பச்சிளங் குழந்தை பராமரிப்பு :-
குழந்தை பராமரிப்பு / kulanthai paramarippu in tamil :- பிறந்த குழந்தையை பராமரிப்பது எப்படி என்று மூத்தவர்களின் ஆலோசனைகளை கேட்க தவிக்கும் பெற்றோர்களுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்.
பொதுவாக பிறந்த குழந்தையை ஒரு புதிய பொருள் போன்று பராமரிக்க வேண்டும். எனவே 01-10 மாதம் வரை குழந்தையை எப்படி பராமரிப்பது என்று இவற்றில் காண்போம்.
குழந்தையை வெயில்ல கூட்டிட்டு போறீங்களா?… அப்போ இத தெரிஞ்சிகோங்க..!
குழந்தை பராமரிப்பு குறிப்புகள் / kulanthai paramarippu in tamil ..!
பிறந்த ஒருமாத குழந்தை பராமரிப்பு (Kulanthai paramarippu in tamil) :-
பிறந்த ஒரு மாத குழந்தையைக் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக போர்த்தவும் கூடாது. எடை குறைவாக பிறந்த குழந்தை என்றால், குளிர்காலம் இல்லை என்றாலும்கூட சாக்ஸ், கிளவுஸ் போட்டு வைப்பது நல்லது.
குழந்தை பிறந்ததும், அதன் முதல் உணவு சீம்பாலாகத்தான் இருக்க வேண்டும். அதுவும், பிறந்த அரை மணி நேரத்துக்குள் கொடுக்க ஆரம்பிக்கவேண்டும்.
சிஸேரியன் என்றால், தாய்க்கு மயக்கம் சிறிது தெளிந்ததும், 3 அல்லது 4 மணி நேரத்தில் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது அதனால் இரண்டு நாள் கழித்து கொடுக்கலாம் என்று சிலர் தள்ளிப்போடுவார்கள். அது தவறு. இன்குபேட்டரில் வைக்கப்படும் குழந்தைக்குக்கூட, தாயிடமிருந்து பெறப்படும் சீம்பால் டியூப் வழியாகக் கொடுக்கப்படுகிறது.
1-4 மாத குழந்தை பராமரிப்பு (Kulanthai paramarippu in tamil) :-
இந்த மாதங்களில் பொதுவாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். வேறு எந்த உணவுகளையும் கொடுக்கக்கூடாது. புட்டிப்பால் போன்றவற்றால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.
அதேபோல் குழந்தையின் பார்வைத் திறன், கேட்கும் திறன், சுற்றுச் சூழலை உன்னித்துக் கவனிக்கும் திறன் ஆகிய மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இந்த மூன்றும் சாதாரணமாக இல்லை என்றால் மருத்துவரிடம் சென்று ஆலோசிக்க வேண்டும்.
6-வது மாத குழந்தை பராமரிப்பு (Kulanthai paramarippu in tamil) :-
ஐந்து மாதங்கள் வரையில் குழந்தையின் எல்லா வளர்ச்சிகளும் ஒழுங்காக இருந்தால், 6-ம் மாதத்தில் இருந்து, தாய்ப்பாலுடன் திட உணவு கொடுக்க ஆரம்பித்து விடலாம்.
வேக வைத்து மசித்த காய் கறிகள், புழுங்கலரிசி, பொட்டுக்கடலை, ராகி சேர்த்து அரைத்த மாவில் கஞ்சி, மசித்த வாழைப்பழம் போன்றவற்றை முதலில் சிறிது சிறிதாகக் கொடுத்துப் பழக்கலாம்.
பிறந்த குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் ?
7-8 மாத குழந்தை பராமரிப்பு (Kulanthai paramarippu in tamil) :-
கஞ்சி, மசித்த காய், பழம் இவற்றிலிருந்து கொஞ்சம் முன்னேறி, பருப்பு சேர்த்துப் பிசைந்த, மசித்த சாதம் கொடுக்கலாம். நாம் சாப்பிடுவது போலவே, மூன்று வேளைகள் திட உணவு கொடுக்க வேண்டும்.
தாய்ப் பாலையும் நிறுத்தக் கூடாது. இந்த தருணத்தில் (baby care tips in tamil) குழந்தைக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும் வயதாகும் அதாவது குழந்தை அனைத்து விஷயங்களையும் கவனிக்க ஆரம்பிக்கும்.
9-10 மாதங்களுக்கு குழந்தை பராமரிப்பு :-
இந்த மாதத்தில் குழந்தைகளை (baby care tips in tamil) தானாக சாப்பிட பழக்கவேண்டும் அப்போதுதான் ஒரு வயது வரும்போது தானாக சாப்பிட பழகும்.
வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் ஏன் என்றால் குழந்தை நடக்க ஆரம்பிக்கும் வயதாகும் அப்போது வீடு சுத்தமாக இல்லையென்றால் குழந்தை எதையாவது எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும்.
இதன்காரணமாகக்கூட குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை வரும்.
9-வது மாதத்தில் இருந்து காலை, மதியம், இரவு என்பதோடு, 4-வது வேளையாக மாலையில் ஏதாவது ‘ஸ்நாக்’ கொடுக்கலாம்.
ஒரு வயதில் பேச்சு வர ஆரம்பிக்கும். திட உணவு தாய்ப்பால் ஆகியவற்றுடன், பசும்பால் அல்லது பாக்கெட் பால் போன்ற வேறு பால் ஓரிரு வேளை கொடுக்கலாம். தாய்ப்பால் 2 வயது வரை கொடுக்க வேண்டும்.
சாதாரணமாக குழந்தைக்கு (baby care tips in tamil) ஒரு வயது முதல் வற்றுப்போக்கு, ஜலதோஷம், இருமல் மூன்றும் அடிக்கடி வரும். அதைக்கண்டு பயப்பட வேண்டாம்.
ஓரிரு நாட்களில் அந்த பிரச்சனை சரியாகிவிடும். அதற்கு மேல் இந்த பிரச்சனை நீடித்தால் குழந்தை நல மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றவும்.
பிறந்து 5 முதல் 10 நாள்களுக்குள் (சில சமயம், 3 நாள்களில்), பச்சிளம் சிசுவின் தொப்புள்கொடி, அதுவாகவே விழுந்துவிடும்.
பிடித்து இழுக்கவோ, மருந்து வைக்கவோ தேவையில்லை. தானாகவே ஆறிவிடும்.
பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் (baby care tips in tamil) லேசாக மஞ்சள் காமாலை நோய் சாதாரணமாக இருக்கும் அதைக்கண்டு பயப்பட தேவையில்லை.
ஆனால் கைகளிலும், கால்களிலும் மஞ்சள் நிறம் பரவினால் இரத்த பரிசோதனை செய்து நீல நிற ஒளியில் வைக்கவேண்டும்.
குழந்தை (baby care tips in tamil) பிறந்த 5 நாட்களில் பிறந்தபோது இருந்த எடையை விடக் குறைந்து, மறுபடியும் 10-வது நாளில் எடை அதிகரிக்கும் அதனை கண்டு பயப்பட தேவையில்லை குழந்தை நன்கு சிறுநீர் கழிக்க வேண்டும்.
குழந்தை பராமரிப்பு (kulanthai paramarippu in tamil) குறிப்புகள்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.