குழந்தைக்கு அரிசி கஞ்சி கொடுப்பதால் கிடைக்கும் பயன்கள்..!

குழந்தைக்கு அரிசி கஞ்சி

சத்தான அரிசி கஞ்சி செய்வது எப்படி | குழந்தைக்கு அரிசி கஞ்சி கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Rice kanji benefits in tamil)

அனைத்து தாய்மார்களுக்கும் தங்கள் குழந்தையை ஆரோக்கியத்துடன் வளர்க்க வேண்டுமென்ற கனவு அதிகம். குழந்தையின் ஆரோக்கியமானது அவர்கள் சாப்பிடும் உணவில்தான் இருக்கிறது.

பெரும்பாலும் அம்மாக்களின் கவலையானது புதிதாக பிறந்த குழந்தைக்கு எந்த உணவுகளை கொடுப்பது என்ற பிரச்சனைதான்.

5 மாதத்திற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு பொதுவாக நீர் உணவுகளைத்தான் கொடுக்க வேண்டும்.

5 மாதத்திற்கு பிறகு தான் திட உணவுகளை கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க தொடங்கும் போது முதலில் அரிசி கஞ்சியில் இருந்து தொடங்குவது மிக சிறந்த முடிவாகும். ஏன்னென்றால் அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்பு இவற்றில் மிகவும் குறைவு.

குழந்தைகளை பராமரிக்க உதவும் அடிப்படை டிப்ஸ் !!!

சரி வாங்க குழந்தைக்கு அரிசி கஞ்சி (rice kanji benefits in tamil) கொடுப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

குழந்தைக்கு அரிசி கஞ்சி செய்முறை:-

தேவையான பொருட்கள்:

  • அரிசி – 2 கரண்டி
  • தண்ணீர் – தேவையான அளவு
  • உப்பு – ஒரு கல் (விருப்பத்திற்கு)

குழந்தைக்கு அரிசி கஞ்சி செய்முறை :-

  • அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி நன்கு கொதிக்க வைக்கவும்.
  • பின்பு அவற்றில் அரிசியை சேர்த்து நன்கு வேகவிடவும்.
  • அரிசி நன்கு வெந்தவுடன் அவற்றில் இருக்கும் தண்ணீரை வேறொரு பாத்திரத்தில் மாற்றிவிடவும்.
  • பின்பு ஆறியவுடன் கெட்டியானதும் குழந்தைக்கு ஊட்டி விடவும்.

அரிசி கஞ்சி பயன்கள் :-

குழந்தைக்கு அரிசி கஞ்சி (rice kanji benefits in tamil) கொடுப்பதினால் மிகவிரைவில் செரிமானம் அடையக்கூடியது.

அரிசி கஞ்சியில் உள்ளது வெறும் அரிசியும், தண்ணீர் மட்டும்தான், எனவே செரிமானத்தை பாதிக்க கூடிய வேறு எந்த பொருட்களும் இல்லை.

குழந்தைக்கு அரிசி கஞ்சி கொடுக்கும் போது சிறிதளவு உப்பு சேர்த்து கொடுப்பதன் மூலம் செரிமானத்தை அதிகரிக்க உதவும்.

அரிசி கஞ்சி பயன்கள்:1

குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனைக்கு:

அரிசி கஞ்சியுடன் கொஞ்சம் சீரகம் சேர்த்து கஞ்சி தயாரித்து 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுப்பதன் மூலம் குழந்தையின் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தலாம்.

இந்த கஞ்சியை குழந்தைக்கு கொடுக்கும்போது கொஞ்சம் மிதமான சூட்டில் கொடுப்பது மிகவும் நல்லது.

குழந்தை வளர்க்க சிரமப்படுகிறீர்களா? – கவலை வேண்டாம்… இந்தாங்க சில குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

அரிசி கஞ்சி பயன்கள்: 2

குழந்தையின் வற்றுப்போக்குக்கு:

பொதுவாக குழந்தைகளுக்கு வற்றுப்போக்கு மற்றும் வாந்தியின் காரணமாக உடலில் உள்ள நீர் சத்தின் அளவு குறையலாம்.

எனவே 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு அரிசி கஞ்சி (rice kanji benefits in tamil) கொடுப்பதன் மூலம் குழந்தையின் உடலில் நீர் சத்து அளவு சீராகும்.

இவற்றில் உள்ள கார்போஹைட்ரெட் மற்றும் வைட்டமின்கள் குழந்தைகளின் சோர்வை விரைவில் போக்கக்கூடியது. உப்பு சேர்த்து கொடுப்பது சோடியத்தின் அளவையும் அதிகரிக்கும்.

அரிசி கஞ்சி பயன்கள்: 3

வைட்டமின் B சத்து:

வைட்டமின் பி உணவாக அரிசி விளங்குகிறது. எனவே அரிசி கஞ்சி குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு மட்டுமின்றி மனவளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.

பொதுவாக குழந்தைக்கு தொடக்க காலத்தில் குழந்தைக்கு அரிசி கஞ்சி (rice kanji benefits in tamil) கொடுப்பது மிகவும் அவசியமாகும்.

அரிசி கஞ்சி பயன்கள்: 4

புரோட்டின்:

குழந்தைக்கு தொடக்க காலத்தில் இருந்தே புரோட்டின் சத்துக்களை கொடுப்பது மிகவும் முக்கியமாகும். எனவே குழந்தை பிறந்த 5 -வது மாதத்தில் இருந்து குழந்தைக்கு அரிசி கஞ்சி (rice kanji benefits in tamil) கொடுக்க தொடங்குவது மிகவும் சிறந்த முடிவாகும்.

இது குழந்தைகளின் தசைகளை வலுபடுத்துவதோடு அவர்கள் விரைவில் எழுந்து நடக்க உதவும் வகையில் கால்களுக்கு தேவையான சக்தியினை கொடுக்கிறது.

அரிசி கஞ்சி பயன்கள்: 5

அலர்ஜிகளை குணப்படுத்தும்:

குழந்தையின் சருமமானது மிகவும் மென்மையானது ஆகும். எனவே அவர்களுக்கு எளிதில் சரும பாதிப்புகள் ஏற்படும்.

எனவே குழந்தையை குளிப்பாட்டும் போது, அந்த தண்ணீரில் சிறிதளவு அரிசி கஞ்சியும் சிறு துளிகள் எள் எண்ணெயும் சேர்த்து கலந்து குளிப்பாட்டுவதால் குழந்தையின் அரிப்பு குணமாகும்.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட இடத்தில் அடிக்கடி கஞ்சியை தடவி வர அரிப்பு விரைவில் குணமாகும்.

அரிசி கஞ்சி பயன்கள்: 6

குழந்தையின் காய்ச்சலுக்கு:

குழந்தைக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்தால் அதற்கு சிறந்த மருந்தாக அரிசி கஞ்சி இருக்கிறது.

குழந்தைக்கு நெஞ்சி சளி அல்லது காய்ச்சல் இருந்தால் அரிசி கஞ்சியில் கொஞ்சம் மிளகு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் பிரச்சனை குணமடையும் மற்றும் குழந்தையின் மூக்கடைப்பு பிரச்சனைகளையும் குணப்படுத்தும்.

குறிப்பாக குழந்தைக்கு மிளகால் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்று சோதித்து பார்த்துக்கொள்ளவும்.

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.