குழந்தை தடுப்பூசி அட்டவணை..!
குழந்தையின் ஆரோக்கியம் என்பது, ஒரு தாயின் கருப்பையில் குழந்தை கருவாகும் காலத்தில் இருந்தே கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தடுப்பூசி (kulandhai thaduppusi) போடுவது பெற்றோர்களின் தலையாய கடமையாகும். எனவே குழந்தையின் நலம் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருந்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன? அவற்றை எந்ததெந்தக் காலக்கட்டத்தில் மருத்துவரின் ஆலோசனையுடன் குழந்தைகளுக்கு போட வேண்டும் என்பதை நாம் இவற்றில் காண்போம்.
குழந்தை தடுப்பூசி (kulandhai thaduppusi) பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..! |
குழந்தை தடுப்பூசி :-
நோய் எதிர்ப்பு என்பது நம் உடலில் தினமும் நிகழ்கின்ற ஒரு செயல்பாடு. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் உடலுக்குள் நுழையும் நோய் கிருமிகள் அல்லது உடலை சாராத ஏதேனும் பொருள் உடலுக்குள் நுழையும் போது, அவற்றை அழிக்கும் வேலையை செய்கிறது நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள். இயல்பாக நம் உடலில் இந்த செயல்பாடுகள் நடந்துகொண்டிருந்தாலும். சில நோய் தாக்குதலை தடுப்பதற்காக நோய் தடுப்பு மருந்துகள் நம் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. அவை தான் தடுப்பூசிகள்.
இவ்வாறு செலுத்தப்படும் நோய் தடுப்பானது நோய் கிருமி தொற்றில் இருந்து காக்கிறது. மேலும் இந்த தடுப்பூசியானது முதல் முதலில் பொரியம்மைக்குதான் அறிமுகம்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து பல்வேறு தடுப்பூசிகள், மருந்துகள் வந்துகொண்டே இருக்கிறது.
குழந்தை தடுப்பூசி போட்ட பிறகு எப்படி பராமரிக்க வேண்டும்..! |
குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கான காரணங்கள்:
ஒரு காலத்தில் தட்டம்மை, ரண் ஜன்னி, காச நோய், இளம்பிள்ளை வாதம், தொண்டை அழற்ஜி போன்ற காரணங்களில் ஒவ்வொரு குழந்தைகளும் உலகளவில் நிமிடத்திற்கு 10 குழந்தைகள் இறந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு பிறந்த உடனேயே இந்த தடுப்பூசிகள் போடப்படுகின்றனர். எனவே இந்த நோய்களினால் இழப்பு ஏற்படுவதில்லை என்ற அளவுக்கு மருத்துவம் முன்னேறிவிட்டது.
குழந்தையின் நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி. குழந்தைகள் ஊனமாகி உயிர் இழப்பு ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.
குழந்தை தடுப்பூசி கால அட்டவணை 2019:
இந்திய அரசு குழந்தை பிறந்ததும் முதலில் போட வேண்டிய தடுப்பூசி சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்திய குழந்தைகள் நல கூட்டமைப்பு குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இந்திய அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் உள்ள தடுப்பூசிகளுடன் சேர்த்து கூடுதலாக மேலும் சில தடுப்பூசி மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தை பிறந்தவுடன் என்னென்ன தடுப்பூசிகள் போடவேண்டும்?
குழந்தை தடுப்பூசி – பி.சி.ஜி தடுப்பூசி (கட்டாயம்)
பி.சி.ஜி தடுப்பூசி குழந்தைகளுக்கு காச நோய் வராமல் தடுப்பதற்காக போடப்படுகிறது. அதுவும் குழந்தையின் இடது கையில் தோல்பட்டையின் அருகில் போடப்படுகிறது.
இது நோயை முற்றிலும் தடுத்துவிடும் என்று சொல்ல முடியாது. குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து இந்த மருந்து செயல்படும்.
எச்சரிக்கை:
இந்த தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் சிறு வீக்கம் ஏற்படலாம். அந்த வீக்கம் உடைந்து புண்ணாகி லேசாக நீர்க்கசீவுகள் கூட ஏற்படலாம். அதற்காக கவலைக்கொள்ள வேண்டாம் சில நாட்களில் அந்த நீர்க்கசிவுகள் குணமாகி பின்பு அந்த இடத்தில் நிரந்தரமான தழும்பு ஒன்று உருவாகும்.
மேலும் புண் ஆறாமல் இருந்தால் அல்லது அதிகமான வீக்கம் இருந்தால் குழந்தைகள் நல மருந்துவரிடம் சென்று ஆலோசிக்கவும்.
குறிப்பாக எந்த ஒரு மருந்தையும் வீக்கத்தின் மீது போடக்கூடாது.
குழந்தைக்கு காலை வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய பானங்கள் !!! |
குழந்தை தடுப்பூசி – இளம்பிள்ளைவாதத்துக்கு ஓ.பி.வி சொட்டு மருந்து கட்டாயம்:
குழந்தை தடுப்பூசிகள் – போலியோ கிருமி குழந்தையின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மேலும் குழந்தையின் கால்களை செயல் இழக்க வைக்கும். இதனால் குழந்தைகளுக்கு நிரந்தர ஊனம் ஏற்படும்.
இதைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டமாக அரசாங்கமே இலவச மருந்தை அளிக்கின்றது.
குழந்தை பிறந்தவுடன் வாய் வழியாக ஓ.பி.வி சொட்டு மருந்து குழந்தைகளுக்கு அளிக்கப்டுகிறது.
இந்த போலியோ தடுப்பில் சொட்டு மருந்து மற்றும் ஊசி என இரு வகைகள் உள்ளது. ஆனால் நம் ஊரில் பொதுவாக போலியோ சொட்டு மருந்துதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
குழந்தை தடுப்பூசி – ஹெபடைடிஸ் (எச்.பி.வி) தடுப்பூசி (விருப்பத்திற்கு ஏற்ப)
குழந்தை தடுப்பூசிகள் – உலகளவில் இந்த நோய் பொதுவாக காணப்படும். இந்த நோய் தொற்று கல்லீரலைப் பாதிக்கின்றது. ஏதிர்காலத்தில் கல்லீரல் சுருக்கம் மற்றும் கல்லீரல் செயல் இழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும். எனவே குழந்தை பிறந்ததும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை போடுவது மிகவும் நல்லது.
ஆனால் அரசு வெளியிட்டுள்ள தடுப்பூசி அட்டவணையில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி பரிந்துரைக்கப்படவில்லை.
ஆனால் குழந்தைகள் நல மருந்துவர்கள் குழந்தை பிறந்ததும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போடுவது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தை பிறந்த ஆறு வாரங்களுக்கு பிறகு:
டி.பி.டி தடுப்பூசி (கட்டாயம்):
குழந்தை தடுப்பூசிகள் – இந்த தடுப்பூசி தொண்டை அடைப்பான், காக்குவான் இருமல் மற்றும் ரண் ஜன்னி ஆகிய மூன்று நோய் தொற்றுகளை குணப்படுத்தும் தன்மைவாய்ந்தது.
எச்சரிக்கை:
இந்த தப்பூசி போட்டதும் சில மணி நேரத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும். அது சாதாரண காய்ச்சல்தான் பயப்பட தோவையில்லை.
தொடர்ந்து குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் உடனே குழந்தை நல மருந்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
ரோட்டா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ்:
குழந்தை தடுப்பூசிகள் (kulandhai thaduppusi) – இந்த நோய் குழந்தைகளுக்கு வயிற்று போக்கை உண்டாக்கி குழந்தையின் உயிரை பறிக்கும் கொடிய நோய் ஆகும்.
இது ஆண் குழந்தையைவிட அதிகமாக பெண் குழந்தையை தான் பாதிக்கின்றது.
இந்த நோயை குணப்படுத்த எந்த ஒரு மருந்துகளும் இல்லை. ஆனால் தடுப்பூசி மூலம் இந்த நோயை குணப்படுத்தலாம்.
எச்.ஐ.பி ஹீமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி தடுப்பூசி:
குழந்தை தடுப்பூசிகள் (kulandhai thaduppusi) – இந்த நோய் தொற்று ஏற்பட்டால் குழந்தைக்கு மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தை சுற்றியுள்ள சவ்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதன் காரணமாகவே இந்த தடுப்பூசி (kulandhai thaduppusi) போடப்படுகிறது.
இந்த ஊசி போடப்பட்ட இடத்தில் சிவந்து அல்லது வீக்கம் ஏற்பட்டால் கவலைப்பட தேவையில்லை.
பென்டாவேலன்ட் தடுப்பூசி:
குழந்தை தடுப்பூசிகள் (kulandhai thaduppusi) – இந்த பென்டாவேலன்ட் தடுப்பூசி பொதுவாக 5 நோய் தொற்றுகளை தடுக்கும் தன்மைவாய்ந்தது.
பென்டாவேலன்ட் தடுப்பூசி போடுவதன் காரணமாக பி.சி.ஜி, ஓ.பி.வி, டி.பி.டி, தட்டம்மை மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய் தொற்றுகளை ஒரே தடுப்பூசி மூலம் குணப்படுத்த முடிகிறது.
மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் காச நோய், தொண்டை அடைப்பான், காக்குவான் இருமல், ரண ஜன்னி, இளம்பிள்ளைவாதம், மஞ்சள் காமாலை மற்றும் தட்டம்மை போன்ற உயிர்கொல்லி நோய்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
குழந்தை பிறந்த 10வது வாரம் போட வேண்டிய தடுப்பூசிகள்:
குழந்தை தடுப்பூசிகள் (kulandhai thaduppusi) – முத்தடுப்பு ஊசி, போலியோ, எச்.ஐ.பி, ரோட்டா வைரஸ் மற்றும் பி.சி.வி இரண்டாவது டோஸ் ஆகிய தடுப்பூசிகள் குழந்தை பிறந்த 10வது வாரத்தில் போட வேண்டும்.
