ADHD Diagnosis in Tamil | ADHD Diagnosis Tamil Meaning
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு வீட்டில் குழந்தை இருக்கிறது என்றால் அதனின் ஒவ்வொரு அசைவுகளையும் அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் பெரியவர்களாக இருந்தால் அவர்களது உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்று அறிந்து கொள்ளும் தன்மை இருக்கும். குழந்தைகளுக்கு என்ன செய்தாலும் அதனை வெளிப்படுத்த தெரியாது.
ஏடிஹெச்டி (ADHD) என்பது கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு (Attention Deficit Hyperactivity Disorder) என்பதைக் குறிக்கிறது. இது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும். அவர்களை கவனமாக பார்த்து கொள்ள வேண்டியது நம் கடமையாகும். அதனால் தான் இந்த பதிவில் adhd என்றால் என்ன, அவற்றின் அறிகுறிகள் போன்றவற்றை அறிந்து கொள்வோம் வாங்க..
ADHD Full Form:
ADHD என்பது Attention deficit hyperactivity disorder என்று குறிப்பிடப்படுகிறது. இதனை தமிழில் அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு என்று கூறுகிறோம்.
ADHD என்றால் என்ன.?
ADHD என்பது மூளை செயல்பாட்டின் வளர்ச்சி குறைபாடு. இந்த நோயை குழந்தை பருவத்தில் அறிந்தாலும் வாழ்நாள் முழுவதும் தொடர கூடியதாக இருக்கிறது.
இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூளையின் மரபணு, இரசாயன மற்றும் கட்டமைப்பு மாற்றங்களுடன் தொடர்புடைய ஒரு நோயாகும். ஏடிஹெச்டி உள்ள குழந்தைகள் பொதுவாக உயர் செயல்திறன் கொண்டவர்களாகவும், கவனம் செலுத்துவதில் ஈடுபாடில்லாமலும், ஒரு செயலை செய்வதால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி யோசிக்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.
குழந்தையின் மலச்சிக்கலை சரி செய்ய வீட்டு வைத்தியம்…! |
நோயின் அறிகுறிகள்:
- இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் கவன சிதறல் அதிகமாக இருக்கும்.
- ஞாபக மறதி காணப்படும்.
- வீடு அல்லது பள்ளியில் இருக்கும் பொருட்களை இடத்தை மாற்றி வைப்பார்கள்.
- நாம் சொல்லும் விஷயங்களை கடைபிடிக்க மாட்டார்கள்.
- அன்றாடம் செயல்களை கூட செய்ய மறந்து விடுவார்கள்.
- ஒரு இடத்தில் நீண்ட நேரம் இருக்க மாட்டார்கள்.
- சாதாரண விஷயத்திற்கு எல்லாம் உணர்ச்சிவசப்படுவார்கள்.
நோய்க்கான காரணம்:
- இந்த நோய் ஆனது மரபணு வழியாக கூடவும் ஏற்படும்.
- குழந்தை தாயின் கருவில் இருக்கும் போதே மூளையின் கட்டமைப்பில் ஏதாவது காயம் ஏற்பட்டால் ADHD பிரச்சனை ஏற்படும்.
- மேலும் குழந்தை தாயின் கருவறையில் இருக்கும் போது மது, புகையிலை போன்றவை உட்கொண்டால் ADHD பிரச்சனை ஏற்படும்.
- மேலும் குறை மாதத்தில் குழந்தை பிறந்தாலும் சரி அல்லது குழந்தை எடை குறைவாக இருந்தாலும் சரி ADHD பிரச்சனை ஏற்படக்கூடும்.
உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு தீர்வு போதும் |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |