6+மாத குழந்தை உணவு பட்டியல் சிலவற்றை காண்போம் வாங்க..!

குழந்தை உணவு பட்டியல்

6 மாத குழந்தை உணவு பட்டியல் சிலவற்றை காண்போம் வாங்க

எட்டு மாத குழந்தைகளுக்கு என்னென்ன காய்கறிகள் மற்றும் பழங்களை கொடுத்தால், என்னென்ன ஊட்டச்சத்து குழந்தைக்கு கிடைக்கும் என்பதை பற்றி இப்போது நாம் இந்த பகுதில் படித்தறிவோம் வாங்க..!

இதையும் படிக்கவும்–> குழந்தைக்கு காலை வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய பானங்கள் !!!

6 மாத குழந்தை உணவு பட்டியல் – 6 Matha Kulanthai Unavu Murai in Tamil

1. பட்டாணி

 

பட்டாணியில் விட்டமின் ஏ, சி, இரும்புச் சத்து, புரதம், கால்சியம் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. 8 மாத குழந்தை உணவு பட்டியல் முறையில் குழந்தைக்கு அதிகளவு இந்த பட்டாணியை வேகவைத்து மசித்து குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறை கொடுப்பதால். குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. மேலும் குழந்தை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.

2. 6 matha kulanthai unavu murai in tamil – கேரட்

 

7 மாத குழந்தை உணவு முறை பெரும்பாலான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு கேரட். ஏனெனில் இது இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்டது. தோல் சீவி, கேரட்டை வேக வைத்து மசித்துக் கொடுக்கலாம். ஆன்டிஆக்ஸிடன்ட், பீட்டா கரோட்டீன் மற்றும் விட்டமின் ஏ சத்துகள் நிரம்பியுள்ளன.

3. பீட்ரூட்

7 மாத குழந்தை உணவு முறை தோல் சீவி பீட்ரூட்டை சிறிதாக நறுக்கி, நன்கு வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். உடலில் ரத்தம் உற்பத்தியாக உதவும்.

4. உருளைக்கிழங்கு

8 மாத குழந்தை உணவு பட்டியல் நன்கு கழுவிய உருளைக்கிழங்கைத் தண்ணீரில் போட்டு குக்கரில் வேக விடவும். வெந்ததும் தோல் நீக்கி நன்கு மசித்துக் கொடுக்கலாம். ஆரோக்கியமான முறையில் குழந்தையின் எடை கூட உதவும். நீண்ட நேரம் பசி தாங்கும்.

5. சர்க்கரைவள்ளி கிழங்கு

8 மாத குழந்தை உணவு பட்டியல் – நன்கு கழுவிய சர்க்கரைவள்ளி கிழங்கைத் தண்ணீரில் போட்டு குக்கரில் வேக விடவும். வெந்ததும் தோல் நீக்கி நன்கு மசித்துக் கொடுக்கலாம். ஆரோக்கியமான முறையில் குழந்தையின் எடை கூட உதவும். தோலுக்கு நல்லது. முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

6. மிக்ஸ்ட் வெஜ்

 

உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி ஆகியவற்றை வேகவைத்து நன்கு மசித்துக் கொடுக்கலாம். ஊட்டச்சத்துகள் நிறைந்தது.

7. கைக்குத்தல் அரிசி

8 மாத குழந்தை உணவு பட்டியல் – கைக்குத்தல் அரிசியை 8 மணி நேரம் ஊறவைத்த பின் நன்கு வேக வைத்து மையாக மசித்துக் குழந்தைக்கு ஊட்டலாம். நுண்ணூட்ட சத்துகள் அனைத்தும் இதில் உள்ளது. அலர்ஜி ஏற்பட வாய்ப்பே இல்லை.

8. அவகேடோ

பாதியாக அவகேடோவை நறுக்கி ஸ்பூனால் அதன் சதைப் பகுதியை எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும். பழுத்த அவகேடோவாக இருந்தால் க்ரீம் பதத்தில் வரும். ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்தது. உடல் எடை கூட உதவும். சருமம் ஆரோக்கியமாகும்.

இதையும் படிக்கவும் –> குழந்தை பராமரிப்பு குறிப்புகள் – பால் பற்களை எப்படி பராமரிக்க வேண்டும்?

9. வாழைப்பழம்

8 மாத குழந்தை உணவு பட்டியல் – பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்த உணவு இது. ‘பர்ஃபெக்ட் உணவு’ என வாழைப்பழ ப்யூரியை சொல்லலாம். குழந்தைகளுக்கான சிறந்த உணவுகளில் இதுவும் ஒன்று. மலச்சிக்கல் நீங்கும்.

10. ஆப்பிள்

ஆப்பிளை வேக வைத்து அதன் தோலை நீக்கி உள் சதைப் பகுதியை நன்கு மசித்துக் குழந்தைக்கு கொடுக்கலாம்.

இயற்கையான இனிப்பு சுவை இருப்பதால் குழந்தைக்கு பிடிக்கும். விட்டமின், தாதுக்கள் நிரம்பியது.

11. ஸ்டாபெர்ரி

ஸ்டாபெர்ரி பழத்தில் உள்ள பச்சை காம்பை எடுத்து விட்டு, பழத்தை நன்கு அரைத்துக் கொள்ளவும். இதைக் குழந்தைக்கும் கொடுக்கலாம்.

விட்டமின் சி, ஏ, ஆன்டிஆக்ஸிடன்ட் நிரம்பியுள்ளதால் குழந்தைக்கு மிகவும் நல்லது.

12. கிவி

8 மாத குழந்தை உணவு பட்டியல் கிவி பழத்தின் நிறம் குழந்தைகளை ஈர்க்கவே செய்யும். தோல் நீக்கிய பின் கிவி பழத்தை எடுத்து அரைத்துக் கொள்ளவும்.

அதைக் குழந்தைக்கு கொடுக்கலாம். இதில் கொஞ்சமாக வாழைப்பழத்தை சேர்த்து மசித்துக் கொடுக்க குழந்தைக்கு நல்லது. மல்டி விட்டமின்கள் கிடைக்கும்.

13. கிர்ணி மற்றும் முலாம் பழம்

7 மாத குழந்தை உணவு முறை கிர்ணி அல்லது முலாம் பழத்தை அறிந்து அதன் விதைகளை நீக்கி சதைப்பகுதியை கரண்டியால் மசித்துக் கொள்ளவும்.

பழமாக இருப்பின் அப்படியே நசுக்கினால் கூழாகிவிடும். மிதமான அளவு பழுத்திருந்தால் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். நீர்ச்சத்து, விட்டமின் சி நிறைந்துள்ளன.

14. மாம்பழம்

7 மாத குழந்தை உணவு முறை பழுத்த சதைப் பகுதி, மிருதுவாக இருக்கின்ற பாகத்தை எடுத்து ஸ்பூனாலேயே நன்கு மசித்துக் கொள்ளவும். சருமம், முடி, கண்கள் ஆகியவற்றுக்கு மிகவும் நல்லது.

15. பப்பாளி

 

8 மாத குழந்தை உணவு பட்டியல் – பழுத்த பப்பாளியாக இருந்தால் முள் கரண்டியிலே நீங்கள் மசித்துக் கொள்ளலாம்.

செங்காயாக இருப்பின் தண்ணீரில் வேகவைத்து மசித்துக் கொடுக்கலாம். விட்டமின் சி மிக அதிகம். பார்வைத் திறன் அதிகரிக்கும். சருமம் பொலிவடையும்.

இதையும் படிக்கவும் –> ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!