்ணெய் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் குழந்தைக்கு இந்த எண்ணெய்யை மசாஜ் செய்வதால், குழந்தையின் ஆரோக்கியம் நிச்சயம் பாதுகாக்கப்படும்.

8. பசு நெய்:

பசு நெய்யில் வைட்டமின் ஈ, சி மற்றும் டி சத்து உள்ளது. எனவே நெய்யால் குழந்தைக்கு மசாஜ் செய்தல் இரத்த ஓட்டம் சீர் செய்து, குழந்தையின் உடலை கதக்கதப்பாக வைத்திருக்கும்.

9. தேங்காய் எண்ணெய் (Baby Massage Benefits):

சர்மம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் இந்த தேங்காய் எண்ணெய்யை, குழந்தைக்கு மசாஜ் செய்வதனால், உடல் எளிதாக எண்ணெய்யை உரிந்துக்கொள்கிறது. அதுமட்டுமின்றி நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது.

10. ஆயுர்வேத எண்ணெய்:

ஆயுர்வேத எண்ணெய்களால் குழந்தைக்கு மசாஜ் செய்வதினால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஊட்டச்சத்தை அளிக்கிறது மற்றும் சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ளும்.

குழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி இதோ..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.