5 Month Baby Food Chart in Tamil
பொதுவாக வயதில் மூத்தவர்களுக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என அனைத்தும் தெரியும். அதேபோல் எந்த நேரத்தில் என்ன உணவினை சாப்பிட வேண்டும் என்ற பழக்க வழக்கமும் தெரியும். ஆனால் குழந்தைகள் அப்படி கிடையாது. ஏனென்றால் குழந்தைகளை பொறுத்தவரை நாம் தான் அவர்களுக்கு எல்லாமுமாக இருந்து பாதுகாப்பான முறையில் வளர்த்து வர வேண்டும்.
அதேபோல் அவர்களுக்கு ஏதேனும் உடல்நிலை குறைபாடு என்றாலும் கூட நாம் தான் மருத்துவரிடம் அவர்களது நிலையினை பற்றி எடுத்துக்கூற வேண்டும். அப்படி பார்த்தால் குழந்தைகள் 5 மாதம் வரையிலும் தாய்ப்பால் மட்டுமே குடிப்பார்கள். அதற்கு பிறகு தான் அவர்களுக்கு உணவு கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கப்படுகிறது. அதாவது அவர்களது வளர்ச்சி எப்படி மாதத்திற்க்கு மாதம் வேறுபட்டு கொண்டே இருக்கிறதோ, அதேபோல உணவு முறையும் மாறிக்கொண்டே தான் காணப்படும். ஆகையால் இன்று குழந்தை நலன் பதிவில் 5 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு பட்டியலை பார்க்கப்போகிறோம்.
5 மாத குழந்தை உணவு அட்டவணை:
5 மாதம் வரையுமே குழந்தைகள் பெரும்பாலும் தாய்ப்பாலை மட்டுமே தான் குடிப்பார்கள். ஆகையால் 5-வது மாதத்தில் நீங்கள் அதிகமாக திட உணவுகளான அரிசி, பருப்பு மற்றும் இதர அனைத்தினையும் கொடுக்க கூடாது.
ஏனென்றால் குழந்தைகள் உணவினை மென்று சாப்பிடுவதில் பிரச்சனை ஏற்பட்டு செரிமான பிரச்சனை வரக்கூடும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக தான் உணவினை கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு காய்கறிகள்:
5 மாதத்தில் குழந்தைகளுக்கு நீங்கள் காய்கறிகளை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம். அதாவது முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து கொடுக்க வேண்டும். அதேபோல் கேரட்டினையும் கொடுக்க வேண்டும்.
இவை இரண்டினையும் நன்றாக மசித்து கொடுப்பதன் மூலம் செரிமான பிரச்சனை வராது. அதுவும் சரியான அளவில் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பழங்கள்:
பழங்களை பொறுத்தவரை எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. ஆகையால் நீங்கள் எல்லா வகையான பழங்களையும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. முதலில் வாழைப்பழம், அவகேடா மற்றும் ஆப்பிள் என இவற்றை மட்டும் கொடுக்க வேண்டும்.
அதேபோல் பச்சையான பழத்தினை கொடுக்கலாம் நன்றாக பழுத்த பழத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.
அரிசி தானியம்:
அதேபோல் 5-வது மாதத்தில் அரிசி நிறைந்த தானியங்களை சாப்பிட கொடுக்கலாம். அதுவும் நன்றாக வேக வைத்து கொஞ்சம் நீர் அருந்தும் முறையில் தான் கொடுக்க வேண்டும்.
நீங்கள் ஓட்ஸும் கொடுக்கலாம். ஆகவே நீங்கள் இவற்றை எல்லாம் கொடுக்கும் போது திடமாக இல்லாமல் திரவமாக கொடுப்பது நல்லது.
ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்
பொறுப்பு துறப்பு:
மேல் கூறப்பட்டுள்ள அனைத்து உணவு பட்டியல்களை பின்பற்றுவதற்கு முன் குழந்தை நல மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று, பின்பு மேற்கொள்ளவும். நன்றி நண்பர்களே..!
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |