குழந்தை வளர்க்க சிரமப்படுகிறீர்களா? – கவலை வேண்டாம்… இந்தாங்க சில குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

குழந்தை வளர்க்க சிரமப்படுகிறீர்களா? இந்தாங்க சில குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

குழந்தையை சிறந்த முறையில் வளர்ப்பது மூலமாகவே எதிர்காலத்தில் தங்கள் குழந்தை நல்லவராவதும் அல்லது தீயவர் ஆவதும் தாயின் வளர்ப்பிலேயே உள்ளது.

சரி வாங்க வளரும் குழந்தைகளுக்கான குழந்தை வளர்ப்பு டிப்ஸ் (child development in tamil) சிலவற்றை படித்தறிவோம்…

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் 1:

குழந்தை வளர்ப்பு முறையில் (child development in tamil) முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னெவென்றால் தங்கள் குழந்தைக்கு எந்த பொருள் கேட்டாலும் உடனே வாங்கிக்கொடுக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

ஏன் என்றால் குழந்தைக்கு மிக எளிதில் அவர்கள் கேட்ட பொருட்கள் கிடைத்துவிட்டால், எதிர்காலத்தில் தோல்வியை எதிர்கொள்ள இயலாதவர்களாக இருப்பார்கள்.

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் 2:

உங்கள் குழந்தை (child development in tamil) ஒரு தவறு செய்கிறது என்று வைத்துக்கொள்ளவோம், அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள், பொதுவாக அனைவரையும் போல அடிப்போம் அல்லது திட்டுவோம். இந்த இரண்டு செயல்களும் மிகவும் தவறானதாகும்.

குழந்தை தவறு செய்கிறது என்றால் உடனே குரலை உயர்த்தாமல், அதே சமயம் உறுதியுடன் உங்கள் கருத்துகளை அதனிடம் தெரிவியுங்கள்.

குழந்தைக்கு சளி பிரச்சனை வராமல் பாதுகாக்க..! சில இயற்கை வழிகள்

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் 3:

இந்த காலத்து குழந்தைக்கு (baby development in tamil) சொல்லவே வேண்டாம் பள்ளியை விட்டு வந்தவுடன் முதலில் என்ன செய்வார்கள் என்றால் ஒன்று டிவி பார்ப்பார்கள் அல்லது போனில் மூழ்கிவிடுவார்கள்.

அதனை பார்க்கும் பெற்றோர்களுக்கு கோபமோ தலைக்கு ஏறும் அந்த நிலையில் குழந்தையை அடிக்க பாயாமல், இங்க பாருடா கண்ணா… தினமும் ஈவ்னிங் ஒரு மணிநேரம் டிவி பார்க்க அம்மா உன்னை அலோ பண்றேன் என்று அன்புடன் சொல்லுங்க. அதாவது அன்பிற்கு அடங்காதவர் யாரும் இருக்க இயலாது.

குழந்தை வளர்ப்பு டிப்ஸ் 4:

அதே போன்று அதிகமாக பெற்றோர்கள் குழந்தையை (baby development in tamil) எந்த ஒரு விசயத்திற்காகவும் வற்புறுத்த கூடாது.

அதாவது விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இதைத்தான் நீ படிக்க வேண்டும், இந்த செயலை தான் செய்யவேண்டும் என்று வற்புறுத்த கூடாது.

இந்த செயல் கூட குழந்தையின் திறமையை முடக்குவது போன்றதாகும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் அந்த திறமையை பெற்றோராகிய தாங்கள்தான் வெளிவர செய்ய வேண்டும்.
அதாவது உங்களது குழந்தைக்கு எந்த விசயத்தில் அதிக நாட்டம் செல்கிறதோ அதனை தெரிந்து கொண்டு திறமையை அதிகரிக்க செய்யவும்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.