குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள் ..!
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? இதற்கு அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. இத்தகைய மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியைஅதிகரிக்க பெரிதும் உதவும்.
சரி வாங்க குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன என்று இந்த பகுதில் படித்தறிவோம் வாங்க..!
குழந்தையின் ஞாபக மறதிக்கான காரணங்கள்:
மூளையின் வயது முதிர்ச்சியாலும், குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து இல்லாததாலும், மன அழுத்தம், சோர்வு மற்றும் முறையில்லாத உணவுகளை எடுத்துக்கொள்வது போன்றவை முக்கிய காரணமாகும்.
உணவு என்பது உடலின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மூளையின் நன்மைக்கும் தான். எனவே மூளையின் ஆரோக்கியத்திற்கான உணவு முறைகளை உங்கள் குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும்.
கர்ப்ப காலத்தில்:
குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க (how to improve memory power in tamil) கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக மீன் சாப்பிடுவதால் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்கப்படுகிறது. எனவே பிறக்கும் குழந்தை மிகவும் புத்தி கூர்மையுடன் பிறக்க வேண்டும் என்றால் கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக மீன் சாப்பிட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் என்ன மூலிகைகளை சாப்பிடகூடாது? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?
குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க உணவு முறைகள்:
நினைவாற்றலை அதிகரிக்க – பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகள்:
பாலால் செய்யப்பட்ட உணவுகளில் புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது.
இந்த உணவுகளை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் நன்கு இயங்குவதோடு, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் உடல் வளர்ச்சியை தருவதுடன், மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்கிறது.
நினைவாற்றலை அதிகரிக்க – முட்டை மற்றும் நட்ஸ்:
இதை குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பதன் மூலம் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு (how to improve memory power in tamil) மட்டுமின்றி, மூளையை களைப்படையாமல் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும்.
நினைவாற்றலை அதிகரிக்க – தானிய வகைகள்:
ஓட்ஸ் மற்றும் தானிய வகைகளில் அதிகளவு வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் உள்ளது என்பதால் மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக விளங்குகிறது. இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்தால் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலில் உள்ள எல்லா பாகங்களையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா? அப்போ இதை டிரை பண்ணுங்க !!!
நினைவாற்றலை அதிகரிக்க – க்ரீன் டீ:
க்ரீன் டீ அதிகம் குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் மூளையின் செல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது. இவற்றில் இருக்கும் ஃபாலிபீனால் என்னும் ஆன்டி-ஆக்ஸீடன்ட் ஞாபக சக்தியை அதிகரிக்க (how to improve memory power in tamil) செய்கிறது.
நினைவாற்றலை அதிகரிக்க – பெர்ரிப்பழம்:
பெர்ரிப்பழம் மூளையின் செல்களின் இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் ஃபோட்டோ கெமிக்கல், அல்சீமியர் என்னும் ஞாபக (how to improve memory power in tamil) மறதி நோயை தடுக்கும். அதிலும் சில பெர்ரிப் பழங்களான ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது.
நினைவாற்றலை அதிகரிக்க – பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள்:
பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் ஆகியவற்றை அதிகமாக சாப்பிட்டால் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க (how to improve memory power in tamil) இயலும். அதிலும் குறிப்பாக பசளிகீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவை ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
நினைவாற்றலை அதிகரிக்க – தேன்:
தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க இயலும்.
நினைவாற்றலை அதிகரிக்க – நட்ஸ்:
நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது. எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுவதோடு குழந்தையின் முழு உடலுக்கும் நல்லது.
நினைவாற்றலை அதிகரிக்க – தண்ணீர்:
மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர்தான் உள்ளது. எனவே உடலில் நீர் சத்து குறைந்தால் மூளை வறட்சி அடைந்து ஞாபக சக்தி குறைந்து விடும்.
எனவே உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டால், மூளை வறட்சி அடையாமல் சுறுசுறுப்பாக இருக்கும்.
இதனால் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க (how to improve memory power in tamil) இயலும் .
நினைவாற்றலை அதிகரிக்க – ரோஸ்மேரி :
ரோஸ்மேரி சாலட் மற்றும் டாப்பிங்கில் அலங்கரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. அவை மூளையின் இயக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ரோஸ்மேரியில் மூளையின் வளர்ச்சியை அதிகரிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன.
இந்த மூலிகை குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க (how to improve memory power in tamil) பெரிதும் உதவுகிறது.
குழந்தை வளர்க்க சிரமப்படுகிறீர்களா? – கவலை வேண்டாம்… இத செஞ்சு பாருங்க
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.