குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் ???

Advertisement

குழந்தை தூங்கும் நேரம் (Baby Sleep Hours) :

குழந்தை வயதுக்கு ஏற்ப அவர்களின் தனிப்பட்ட மற்றும் சில காரணங்களை பொறுத்து ஒரு குழந்தைக்கு தேவைப்படும் தூக்கத்தின் அளவு மாறுபடுகிறது.

குழந்தைக்கு சளி பிரச்சனை சரியாக..!

சரி இந்த பகுதியில் குழந்தை ஒரு நாள் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் (how much sleep do children need in tamil) என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

பிறந்த குழந்தை தூங்கும் நேரம்:

பிறந்த குழந்தை எவ்வளவு நேரம் தூங்கும்

1-4 வாரம் ஆன குழந்தையின் தூங்கும் நேரமானது (baby sleep hours) 15 முதல் 18 மணி நேரம் வரை நீடிக்கும்.

பிறந்த குழந்தையின் உட்புற உயிரியல் கடிகாரம் அல்லது சர்காடியன் ரிதம் இல்லாதால் தூங்கும் நேரமானது பகல்நேரம் மற்றும் இரவுநேரம் சுழற்ச்சிகளுடன் தொடர்பில் இருப்பதில்லை.

உண்மையில் பிறந்த குழந்தை தூங்கும் நேரம் (baby sleep hours) ஒரு குறிப்பான நேரமே இருக்காது.

1-4 மாதம் ஆன குழந்தையின் தூங்கும் நேரம்:

1-4 மாதங்கள் ஆன குழந்தை தூங்கும் நேரம் (baby sleep hours) நாள் ஒன்றுக்கு 14-15 மணி நேரம் வரை இருக்கும்.

இந்த மாத குழந்தைகளின் தூங்கும் நேரமானது (baby sleep hours) ஒரு வடிவத்திற்கு வந்திருப்பதை நீங்கள் உணர்விர்கள்.

1-4 மாதம் ஆன குழந்தையின் நீண்ட தூக்கமானது 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும்.

4-12 மாதம் குழந்தை தூங்கும் நேரம்:

4-12 மாதம் ஆன குழந்தையின் தூங்கும் நேரமானது (baby sleep hours) 15 மணி நேரம் இருப்பது மிகவும் சிறந்தது.

11 மாதம்  வரை உள்ள குழந்தை, தூங்கும் நேரமானது 12 மணி நேரம் தான் இருக்கும்.

உண்மையாக இந்த மாத குழந்தைகளுக்கு ஆரோக்கியமான தூக்கம் என்பது மிகவும் அவசியம்.

பொதுவாக இந்த மாதக் குழந்தையின் தூக்கமானது நாள் ஒன்றுக்கு மூன்று சிறுதூக்கம் தொடர்ந்து ஆறு மாதம் வரை இருக்கும். எனவே அந்த நேரத்தில் அவர்கள் இரவில் தூங்குவதற்கு உடல் திறன் கொண்டிருப்பார்கள்.

இந்த வயது குழந்தையின் தூக்கத்தின் உயிரியல் தாளங்கள் முதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளதால், வழக்கமாக கால இடைவெளிகளை தூங்குவது பொதுவாக இந்த காலத்தின் பிற்பகுதியில் நிகழ்கிறது.

குழந்தையின் காலை சிற்றுண்டிக்கு பிறகு சிறுதூக்கம் பொதுவாக 9 மணியில் இருந்து 1 மணிநேரம் வரை இருக்கும்.

குழந்தையின் மதிய சிறுதூக்கம் 2 மணிக்கு தொடர்ந்து 1 அல்லது 2 மணி நேரம் வரை நிகழும்.

பிற்பகல் பிற்பகுதியில் சிறுதூக்கமானது 3 முதல் 5 மணி நேரம் வரை நிகழும், இந்த இடைவெளி நேரமானது வேறுபடும்.

குழந்தையை குளிப்பாட்டும் முறை ..!

1-3 வயது ஆன குழந்தை தூங்கும் நேரம்:

இந்த வயது குழந்தைகளுக்கு 14 மணி நேரம் தூக்கம் (baby sleep hours) போதுமானது. இந்த வயது குழந்தைகள் காலை அல்லது மாலை வேளை சிறுதூக்கத்தை இழப்பார்கள்.

நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே பகலில் தூங்குவார்.

இந்த வயது குழந்தைக்கு 14 மணி நேரம் (baby sleep hours) தூக்கம் தேவைப்படும் போது அவை வழக்கமாக 10 மணி நேரம் மட்டுமே கிடைக்கும். எனவே நாள் ஒன்றுக்கு ஒரு குட்டிதூக்கம் தேவைப்படும். அதுவும் ஒன்று முதல் மூன்றரை மணி நேரம் வரை இருக்கலாம்.

இவர்களின் இரவு தூங்கும் நேரமானது 7 மணி முதல் 9 மணிக்குள் தூங்கி, காலை 6 மணி முதல் 8 மணிக்குள் எழுந்திருப்பார்கள்.

3-6 வயது ஆன குழந்தை தூங்கும் நேரம் :

3-6 வயது ஆன குழந்தைகள் தூங்கும் நேரம் (baby sleep hours) பொதுவாக 10 முதல் 12 மணி நேரம் வரை இருக்க வேண்டும். இந்த வயது குழந்தைகள் பொதுவாக 7 மணிக்குள் தூங்க ஆரம்பித்து அவர்கள் இளம் வயதில் நிகழ்ந்தது போல், காலை 9 மணிக்கு எழுந்திருப்பார்கள். 3 வயது குழந்தை பகலில் சிறுதூக்கம் தூங்குவதை விரும்புவார்கள். ஆனால் 5 வயது குழந்தைக்கு சிறுதூக்கம் என்பது குறையும். 3 வயதுக்கு மேல் சென்ற குழந்தைக்கு புதிய தூக்கம்  எதுவும் ஏற்படுவதில்லை.

7-12 வயது ஆன குழந்தை தூங்கும் நேரம் :

இந்த வயது குழந்தைகளுக்கு தூங்கும் நேரம் 10-11 மணி நேரம் (baby sleep hours) போதுமானது. இந்த வயதில் சமூகம், பள்ளி மற்றும் குடும்ப நடவடிக்கைகளுடன், தூங்கும் நேரம் தள்ளி போகின்றது.

பொதுவாக இந்த வயதில் இரவு தூங்கும் நேரமானது 7:30 இருந்து 9 மணியாக இருக்கிறது. மேலும் நாள் ஒன்றுக்கு தூங்கும் நேரமானது 9-12 மணி நேரமாக இருக்கும் சராசரியாக தூங்கும் நேரமானது 9 மணி நேரம் மட்டுமே இருக்கும்.

12-18 வயதினர்:

பொதுவாக இந்த வயதினருக்கு 8 முதல் 9 மணி நேரம் வரை (baby sleep hours) தூக்கம் இருப்பது மிக அவசியம். ஏன் என்றால் தூக்கமானது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி முக்கியமாக மனநிறைவுக்கும்  மிக அவசியம்.

குழந்தைகளுக்கு வயிற்று வலி நீங்க..!

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன்
Advertisement