குழந்தைகளுக்கான உணவு பானங்கள்..!

குழந்தை உணவு

குழந்தைகளுக்கான உணவு பானங்கள்..!

Baby Food Care In Tamil

குழந்தை காலையில் எழுந்தவுடன் பொதுவாக டீ அல்லது காபி போன்ற பானங்கள் மட்டுமே கொடுப்போம் ஆனால், இது உண்மையில் மிகவும் தவறான பழக்கம்.

பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றுக்குள் இருக்கும்.

மேலும் ‘ஹைட்ரோகுளோரிக் அமிலம்’,காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன் முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

இந்த பிரச்சனையை சில ஆரோக்கியப் பானங்கள் குடிப்பதன் மூலம் தவிர்க்கலாம்.

குறிப்பாக நம்முடைய உடலைவிட, குழந்தைகளுக்கு ஜீரணமடைதல் தாமதமாகும். அதனால் குழந்தைகளுக்கு கண்டிப்பாக காபியோ டீயோ கொடுக்கக்கூடாது.

7 மாத குழந்தை உணவு வகைகள்..!

சரி வாருங்கள் குழந்தை காலையில் வெறும்வற்றில் என்னென்ன பானங்கள் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி இவற்றில் காண்போம்.

Baby Food Care In Tamil

குழந்தை உணவு பானங்கள் – தண்ணீர்:

ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.

தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இருக்க உதவுகிறது.

குழந்தை உணவு பானங்கள் – வெந்தய நீர்:

வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து குடிக்க கொடுக்கவேண்டும்.

வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். அதோடு குழந்தைகளுக்கு அப்படியே சாப்பிடப் பிடிக்காது.

இதையும் படிக்க–> பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்!

குழந்தை உணவு பானங்கள் – அருகம்புல் சாறு:

அல்சருக்கு அருமருந்தே, வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது.

குழந்தை உணவு பானங்கள் – நெல்லிக்காய்ச் சாறு:

தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.

இதில் ‘ஆன்டிஆக்சிடன்ட்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்று நோய்களுக்கும் மிகவும் சிறந்தது.

குழந்தைகளுக்கான உணவு பானங்கள் – சீரக தண்ணீர்:

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுத்தால் தொண்டை பிரச்னைகள், சளி தொல்லைகள் உண்டாகாமலும் உடலின் அதிக வெப்பத்தால் உணடாகும் வயிற்றுவலியும் குறையும்.

குழந்தை உணவு பானங்கள் – நீராகாரம்:

மற்ற எல்லா பானங்களையும் விட நீராகாரம் வெறும் வயிற்றில் குடிப்பதற்கு மிகமிக உகந்தது. தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் குறையும்.

இது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஞாபக சக்திக்கும் உதவுகிறது. உடலை குளிர்ச்சியாக வைப்பதோடு, உடல் கழிவுகளை வெளியேற்றுகிறது. இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

இதையும் படிக்க –> 1 வயது குழந்தை உணவு வகைகள்..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>குழந்தை நலன்