குழந்தையை குளிப்பாட்டும் முறை ..!

Advertisement

குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி (How to bathe newborn baby?)..!

பிறந்த குழந்தை குளிப்பாட்டுவது என்பது ஒரு புதிய பொருளை கையாள்வதை போன்றது. தவறான முறையில் குழந்தையை குளிப்பாட்டினால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

குழந்தைகளைக் குளிப்பாட்ட பெரியவர்களைத் தேடுவது, வயதான பாட்டிகளைத் தேடுவது எனப் பெரிய சவாலே நடக்கும். குழந்தையைக் குளிப்பாட்டி பராமரிப்பது மிகவும் எளிது. எப்படி எனத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு வேலை சுலபமாகி விடும்.

குழந்தையை சாப்பிட வைக்க அருமையான வழி இதோ..!

சரி பிறந்த குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது (How to bathe newborn baby?) என்று நாம் இங்கு தெரிந்துக் கொள்வோம்.

குழந்தையை தினமும் குளிக்க வைக்கலாமா?

  • குழந்தையைத் தினமும் குளிப்பாட்டுவது (how to bathe newborn baby?) நல்லது.
  • வயிற்றில் இருக்கும்போது நீரில் இருந்த குழந்தை கொஞ்சம் பூசினாற் போலத் தெரியும். ஆனால், பிரசவத்துக்கு பின் உடல் வற்றும்.
    எடை குறைவதுடன் சருமத்தில் உள்ள தோல் உரிந்து வறண்டு போகும்.
  • சருமம் அழகாக மாற, குழந்தையை ஆரோக்கியமாக இருக்க தினமும் குழந்தையைக் குளிக்க வைக்க வேண்டும்.
  • எண்ணெயும் தண்ணீரும் குழந்தைக்கு மிகவும் தேவை. ஆதலால் குளியலும் எண்ணெய் குளியலும் குழந்தைக்கு மிக அவசியம்.
  • மிகவும் குளிர்ந்த இடத்தில், குளிர் பிரதேசங்களில் இருந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குழந்தையைக் குளிக்க (how to bathe newborn baby?) வைக்கலாம்.

பிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி?

சரி இப்போது குழந்தையை குளிப்பாட்டும் முறை (how to bathe newborn baby?) பற்றி காண்போம் வாங்க..!

குழந்தையை குளிப்பாட்டும் முறை:

  • குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்போ அல்லது குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்து தான் பால் கொடுக்க வேண்டும.
  • பிறந்த குழந்தையை பாத் டப்பில் வைத்து குளிப்பாட்டலாம்.
  • குழந்தையை குளிப்பாட்டுவதற்கு சிலர் கடலை மாவு, பயத்த மாவு போன்றவற்றை பயன்படுத்துவார்கள், அவையெல்லாம் அவசியமில்லை. குழந்தைகளுக்கான சோப் சொல்யூசனை பயன்படுத்தினாலே போதும்.
  • குளிக்கும் போது குழந்தையை உலுக்கவோ, குலுக்கவோ அல்லது காதிலும், மூக்கிலும் தண்ணீரை ஊதக் கூடாது.
  • தினமும் கொஞ்சம் எண்ணெய் பூசி குழந்தையை குளிப்பாட்டலாம்.
  • வாரம் 2 முறை தலைக்குக் குளிப்பாட்டினால் போதுமானது. அப்போது பெரியவர்களுக்கு பயன்படுத்தும் சாம்பு, சீயக்காய் போன்றவற்றை பயன்படுத்தாமல் குழந்தைகளுக்கான சாம்பு அல்லது சோப் சொல்யூசனை போட்டு குளிப்பாட்டலாம்.
  • தண்ணீர் மிகவும் சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ இருக்க கூடாது மிதமான சூட்டில் குழந்தையை குளிப்பாட்ட வேண்டும்.
  • குழந்தையை குளிப்பாட்டிய (how to bathe newborn baby?) பிறகு சுத்தமான டவலை பயன்படுத்த வேண்டும்.
  • குழந்தையை குளிப்பாட்டிய பிறகு ஈரத்துதோடு குழந்தையின் விரல் நகங்களை நறுக்கிவிட வேண்டும்.
  • குழந்தையை குளிப்பாட்டிய (how to bathe newborn baby?) பிறகு சிலர் குழந்தையின் முகத்தில் பவுடர் அடித்துவிடுவார்கள் சில குழந்தைகளின் முகத்தில் அந்த பவுடர் அலர்ஜியை ஏற்படுத்தும் எனவே குழந்தையின் சருமத்தை பொறுத்து  பவுடர் அடிப்பது சரியா அல்லது தவறா என்று தெரிந்துக் கொண்டு பவுடர் அடிப்பதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement