குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எப்படி சொல்லித்தர வேண்டும் ?
குழந்தை வளர்ப்பு டிப்ஸ்:
பெற்றோர் ஆகிய நீங்கள் உங்கள் குழந்தைக்கு இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை சொல்லித்தர வேண்டும். அதுவும் உங்கள் அனுபவத்தை உங்கள் குழந்தைக்கு கட்டாயம் சொல்லிதர வேண்டும். அதற்காக அவர்களுக்கு எதிர்மறையான விஷயங்களை திணிக்ககூடாது.
![]() |
குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எப்படி சொல்லித்தர வேண்டும் ? என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க.
குழந்தை வளர்ப்பு டிப்ஸ் – முதலாவதாக உன்னை நேசி:
பொதுவாக ஒவ்வொருவரும் குழந்தைக்கு சொல்லித்தர வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் தன்னை நேசிக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்று அதுவும் அவர்களின் தோற்றம், நிறம், அழகு, செயல் என்ற அனைத்தையும் அவர்கள் நேசிக்க வேண்டும்.
அதே போல் தன்னை பற்றி அவர்கள் என்றும் இழிவாக நினைக்ககூடாது. இதை முக்கியமாக குழந்தைக்கு சொல்லித்தர வேண்டியது மிக அவசியமான ஒன்று.
குழந்தை வளர்ப்பு டிப்ஸ் – உலகத்தை பற்றி தெரிவித்தல்:
இந்த உலகம் மிகவும் பெரியது, மிகவும் அழகானது. இந்த உலகத்தை பார்த்து இரசிப்பது அவசியம், அதனால் உங்கள் குழந்தைக்கு இந்த உலகத்தை சுட்டிக்காட்ட வேண்டும். இதனால் உங்கள் குழந்தைக்கு அறிவுதிறன் அதிகமாகும்.
குழந்தை வளர்ப்பு டிப்ஸ் – நல்ல நண்பர்கள்:
நல்ல நண்பர்கள் இருப்பது மிக அவசியமான ஒன்று. நண்பர்கள் இருந்தால் தான் உங்கள் குழந்தைகளும் நல்ல வழியில் செல்லும் என்பதை அறிந்து உங்கள் குழந்தைக்கு புரிய வைக்கவும்.
![]() |
குழந்தை வளர்ப்பு டிப்ஸ் – வாழ்கையின் குறிக்கோள்:
பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு சொல்லிதர கூடிய முக்கியமான ஒன்று, நீ என்னவாக வேண்டும் என்று ஆசை படுகிறாயோ, அதன் வழியே செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோர்களும் சொல்லித்தர வேண்டும்.
அதற்காக நீ அதைதான் படிக்க வேண்டும், இதைதான் செய்ய வேண்டும் என்று உங்கள் விருப்பத்தின் வழியே கூட்டி சென்றால், உங்கள் குழந்தையின் வாழ்கையே கேள்வி குறியாகதான் அமையும். அதனால் உங்கள் குழந்தையின் ஆசைப்படி செல்ல விடுங்கள்.
குழந்தை வளர்ப்பு டிப்ஸ் – குழந்தையின் பாதுகாப்புக்கு:
மிகச்சிறிய குழந்தை என்றாலும் அப்பா, அம்மாவின் பெயர், வீட்டு முகவரி, செல் போன் நம்பர் என்ற அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இது உங்கள் குழந்தையின் பாதுகாப்புக்காக.
முன்பின் தெரியாத நபர்கள் உங்கள் குழந்தைக்கு சாக்லேட், பிஸ்கேட் கொடுத்தால் வாங்கி சாப்பிடகூடாது என்று சொல்லித்தருவது மிகமிக அவசியம்.
![]() |
குழந்தை வளர்ப்பு டிப்ஸ் – குழந்தையின் மனக்கவலை:
தங்கள் குழந்தைகளுக்கு நேராகவே பெற்றோர்கள் சண்டை போடக்கூடாது, ஏன் என்றால் குழந்தையின் மனம் மிகவும் மன அழுத்தத்திற்க்கு ஆளாகும்.
இதனால் குழந்தையின் படிப்பில் நாட்டம் செல்லாது. எனவே குழந்தைகளுக்கு முன் பெற்றோர் சண்டை போடுவதை இனி விட்டுவிடுங்கள்.
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Baby health tips in tamil |