1 வயது குழந்தை உணவு வகைகள்:-
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் தான் குழந்தையின் ஆரோக்கியமான வாழ்விற்கு முதல் படி. அதிலும் பெற்றோர்களின் முதல் வேலையே அவர்கள் குழந்தைக்கு ஆரோக்கியான உணவு முறை மற்றும் ஒழுங்கான வாழ்க்கை முறையை கற்றுக்கொடுப்பது. அந்த வகையில் 1 வயது குழந்தை உணவு வகைகள் பற்றி இப்போது நாம் படித்து தெரிந்து கொள்வோம்.
இதை கிளிக் செய்யுங்கள் —> | குழந்தை உணவு பானங்கள்..! |
அதாவது 1 வயது குழந்தைக்கு என்ன உணவு வகைகளை கொடுக்கலாம், எப்படி கொடுக்க வேண்டும் என்பதை இப்போது படித்தறிவோம் வாங்க.
1 வயது குழந்தை உணவு வகைகள்:-
ஒரு வயது குழந்தைக்கு ஆனதும் அனைத்து வகை உணவுகளையும் கொடுக்கலாம், குழந்தைக்கென்று தனியாக சமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் அனைவருக்கும் சமைக்கும் உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கலாம்.
குறிப்பாக அசைவ உணவாக இருந்தாலும் ஒரு வயதிலேயே குழந்தைகளுக்கு கொஞ்சம், கொஞ்சமாக கொடுத்து பழக்க வேண்டும்.
அதேபோல் குழந்தைகளுக்கு 3 வேளை அனைத்து வகை திடஉணவுகளும், இரண்டு வேளை நட்ஸ், ஸ்நாக்ஸும் போன்ற நொறுக்கு தீனிகளையும் கொடுத்து பழக்க வேண்டும்.
1 வயது குழந்தை உணவு வகைகள்:-
1 வயது குழந்தை உணவு வகைகள் அதாவது ஒரு வயது பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு அனைத்து வகை பழங்கள், கீரைகள், அனைத்து வகை சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், முட்டை, மீன், மட்டன், சிக்கன் போன்றவற்றை கொஞ்சம், கொஞ்சமாக கொடுத்து பழக்க வேண்டும்.
அதற்காக குழந்தைக்கு உணவின் சுவை பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களுக்கு உணவுகளை வற்புறுத்தி திணிக்க கூடாது. குழந்தைகளை பொறுத்தவரை பெற்றோர்கள் பொறுமையுடன் தான் கையாள வேண்டும்.
1 வயது குழந்தை உணவு வகைகள் – காலை உணவு:-
வளரும் குழந்தைகளுக்கு அதிகம் கால்சியம் சத்து தேவைப்படும் என்பதால் குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு கிளாஸ் பால் கொடுக்கலாம், இது குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் மிகவும் பயன்படும்.
ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..! |
அதேபோல் குழந்தைகளுக்கு காலை உணவுகளில் இட்லி, தோசை, பொங்கல், சாம்பார் அல்லது அனைத்து வகை சட்னி, கூல், கம்பு கஞ்சி, சத்துமாவு கஞ்சி, ஒரு கப் சாதத்துடன் மசித்த உருளைக்கிழங்கு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுக்கலாம். மேலும் காய்கறிகள் சேர்த்து சமைத்த உப்புமா, சேமியாவும் கொடுக்கலாம்.
குழந்தைகள் காலை உணவு சாப்பிட்ட இடைப்பட்ட நேரங்களில் வேகவைத்த சுண்டல், கால் கப் பழச்சாறு மற்றும் கால் கப் பழக்கலவை கொடுத்து பழக்கலாம்.
உங்கள் குழந்தை சிவப்பாக மாற வேண்டுமா? இதோ எளிய வழிகள் !!! |
1 வயது குழந்தை உணவு வகைகள் – மதிய உணவு வகைகள்:-
1 வயது குழந்தை உணவு வகைகள் – மதிய உணவு வகைகள்:- அதாவது குழந்தைகளுக்கு மதிய உணவு வகைகளில் மீன், ஒரு முட்டை, மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி வகைகளை கொடுக்கலாம். கீரையை நன்கு வேக வைத்து சாதத்துடன் பிசைந்து கொடுக்கலாம். சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றையும் கொடுக்கலாம்.
மதிய உணவு வகைகள்:- வெண்ணெய், எண்ணெய் வகைகளையும் குழந்தையின் மதிய உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் குழந்தைகளுக்கு எண்ணெயில் பொறித்த உணவுகளை கொடுப்பதற்கு பதிலாக சுட்ட, வறுத்த மற்றும் ஆவியில் வேகவைத்த உணவுகளை கொடுப்பது மிகவும் சிறந்த உணவு முறையாகும்.
மதிய உணவு வகைகள்:- சில குழந்தைகள் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதற்கு மிகவும் அடம்பிடிப்பார்கள். அவர்களை நிறைய கலர்ஃபுல்லான பழங்கள், காய்கறிகள் என்று சாப்பிடும்படி ஆசையைத் தூண்டிவிடலாம். முந்திரி, சாண்ட்விச், உலர்ந்த திராட்சை, பாதாம், வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், வைட்டமின் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..! |
1 வயது குழந்தை உணவு வகைகள் – மாலை நேரங்களில் என்ன உணவுகளை கொடுக்கலாம்:
குழந்தைகளுக்கு மாலைநேரங்களில் பால், சூப் வகைகள், ஜூஸ், ஆரோக்கியமான தின் பண்டங்கள் போன்றவற்றை கொடுத்து பழக்கலாம்.
1 வயது குழந்தை உணவு வகைகள் – இரவு உணவு:
குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளை கொடுத்து பழக்கலாம்.
இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா? அப்போ இதை டிரை பண்ணுங்க !!! |
பொறுப்பு துறப்பு:
மேல் கூறப்பட்டுள்ள அனைத்து உணவு பட்டியல்களை பின்பற்றுவதற்கு முன் குழந்தை நல மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று, பின்பு மேற்கொள்ளவும். நன்றி நண்பர்களே..!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |