பிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி?

உரை மருந்து

குழந்தைக்கு உரை மருந்து தயாரிக்கும் முறை (Urai Marundhu In Tamil) ..!

உரமருந்து பொதுவாக பிறந்த குழந்தையின் உடலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என்று அனைத்து தாய்மார்களும் தன் குழந்தைகளுக்கு உரைமருந்து கொடுப்பார்கள். இந்த உரை மருந்து (urai marundhu in tamil) எதற்காக பிறக்கும் குழந்தைகளுக்கு  கொடுக்கின்றனர் என்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி, வாந்தி, வயிற்று உப்புசம், பசி, வாய்வு, அஜுரணம், வயிற்றுப்போக்கு, தொண்டை புண், திக்குவாய் ஆகிய பிரச்சனைகளுக்கு உரை மருந்து (urai marundhu in tamil) கொடுப்பதன் மூலம் சரியாகப்படுகிறது.

பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்!

சரி இப்போது குழந்தைகளுக்கு உரை மருந்து (urai marundhu in tamil) எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்…

உரை மருந்து தயாரிக்கும் முறை (Urai Marundhu In Tamil):

தேவையான பொருட்கள்:

மூலிகைகள்

 1. கடுக்காய்
 2. சுக்கு
 3. ஜாதிக்காய்
 4. மாசிக்காய்
 5. வசம்பு
 6. திப்பிலி
 7. மஞ்சள்

உரமருந்து செய்ய இந்த மூலிகை மருந்துகள் அனைத்தும் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும்.

உரை மருந்து செய்முறை (Urai Marundhu In Tamil):

 • இந்த ஒவ்வொரு மூலிகை பொருட்களையும் தனிதனியாக எண்ணெய் தடவி தீபத்தில் சுட்டு உரைக்கல்லில் தாய்பால் அல்லது பசும் பால் ஊற்றி ஒவ்வொரு உரமருந்தையும் உரசி ஒரு சங்கடை அளவு எடுத்துக் கொள்ளவும்.
 • அதன் பிறகு குழந்தையை எண்ணெய் தேய்த்து குளித்தவுடன் குழந்தைக்கு ஒரு சங்கடை அளவு கொடுக்க வேண்டும்.
 • முக்கியமாக உரமருந்து கொடுத்த 10 நிமிடம் வரை குழந்தைக்கு எந்த உணவுகளும் கொடுக்க கூடாது 10 நிமிடம் கழித்த பிறகு குழந்தைக்கு அனைத்து உணவுகளும் கொடுக்கலாம்.
 • இந்த உர மருந்து (urai marundhu in tamil) பிறந்த குழந்தை முதல் 5 வருடம் வரை உள்ள உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம்.

பிறந்த குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகள்..! முழு வளர்ச்சி அட்டவணை

உரை மருந்து பயன்கள்..!

கடுக்காய்:

நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும். புளிப்பு (வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும். அஜீரண பேதியைத் தடுக்கும். குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.

சுக்கு:

வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.

ஜாதிக்காய்:

இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.

மாசிக்காய்:

வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.

வசம்பு:

இதுவும் கடுக்காயும், பிள்ளை வளர்ப்பான் என்ற பெயர் பெற்றவை. பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.

குழந்தை தடுப்பூசி பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.