குழந்தைக்கு மருந்து கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை !!!

Advertisement

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை !!!

குழந்தைக்கு மருந்து கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். சில பெற்றோர்களின் அலட்சியத்தால் குழந்தைகளுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குழந்தைக்கு மருந்து கொடுக்கும்போது எவ்வாறெல்லாம் கவனிக்க வேண்டும் என்று இவற்றில் காண்போம்.

பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி?

Baby medicine tips 1:

மருந்து சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சில பெற்றோர்கள் குழந்தை சாப்பிடும் உணவில் மருந்து கலந்து கொடுப்பது வழக்கமாக உள்ளது. இவ்வாறு கொடுப்பது தவறாகும்.

எனவே குழந்தை நல மருத்துவரிடம் சென்று ஆலோசித்த பிறகு உணவில் குழந்தைக்கு மருந்து கலந்து கொடுப்பது நல்லதாகும்.

அதுவும் முன்கூட்டியே உணவில் மருந்து கலந்து வைக்காமல் சாப்பிட கொடுக்கும் போது மருந்தை கலப்பது மிகவும் நல்லதாகும்.

Baby medicine tips 2:

உங்கள் குழந்தைக்கு மருத்துவர் பத்து நாட்கள் கொடுக்கச் சொல்லி ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.

குழந்தைகளின் உடல் நலம் தேறுவது தெரிந்ததும் ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே மருந்துகளை நிறுத்தக் கூடாது. இதனால் அரை குறையாகத் தேறிய குழந்தையின் உடல் நிலை இன்னும் மோசமாகலாம்.

Baby medicine tips 3:

பொதுவாக சாதாரணமாக தும்மல், இருமல் போன்ற காரணத்திற்காக குழந்தைக்கு அடிக்கடி மருந்து கொடுத்து வற்புறுத்த கூடாது.

நோய் அதிகரித்து விடுமோ என்று, பயத்தில் குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தால் பக்க விளைவுகளையே ஏற்படுத்தும்.

உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!!

Baby medicine tips 4:

குழந்தைக்கு நோய் வரும் என்று அதிக மாத்திரையை வாங்கி அடிக்கி வச்சிக்கிட்டு குழந்தைக்கு தருவிங்க. இது மிகவும் தவறான முறையாகும்.

அதே போன்று காலாவதியான மருந்து மாத்திரைகளை உடனுக்குடன் அகற்றுவது மிகவும் நல்லதாகும்.

Baby medicine tips 5:

குழந்தைகளுக்கான மருந்து மாத்திரைகளை மட்டும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அதைவிட்டுட்டு பெரியவர்களுக்கு கொடுக்கும் அதிக பவருள்ள மாத்திரைகளை குழந்தைகளுக்கு கொடுத்திற்கள் என்றால், குழந்தைக்கு பலவகையான பிரச்சனைகள் ஏற்படும்.

Baby medicine tips 6:

மருத்துவர் பரிந்துரைத்த பட்டியலில் உள்ளவையும், கடையில் வாங்கியவையும் ஒரே மருந்துதானா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும்.

பிறகு அதன் லேபிளின் மீதுள்ள எச்சரிக்கைகளையும், கொடுக்கும் முறைகளையும் படிக்க வேண்டும்.

Baby medicine tips 7:

மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்குள் குழந்தைகளுக்கு மருந்து மாத்திரை கொடுத்து குழந்தையை உறங்க வைக்க வேண்டும்.

Baby medicine tips 8:

குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் கடைகளில் விற்கப்படும் மருந்து மாத்திரைகளை குழந்தைக்கு வாங்கி தரக்கூடாது. மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சிகோங்க..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement