குழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி இதோ..!

Advertisement

குழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி..!

குழந்தைகளுக்கு உணவு (baby food ideas) சாப்பிட வைப்பது என்பது ஒரு சிறந்த  கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமத்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு.சரியாகச் சாப்பிடாத குழந்தைகளை எப்படி சாப்பிட வைப்பது எனக் கவலையுடன் இருப்பவரா…?

சில குழந்தைகள் உணவை (baby food tips) விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

அரச மரத்தை சுற்றுவதால் குழந்தை பிறக்குமா..? எப்படி..?

எனவே இந்த பகுதியில் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு எப்படி உணவை கொடுக்க வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..!

குழந்தை நல்லா சாப்பிட வைக்க அருமையான வழி..!

  • பொதுவாக எல்லா வகையான உணவுகளையும் (baby food in tamil) குழந்தைகளுக்கு தினிப்பதை இன்றுடன் விட்டு விடுங்கள்.
  • குழந்தைக்கு சரியான இடைவேளையில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். ஏன் என்றால் குழந்தைக்கு உண்ணும் உணவு திகட்டாமல் இருக்க வேண்டும்.
  • மீறி குழந்தைகளுக்கு அதிக உணவை கொடுத்தால் சாப்பிடும் போதே குழந்தைகள் வாந்தி எடுத்து விடுவாற்கள் எனவே குழந்தை சாப்பிடும்  அளவிற்கு மட்டும் உணவு கொடுப்பது மிக சிறந்த முறையாகும்.
  • குழந்தைக்கு பிடித்த உணவுகளை அதிகமாக செய்து கொடுக்க வேண்டும்.
  • குழந்தை இரண்டு வயது வந்த பிறகு உணவு (baby food tips) ஊட்டுவதை தவிர்த்துக் கொள்ளவும். மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்துவதை பழக்க வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தை அதிக உணவை சாப்பிட பழகுவார்கள்.
  • குழந்தைகளுக்கு அதிகம் நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள், பருப்பு வகைகள் அதிகம் (baby food ideas) கொடுக்க வேண்டும். ஏன் என்றால் இது குழந்தைகளுக்கு மலச்சிக்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
  • குழந்தைகளுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவை எனவே தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • தண்ணீர் குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மேர், மில்க் சேக், பழச்சாறு மற்றும் இளநீர் ஆகியவற்றை வாங்கி கொடுக்கலாம்.
  • காய்கறிகளை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு (baby food ideas) சாண்ட்விச்சுகலாகவும், வெஜ் நூடுல்ஸாகவும், ஃப்ரைட் ரைஸாகவும் செய்து கொடுக்கலாம்.
  • காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது.
  • தோசை, இட்லி, சப்பாத்தி மற்றும் பூரி போன்ற உணவுகளை (baby food ideas) குழந்தைகளுக்கு அதிகமாக செய்து கொடுக்கலாம்.

பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்!

முக்கிய குறிப்பு:

நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது.

எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும்.

எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நம்முடைய உணவுப் (baby food ideas) பழக்கத்தை மாற்றிக்கொள்வது நலம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement