குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – பால் பற்களை எப்படி பராமரிக்க வேண்டும்?

குழந்தையின் பல் வளர்ச்சி ..!

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் (Baby care tips in tamil)- பற்கள் குழந்தைகளுக்கு முளைக்கும் போதெல்லாம் காய்ச்சல் வரும். பற்கள் முளைக்கும் போது, குழந்தைகள் கொஞ்சம் அதிதீவிரமாகவும் செயல்படுவார்கள். அவர்களை நாம் சரியாகப் புரிந்துகொண்டு கையாள வேண்டும். குழந்தைக்கு உண்டாகும் பற்கள் அதன் வளர்ச்சி போன்ற அனைத்தையும் தெளிவாக இப்பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிக்கவும் –>   குழந்தையை குளிப்பாட்டும் முறை ..!

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் (Baby care tips in tamil)

குழந்தையின் பல் வளர்ச்சி:

குழந்தைகள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கையிலே 6-8வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன.

கருவில் 14-வது வாரம் நிறைவடையும்போது, ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலுக்குள் தோன்றிவிடும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

சில குழந்தைகளுக்கு கடைசி கடைவாய்ப்பற்கள் முளைப்பதில்லை. இது சாதாரணமாகும். ஆனால், நடுத்தர வயதில் இந்தப் பற்கள் முளைக்கும்.

இருப்பினும் குழந்தைகளுக்கு கிருமித்தொற்று, டவுன் சின்ரோம், கிரவுசன் சின்ரோம் போன்ற நோய்களில் பற்கள் முளைப்பது தாமதமாகும்.

குழந்தைக்கு பல் வளரும் வயது:

தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத் தொடங்குகின்றன.

குழந்தையின் பல் வளர்ச்சி – அறிகுறிகள்:

  • வீங்கிய அல்லது சிவந்த ஈறுகள்.
  • திடமான பொருட்களை மெல்லுவதில் ஒரு ஆசை.
  • எச்சில் வடித்தல், முதற்பல் வெளியே தெரியத் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கலாம்.
  • பரபரப்பு, எரிச்சலடைதல், அல்லது கோபம்.
  • வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல்.
  • வாயை நரநரவென்று கடித்துக் கொண்டிருத்தல்.

குழந்தையின் பல் வளர்ச்சி உதவும் உணவுகள்…

பற்கள் முளைக்கும்போது அதன் ஈறுகளில் அசைவுகள் ஏற்படுவதால், குழந்தைகளுக்கு கோபம் மற்றும் எரிச்சல் உண்டாகும்.

அச்சமயத்தில் பெற்றோர் தங்களுடைய சுண்டு விரலைக் கொண்டு, குழந்தையின் ஈறுகளை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும்.

ஈறுகள் நன்கு அசைவு பெற, ரஸ்க், கேரட் போன்ற கடினமான உணவுகளை சாப்பிட கொடுக்கலாம்.

இவற்றைச் சாப்பிடுவதால் ஈறுகளின் அசைவு நன்றாக செயல்பட்டு, பற்கள் எளிதில் முளைக்கும்.

குளிர் நேரங்களில் குழந்தையை வெளியே எடுத்து சென்றால், குளிர் குழந்தையின் ஈறுகளில் படும்போது அவை மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

இதையும் படிக்கவும் –>குழந்தைக்கு சளி பிரச்சனை சரியாக..!

குழந்தையின் பல் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை?

குழந்தையின் பல் வளர்ச்சிக்கு கட்டாயம் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள்.

  • கால்சியம்
  • பாஸ்பரஸ்
  • விட்டமின்கள் ஏ,சி,டி
  • ஃப்ளூரைட்

இவற்றில் விட்டமின் ஏ குறைந்தால், பற்களின் எனாமல் உற்பத்தி குறைந்து பற்கள் வலுவிழக்கும்.

குழந்தையின் பல் வளர்ச்சி காலம்
6-8 மாதம் முதல் – 1வதுமுன் வாய்ப்பற்கள்
8-10 மாதம் – 2வதுமுன் வாய்ப்பற்கள்
12-15 மாதம் – 3 மற்றும் 4வதுமுன் வாய்ப்பற்கள்
16-18 மாதம் – 5 மற்றும் 6-ம்பின்கடை வாய்ப்பற்கள்
18-24 மாதங்கள் – 7 மற்றும் 8-ம்கோரைப்பற்கள்
20-30 மாதங்கள் – 9 மற்றும் 10-ம்பின் கடை வாய்ப்பற்கள் முளைக்கத் தொடங்குகின்றன.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் (Baby care tips in tamil)

குழந்தையின் பல் வளர்ச்சி பராமரிப்பு குறிப்புகள் :1

இந்த பால் பற்கள் குழந்தைக்கு முளைக்கும்போது, ஈறில் உறுத்தல் இருக்கும், இதன் காரணமாக குழந்தைக்கு கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் வாயில் போட்டு கடிக்கும். அந்த நேரத்தில் குழந்தைக்கு கேரட், ஆப்பிள் போன்றவற்றை கொரிக்க கொடுக்கலாம்.

குழந்தையின் பல் வளர்ச்சி பராமரிப்பு குறிப்புகள் :2

பல் முளைக்கும் நேரத்தில் குழந்தையின் ஈறுகள் சிவந்தும், வீங்கியும் காணப்படும். சில குழந்தைகளுக்கு ஈறுகளில் வலி ஏற்பட்டு வலியின் காரணமாக காய்ச்சல் கூட ஏற்படலாம். இது பொதுவான பிரச்சனையாக இருந்தாலும் குழந்தை நல மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது மிகவும் நல்லதாகும்.

குழந்தையின் பல் வளர்ச்சி பராமரிப்பு குறிப்புகள் :3

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு மெல்லிய மஸ்லின் அல்லது மென்மையான துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் பற்களை சுத்தம் செய்யலாம்.

குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகளவு இனிப்பு வகைகளை கொடுப்பதை தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது.

இதற்கு பதிலாக அதிகளவு காய்கறிகள், பழங்கள், கீரை போன்றவற்றை குழந்தைக்கு கொடுத்துப் பழக்கப்படுத்துவது, குழந்தையின் உடல் நலத்திற்கும் பற்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் நல்லது.

குழந்தையின் பல் வளர்ச்சி பராமரிப்பு குறிப்புகள் :4

குழந்தையின் டூத் பிரஷாக இருந்தாலும் சரி, பெரியவர்களின் டூத் பிரஷாக இருந்தாலும் சரி மூன்று மாதத்திற்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு முறையாவது, குழந்தைகளை பல் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

இவற்றில் பரிந்துரைக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் குழந்தையின் பற்களை பராமரிக்கவும்.

இதையும் படிக்கவும்–>பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –>Whatsapp Group Link.