குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்கலாமா? | Eating Biscuits Good or Bad
பொதுவாக வளரும் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய தின்பண்டம் தான் பிஸ்கட். தற்போதைய நவீன வளர்ச்சி காரணமாக பிஸ்கட்டுகளில் இனிப்பு பிஸ்கட், உப்பு பிஸ்கட், கிரீம் பிஸ்கட், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் வகையில் உள்ள பிஸ்கட் என்று பல வகையான பிஸ்கட்கள் உள்ளன. அதாவது அவரவர் விரும்பி சாப்பிடும் வகையில் பலவகையான பிஸ்கட்டுகள் சந்தையில் விற்கப்படுகிறது. உண்மையில் நாம் இந்த பிஸ்கட்டுகளை அதிகளவு சாப்பிடுவதினால் ஏற்படும் பிரச்சனையை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
பிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் – பிஸ்கட் தீமைகள்:
இந்த அவசர உலகில் பலர் காலை வேளைகளில் பலவிதமான காரணங்களினால் உணவருந்துவதில்லை. அதற்கு பதில் ஒரு கிளாஸ் தேனீர் மற்றும் இரண்டு பிஸ்கட்டுகள் மட்டும் சாப்பிட்டு இருப்பார். இதன் காரணமாக நாளடைவில் அவர்களுக்கு வயிற்று புண், செரிப்பண பிரச்சனைகளை சந்திப்பார்கள். நாம் விரும்பி சாப்பிடும் இந்த பிஸ்கட்டில் அதிகளவு இருப்பது சர்க்கரை கொழுப்பு அமிலம், இந்த அமிலத்தால் நம் உடல் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதாவது இந்த அமிலம் நம் உடலில் அதிகளவு சேர்ந்து கொழுப்பின் அளவை அதிகரித்து இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கவும் வாய்ப்புள்ளது.
குழந்தைகள் பிஸ்கெட் சாப்பிடுவதால் வரும் பிரச்சனைகள்?
குழந்தைக்கு நான்கு மாதம் முடிந்து விட்டால், தாய்பால் பத்தவில்லை என பல தாய்மார்கள் குழந்தைக்கு இணை உணவாக பிஸ்கெட்டை கொடுக்கிறார்கள். இதன் மூலம் பிள்ளையின் பசி அடங்கும் என நினைக்கிறார்கள். ஆனால், தெரிந்தே தங்கள் பிள்ளைகளுக்கு நஞ்சை ஊட்டி வருகின்றனர் என்கிறனர் நியூட்ரிஷியன்கள்.
பிஸ்கெட் தயாரிப்பில் மூலப்பொருளான கோதுமை மாவு மற்றும் மைதாமாவு இரண்டுமே அதிகளவு சுத்திகரிக்கப்பட்டவை. சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவும், மைதா மாவும் உடம்புக்கு கெடுதல் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.
பிஸ்கெட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கெட்டின் ஆயுள்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச்சத்து கலக்கப்படுகிறது. இதுதவிர, க்ரீம் பிஸ்கெட்டுகளில் ஆரஞ்சு ஃப்ளேவர், சாக்லேட் ஃப்ளேவர் எனப் பலவகைகளில் கிடைக்கின்றன. இவை எல்லாம் செயற்கை ஃப்ளேவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக பிஸ்கெட் சாப்பிட்டு பழகும் குழந்தைகளுக்கு பசி எடுக்காது. பிஸ்கெட்டின் வேலையே பசியை அடக்குவது தான். அதனால் குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சிறு வயதில் இருந்தே பிஸ்கெட் சாப்பிடும் குழந்தைகளுக்கு நாளடைவில் அந்த குழந்தைக்கு செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
ஆகவே தாய்மார்கள் குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகளை ஸ்நாக்ஸ்களாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பிஸ்கட்டுகள், முழுக்க முழுக்க உடலுக்குத் தீங்கானவைதான். அது, குழந்தைகளின் வயிற்றை நிரப்புமே தவிர ஆரோக்கியத்தைத்தராது. ஆகவே குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி பிஸ்கட்டுகளை அளவுடன் சாப்பிடுவது நல்லது. வேண்டுமானால் வீட்டில் செய்யப்பட்ட நொறுக்கு தின்பண்டங்களையோ அல்லது பிஸ்கட்டுகளையோ சாப்பிடுவது நல்லது.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |