வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சிகோங்க..!

Updated On: April 24, 2026 5:38 PM
Follow Us:
குழந்தை பராமரிப்பு குறிப்புகள்
---Advertisement---
Advertisement

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் ..!

சாதாரணமா சூரியக்கதிர்களிடமிருந்து நம்மை காத்துகொள்ளவே பெரும் பாடுபடுகிறோம்.

இதுல குழந்தைகளை வெயில்ல வெளில அழைச்சிட்டு போறோம் என்றால் சொல்லவே வேண்டாம் கண்டிப்பா குழந்தையைத்தான் அதிகமா இந்த சூரியக்கதிர்கள் தாக்கும்.

இதன் காரணமாக குழந்தைகளுக்கு அதிக பிரச்சனைகள் கூட ஏற்படும்.

எனவே குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறோம் என்றால் சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

இதனால் குழந்தைக்கு வெயிலினால் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாத்து கொள்ளலாம்.

சரிவாங்க அப்படி என்னென்ன வழிமுறைகளை பின்பற்றினால் குழந்தையை பாதுகாத்து கொள்ளமுடியும் என்பதை பார்ப்போம்.

உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!!

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – தண்ணீர்:

பொதுவாக இது அன்னவருக்குமே சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம். நாம் வெளில செல்கிறோம் என்றால் கண்டிப்பா ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்து செல்வது மிகவும் அவசியம்.

அதுவும் குழந்தைகளை அழைத்து கொண்டு செல்கிறோம் என்றால் கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்வது மிகவும் நல்லது.

ஏன்னென்றால் வெயில் காலத்தில் வெளியே செல்கிறோம் என்றால் வெயிலின் தாக்குதலால் உடலில் இருக்கும் நீர்சத்தை குறைத்து உடலை வறட்சியடைய வழிவகுக்கிறது.

எனவே குழந்தையை வெளியே அழைத்து செல்லும் பொது கண்டிப்பாக ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து செல்லுங்கள்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – பழச்சாறு:

குழந்தையின் ஆரோக்கியத்தை காக்கக்கூடிய மற்றும் குழந்தையின் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய பழச்சாறினை தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும்.

குழந்தை வெயிலில் வெளியே சென்று வந்தால் ஒரு கிளாஸ் ஜூஸ் தரலாம்.

இவ்வாறு தருவத்தினால் குழந்தையின் உடல் வெப்பத்தை கண்டிப்பாக தணிக்க உதவும்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கூட தினமும் பழச்சாறினை கொடுக்கலாம்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – நல்லெண்ணெய் குளியல்:

வெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதுதான் சன் ஸ்ட்ரோக் வருவதற்குக் காரணம்.

இதைத் தடுக்க, வாரத்துக்கு இரண்டு முறை நல்லெண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும்.

வெயில் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் உச்சந்தலை சூடேறும். அதனால், தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியம்.

குழந்தை வளர்க்க சிரமப்படுகிறீர்களா? – கவலை வேண்டாம்… இந்தாங்க சில குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – காட்டன் ட்ரெஸ்:

குழந்தையை வெயில்காலத்தில் வெளில அழைச்சிட்டு போறோம் என்றால் எரிச்சலுட்டகூடிய எந்த ஆடையையும் அணிவதை இன்றுடன் தவிர்த்து கொள்ளவும்.

அதற்கு பதிலாக காட்டன் ஆடைகளை அணிவிப்பது மிகவும் நம்மையாகும்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – குழந்தையின் படுக்கை:

வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் -ஆடையின் நிறங்கள்:

வெயில் காலத்தில் வெள்ளை, சந்தனம், பேபி பிங்க், பேபி ப்ளு போன்ற நிறங்களில் குழந்தைகளுக்கு ஆடையை அணிவியுங்கள்.

இந்த நிறங்கள் வெயிலை உடலுக்குள் புகட்டாது. கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகளை கோடைக் காலம் முடியும் வரை தவிர்ப்பது மிகவும் நல்லது.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – வேர்வை சொட்டச்சொட்ட விளையாடி வரும் குழந்தைகளுக்கு:

விளையாடி விட்டு சோர்வாக வரும் குழந்தைக்கு ஈரத்துணியால் துடைத்து விடவும் அல்லது சின்ன டப்பில் தண்ணீர் நிரப்பி குழந்தையின் பாதம் நனையும் படி நிக்க வையுங்கள்.

இவ்வாறு செய்வதினால் குழந்தையின் உடலின் வெப்பம் மெல்ல மெல்ல குறையும்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – வெயில் காலத்தில் தடுக்க கூடியவை:

கேஸ் நிரம்பிய கூல்டிரிங்ஸை குழந்தைகள் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க செய்யுங்கள். இவை சாப்பிட்ட உணவை மேல் நோக்கி எதுக்களிக்கச் செய்யும்.

வெயில் காலத்தில் சூட்டை அதிகரிக்க கூடிய சிக்கன், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், மசாலா ஐட்டங்களை முற்றிலும் தவிர்க்கவும்.

எப்போதாவது ஒருமுறை சாப்பிட்டாலும், அப்போது மோர் சாப்பிடுவதை பழக்கமாக வைத்துக்கொள்ளவும்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – கோடைகால கனிகள்:

வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம், முலாம் பழம், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் சாப்பிடுங்கள்.

குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – லேசான காற்று:

குழந்தைக்கும் வேர்க்கும் என்பதால் குழந்தை இருக்கும் இடத்தில் மிதமான காற்று சுழற்சி இருக்கவேண்டும்.

குறிப்பாக குழந்தையின் முகத்திற்கு நேராக காத்தாடியை வேகமாக சுத்தவிடக்கூடாது ஏன்னென்றால் குழந்தை சுவாசிக்க மிகவும் சிரமப்படும். இதன் காரணமாக குழந்தைக்கு மூச்சுதிணறல்  ஏற்படும்.

பச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

12 month baby food chart in tamil

குழந்தை பிறந்து 12 மாதம் வரை என்ன உணவை சாப்பிட கொடுக்கலாம்..!

குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள் 2026

Kulandai Thalai Yepodhu Thirumbum

தலை திரும்பி எத்தனை நாளில் குழந்தை பிறக்கும்..! குழந்தை தலை திரும்பியதற்கான அறிகுறி என்ன.?

how to increase 7 month baby weight in tamil

7 மாத குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க கொடுக்க வேண்டிய உணவு முறைகள்..!

பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட கூடாதவை | Foods to Avoid During Breastfeeding in Tamil

பிறந்த குழந்தை உடலை முறுக்குவது ஏன்? | Why Baby Twist Their Body in Tamil

summer healthy drinks for kids in tamil

இந்த சம்மரில் குழந்தைகளுக்கான ஹெல்த்தி ட்ரின்க்

வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு கண்டிப்பாக இந்த 5 உணவுகளை மறந்தும் கொடுத்து விடாதீர்கள்..!

Home remedies for heat rash in babies

குழந்தைக்கு வேர்க்குரு குறைய டிப்ஸ்..! Home remedies for heat rash in babies..!