குழந்தை ஏன் அழுகிறது என்று தெரியுமா?

Advertisement

குழந்தை ஏன் அழுகிறது (Baby Crying Reasons In Tamil):

குழந்தை ஏன் அழுகிறது : கைக்குழந்தையைப் பொறுத்தவரை அழுகை என்பது ஒரு மொழி. தன் தாயின் கவனத்தைத் தன் மீது ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் எளிய வழி. பசி, தாகம், தனிமை, களைப்பு போன்ற சாதாரணக் காரணங்களால் குழந்தை தினமும் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு.

அதற்கு மேல் அழுகை அதிகரித்தால் அல்லது குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால், அதைக் கவனிக்க வேண்டியது மிக அவசியம்.

7 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் ..!

சரி என்ன காரணத்திற்கெல்லாம் குழந்தை அழுகிறது (baby crying reasons in tamil) என்று இந்த பகுதியில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..!

பசிக்கு அழுகும் குழந்தை:

குழந்தை ஏன் அழுகிறது? குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் (baby crying reasons in tamil) குழந்தை அழுகும்.

குறிப்பாக பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் குழந்தை அழுகிறது என்றால், அது நிச்சயம் பசிக்காக இருக்காது. வேறு காரணத்தால் (baby crying reasons in tamil) குழந்தை அழுகிறது.

பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழந்தை அழும்.

குழந்தை இரவில் அழுவதற்குப் பெரும்பாலும், இது தான் காரணமாக இருக்கும். ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.

ஆடைகளின் கவனத்திற்கு:

குழந்தை ஏன் அழுகிறது என்றால் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை (baby crying reasons in tamil) அடிக்கடி அழலாம்.

எனவே அவற்றை கண்டறிந்து சரி செய்தாலே போதும் குழந்தை அழுகை நின்றுவிடும்.

டயபர்:

குழந்தை ஏன் அழுகிறது என்றால் இப்பொது டயபர் என்பது குழந்தையின் ஓர் உள்ளாடையாக மாறிவிட்டது. இதனால் அலர்ஜி ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பும் தடிப்பும் உண்டாகின்றன.

இதன் காரணமாகவும் (baby crying reasons in tamil) குழந்தைகள் அடிக்கடி அழுவதுண்டு.

குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யனுமா?

பூச்சி கடித்தால்?

சில நேரத்தில் குழந்தை ஏன் அழுகிறது என்று நமக்கு தெரியாது குழந்தை அப்போது உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம்.

எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழலாம்.

வயிற்று வலி மற்றும் காது வலி:

குழந்தைக்கு பொதுவாக வயிற்று (Baby Crying Reasons In Tamil) வலியும், காது வலியும் ஏற்படுவது சகஜம்.

குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ளலாம்.

கரணங்கள்:

குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகப் பால் அல்லது திட உணவைக் கொடுத்துவிட்டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். அல்லது உணவுடன் அதிகக் காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழலாம்.

எனவே தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும்.

இதனால் குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்.

சில நேரங்களில் உணவு அலர்ஜி காரணமாகவும் குழந்தை அழலாம்.

சில நேரங்களில் காதின் உட்பகுதியில் செவிப்பறைக்குப் பின்னால் சீழ் இருக்கும்போது குழந்தைக்குக் காது வலிக்கும்.

அப்போது குழந்தை நல மருத்துவரிடம் குழந்தையை அழைத்து சென்று பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.

சளி, ஜலதோஷம் மற்றும் வயிற்றுப்போக்கு:

சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச்சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழுகிறது.

இந்த மாதிரி நேரங்களில் குழந்தை பால் குடிக்காது தொடர்ந்து அழுவது, வீறிட்டு அழுவது, உடலை முறுக்கி அழுவது என்று அழுகைச் சத்தம் வேறுபடும்.

வயிற்றுப்போக்கு காரணமாகக் குழந்தைக்கு வயிற்றில் வலி வந்து அழும் அல்லது உடலில் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறி, தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு அழுவது வழக்கம் (Baby Crying Reasons In Tamil).

எனவே மருத்துவரைப் பார்ப்பதற்குள் சிறிது உப்புச் சர்க்கரைக் கரைசலைத் தண்ணீரில் கலந்து குழந்தைக்குக் கொடுத்தால், அழுகை நின்றுவிடும்.

குழந்தையின் உடலானது மிகவும் மென்மையானது, எனவே குழந்தைக்கு குளிராக இருந்தாலும் அல்லது புழுக்கமாக இருந்தாலும் (Baby Crying Reasons In Tamil) அழலாம். மேலும் எரிச்சலை மூட்டும் சில சத்தங்களாலும் குழந்தை அழலாம் (Baby Crying Reasons In Tamil).

முக்கியமாக பால் பற்கள் ஒவ்வொன்றாக முளைக்கத் தொடங்கும்போது (Baby Crying Reasons In Tamil) குழந்தை அழும்.

தூக்கும் போது கவனமாக தூக்க வேண்டும்:

பொதுவாக குழந்தை பிறந்த 6 மாதம் வரை குழந்தையின் கழுத்து பகுதி சரியாக நிற்காது. அப்போது குழந்தையின் கழுத்து பகுதியை பத்திரமாக பிடித்து தூக்க வேண்டும்.

இல்லையெனில் குழந்தைக்கு கழுத்தில் (Baby Crying Reasons In Tamil) சுளுக்கு ஏற்பட்டு வலியில் துடிக்கும்.

அப்போது கை மருத்துவம் என்று எதுவும் செய்யக்கூடாது. குழந்தை மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.

குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் ???

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement