7 மாத குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம் | 7 Month Baby Food in Tamil

7 மாத குழந்தைக்கு

7 மாத குழந்தைக்கு உணவு முறையில் என்னென்ன உணவு கொடுக்கலாம்..!

7 மாத குழந்தை உணவு முறை | 7 masa kulanthaiku enna sapadu kudukalam: | 7 மாத குழந்தை உணவு பட்டியல்: 

 7 மாத குழந்தைக்கு உணவு/ பிறந்த குழந்தைக்கு உணவு முறை: இந்த காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது ஏன் என்றால்? வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இந்த காரணத்தை தவிர்க்க இயலாததால், பெரியவர்களின் துணை மற்றும் ஆலோசனை இல்லாததால் பெரும்பாலான தாய்மார்களுக்கு குழந்தையை எந்த முறையில் பார்த்து கொள்ள வேண்டும் என்றும், எந்த உணவு முறைகளைக் கொடுக்க வேண்டும் என்று தெரியாமல், குழந்தையை எப்படி வளர்ப்பது என்று அதிக சந்தேகங்கள் தோன்றுகிறது.

பெரும்பாலான தாய்மார்கள் அதிகம் குழம்புவதும், வருந்துவதும் குழந்தையின் உணவு முறையில்தான். குழந்தைக்கு எந்தக் காலக்கட்டத்தில் எந்த உணவுகளை கொடுக்க வேண்டும் என்று தான்.

இதை கிளிக் செய்யுங்கள் —> குழந்தை உணவு பானங்கள்..!

 

எனவே இந்த கட்டுரையில் பிறந்த குழந்தைகளுக்கு என்ன உணவுகளை கொடுக்கலாம் என்று சிலவற்றை தெளிவாக நாங்கள் கூறியுள்ளோம்.

பிறந்த குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்

7 மாத குழந்தைக்கு உணவு முறை | 7 Month Baby Food in Tamil | 7 மாத குழந்தை உணவு பட்டியல்

சத்தான உணவு:

குழந்தைக்கு உணவு (baby food tamil tips) கொடுக்கும் முறை என்பது சாதாரண செயல். ஆனால் சத்தான உணவு கொடுக்கும் முறை சிறந்ததாகும்.

எனவே குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுப்பது மிக அவசியமாகும். எனவே குழந்தை பிறந்த தினத்தில் இருந்தே உணவு முறையில் அதிக அக்கறை கொள்வது மிக அவசியமான ஒன்றாகும்.

6 மாத குழந்தை உணவு வகைகள்:

குழந்தை உணவு முறைகள் (baby food tamil tips): பொதுவாக பிறந்த 6 மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஒருவேளை குழந்தைக்கு தாய்ப்பால் பற்றாவிட்டால், அப்போது குழந்தை நல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும்.

அவர்கள் குழந்தையின் எடை, ஆரோக்கியம் போன்றவற்றை கண்டறிந்து எப்பொழுது எந்த திட உணவுகளை கொடுக்கலாம் என்று பரிந்துரைப்பார்கள்.

திட உணவு:

குழந்தை உணவு முறைகள் (baby food tamil tips): திட உணவு தயாரிக்க ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது.

திட உணவுக்கு தேவையானது பசும்பால்தான் என்றாலும் விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம்.

ஆனால் ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அவற்றில் இருக்கும் சத்துக்கள் அழிந்துவிடும். எனவே கூழ் காய்ச்சிய பிறகே ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.

குழந்தையை குளிப்பாட்டும் முறை ..!

உணவை திணிக்கக்கூடாது:

7 மாத குழந்தை உணவு முறை(baby food tamil tips): குழந்தைக்கு முதல் முறையாக உணவுகளை கொடுக்கும்போது, அதிக அளவு உணவுகளை கொடுக்கக்கூடாது.

ஏன் என்றால் குழந்தை பிறந்து 6 மாதம் கழிந்தாலும் சில குழந்தைகள் திட உணவுகளை ஏற்க இயலாது.

எனவே குழந்தையின் விருப்பத்தை தெரிந்துக் கொண்டு உணவுகளை கொடுக்க வேண்டும்.

அரிசி கூழ்:

குழந்தை உணவு முறைகள் (7 Month Baby Food in Tamil): பிறந்த குழந்தைக்கு முதல் முறையாக உணவு கொடுக்கும் போது, ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயார் செய்யப்பட உணவே சிறந்தது.

அதுவும் குழந்தையின் முதல் உணவாக அரிசி கூழ் தருவது மிகவும் சிறந்ததாகும். அதாவது சாதத்தை நன்கு வேகவைத்து பின்பு 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கஞ்சி போல் செய்து கொள்ளவும்.

இந்த கூழை குழந்தையின் விருப்பத்திற்கேற்ப கொடுக்கவேண்டும்.

குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் ???

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு:

குழந்தை உணவு முறைகள் (baby food tamil tips): குழந்தையின் ஆரோக்கியத்திற்கு கேழ்வரகு மற்றும் கோதுமை கூழ் மிகவும் நல்லது.

எனவே குழந்தைக்கு வாரத்தில் இருமுறை கேழ்வரகு கூழ் செய்து கொடுக்கலாம்.

வேகவைத்த சத்தான உணவுகள்:

குழந்தை உணவு முறைகள் (baby food tamil tips): வேகவைத்த சாதத்தை மசித்து கஞ்சிபோல் கொடுக்கலாம்.

இட்லி, தோசை கொடுக்கலாம், ஓட்ஸ், சத்து மாவு, ராகி மாவு போன்றவற்றை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சி கொடுக்கலாம், சப்பாத்தியை பாலுடன் ஊறவைத்து நன்கு மசித்து கொடுக்கலாம்.

7 மாத குழந்தை உணவு முறை :

7 மாத குழந்தை உணவு முறை(baby food tamil tips): குழந்தை பிறந்த 7 மாதத்திற்கு பிறகு தயிர் கொடுக்கலாம், முட்டையில் மஞ்சள் கருவை கொடுக்கலாம், 11 மாதம் கழிந்ததும் வெள்ளை கருவும் சேர்த்து கொடுக்கலாம்.

மேலும் வேகவைத்த காய்கறி, சாம்பார் சாதத்துடன் நெய் கலந்து மசித்து கொடுக்கலாம்.

பலவகை தானியங்கள்:

7 Month Baby Food in Tamil: குழந்தை உணவு முறைகள் (baby food tamil tips): பலவகை தானியங்களை கலந்து சத்து மாவு கஞ்சி கொடுப்பார்கள்.

அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்திரகாயும் சேர்த்து பொடி செய்து அந்த சத்துமாவு கஞ்சில் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

இறைச்சி வகைகள்:

குழந்தை உணவு முறைகள் (baby food tamil tips): 7 மாத குழந்தைக்கு உணவு முறை குழந்தை பிறந்த 7 மாதத்திற்கு பிறகு இறைச்சி வகைகளை கொடுக்கலாம்.

அதுவும் மீன் மற்றும் ஆட்டிறைச்சி போன்றவற்றை சூப்பாக வைத்து கொடுக்கலாம்.

பழங்கள்:

குழந்தை உணவு முறைகள்: வாழைப்பழம், ஆப்பிள், அவகோடா, சப்போட்டா மற்றும் பப்பாளிப்பழம் ஆகிய பழங்களை மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

வேகவைத்த மசித்த காய்கறிகள்:

7 Month Baby Food in Tamil: 7 மாத குழந்தைக்கு உணவு முறை குழந்தை பிறந்த 7 மாதம் வரை வேகவைத்து மசித்த காய்கறிகளை வடிகட்டி தண்ணீரை மட்டும்தான் கொடுக்கவேண்டும்.

7 மாதத்திற்கு பிறகு வேகவைத்த மசித்த காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுத்து பழக்க வேண்டும்.

குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யனுமா?
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Baby health tips tamil