இவற்றில் முத்தடுப்பு மற்றும் போலியோவை தவிர மற்ற மருந்துகள் விருப்பத்திற்கு ஏற்ப பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தை பிறந்த 14வது வாரம் (மூன்றரை மாதம்):
குழந்தை தடுப்பூசி (kulandhai thaduppusi) இந்தக் காலக்கட்டத்தில் கட்டாயமாக முத்தடுப்பு ஊசி மற்றும் போலியோ தடுப்பூசி போடவேண்டும்.
இதை தவிர ஹெபடைடிஸ் பி, எச்.ஐ.பி, ரோட்டா வைரஸ், பி.சி.வி மூன்றாவது டோஸ் போன்றவைகளும் போடவேண்டும்.
ஆறு மாதங்களுக்கு பிறகு:
குழந்தை தடுப்பூசி (kulandhai thaduppusi) – வாய்வழி போலியோ சொட்டு மருந்து மற்றும் ஹெபடைடிஸ் பி 3-வது டோஸ் இந்த மாதத்தில் கொடுக்க வேண்டும்.
இன்ஃபுளுவென்சா நோய் தொற்றுக்கான தடுப்பூசி மருந்து இந்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.
அதன் பிறகு ஆண்டுக்கு ஒரு முறை இன்ஃபுளுவென்சா தடுப்பூசி மருந்து குழந்தைகளுக்கு போடவேண்டும்.
9-வது மாதம்:
போலியோ மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற தடுப்பூசி மருந்துகளை குழந்தைகளுக்கு போட வேண்டும்.
தட்டம்மைத் தடுப்பூசி:
இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு ஒன்பதாவது மாத்தில் போட வேண்டும்.
இந்த தடுப்பூசி (kulandhai thaduppusi) மருந்தை அனைத்து அரசு மருந்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனையிலும் போட்டுக்கொள்ளலாம்.
9-வது மாத்தில் குழந்தைகளுக்கு போடாவிட்டால். ஒரு வயதில் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.
மேலும் 5 அல்லது 12 வயதிலும் கூட இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்று குழந்தைகள் நல மருந்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஒரு வயதுக்கு பிறகு – குழந்தை தடுப்பூசி:
இந்த காலக்கட்டத்தில் ஹெபடைடிஸ் பி வைரஸுக்கான தடுப்புசி (kulandhai thaduppusi) முதல் டோஸ் அளிக்கப்பட வேண்டும். இது விருப்பத்திற்கு உட்பட்டது.
காலரா தடுப்பூசி:
இந்த தடுப்பூசி ஒரு வயது முடிவடைந்த குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
காலரா என்பது ‘விப்ரியோ காலரே’ என்ற கிருமிகள் மூலம் ஏற்படுகிறது.
இந்த நோய் குழந்தைக்கு வயிற்றுபோக்கை ஏற்படுத்தி உடலில் நீரை வெளியேற்றுகிறது. இதனால் உயிர் இழப்புக்கூட நேரலாம்.
எச்சரிக்கை:
குழந்தை வாந்தி எடுத்தால் தாய் பால் மற்றும் இளநீர் போன்றவற்றை முக்கியமாக கொடுக்க வேண்டும்.
குழந்தை தடுப்பூசி – 15-வது மாதம்:
இந்த காலக்கட்டத்தில் எம்.எம்.ஆர் தடுப்பூசி முதல் டோஸ், வேரிசெல்லா தடுப்பூசி, பி.சி.வி, பூஸ்டர் தடுப்பூசி போன்றவைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
16 முதல் 18வது மாதங்களில் – குழந்தை தடுப்பூசி :
இந்த காலக்கட்டத்தில் டி.டி.பி, ஐ.பி.வி, எச்.ஐ.பி, முதலாவது பூஸ்டர் போன்ற தடுப்பூசிகள் போட வேண்டும்.
18-வது மாதங்களில் – குழந்தை தடுப்பூசி :
ஹெபடைடிஸ் பி இரண்டாவது தவணை தடுப்பூசியை விருப்பத்திற்கு ஏற்ப பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தை தடுப்பூசி – டைஃபாய்டு காய்ச்சல் தடுப்பூசி:
இந்த நோய் சுகாதார சீர்கேடு காரணமாக இந்த நோய் உருவாகின்றது. எனவே இந்த தடுப்பூசியை குழந்தைக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை போட வேண்டும் என்று குழந்தைகள் நல மருந்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குழந்தை தடுப்பூசி – நான்கரை முதல் ஐந்து வயது வரை:
இந்த காலக்கட்டத்தில் டி.டி.பி 2-வது பூஸ்டர், ஓ.பி.வி மூன்றாவது தவணை, எம்.எம்.ஆர் மற்றும் வேரிசெல்லா தடுப்பூசிகள் 2-வது தவணை போன்ற தடுப்பூசிகள் போட வேண்டும்.
குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – பால் பற்களை எப்படி பராமரிக்க வேண்டும்? |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |