குழந்தையை ஏசியில் தூங்க வைப்பவர்களா நீங்கள்..!

Advertisement

குழந்தையை ஏசி ரூமில் தூங்கவைப்பதற்கு முன் கவனிக்க வேண்டியவை..!

16 மற்றும் 17 டிகிரி வெப்பநிலையில் தொடர்ந்து தூங்கும் குழந்தைகளுக்கு, சுவாசப் பாதிப்பு ஏற்படும். பிறந்த குழந்தையை கதகதப்பான அறையில் தான் தூங்க வைக்க வேண்டும்.  ஏசி, ரூமில் (ac room) குழந்தைகளை தூங்க வைக்கும் முன், கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பகுதியில் நாம் காண்போம்.

குழந்தைக்கு வரட்டு இருமல் குணமாக 8 கைவைத்தியம்..!

குழந்தை பராமரிப்பு டிப்ஸ் (Baby care tips in tamil): 1

AC Room காற்று குழந்தையின் முகத்தில் நேரடியாக படக் கூடாது. அதற்கு ஏற்றாற்போல், குழந்தைகளை மாற்றி படுக்க வைக்க வேண்டும்.

ஏசி காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படுவார்கள். இதனைக் கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம்.

குழந்தை பராமரிப்பு டிப்ஸ் (Baby care tips in tamil): 2

ஏசி பில்டரில் இருக்கும் தூசியை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் பில்டரில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத தூசிகள், குழந்தைகளின் மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும். இந்த தூசியை வெளியேற்ற நுரையீரல் அதிக சளியை உற்பத்தி செய்யும்.

குழந்தை பராமரிப்பு டிப்ஸ் (Baby care tips in tamil): 3

சூடான அறையில் இருந்து, சட்டென்று ஏசி அறைக்குள் அழைத்து செல்ல வேண்டாம். ஏசி அறையில் (ac room) நுழைந்ததும் 16, 17 டிகிரி என குறைந்த வெப்பநிலையில் ஏசியை வைக்கக் கூடாது.

குழந்தையின் உடல் எடை குறைய டிப்ஸ்..!

குழந்தை பராமரிப்பு டிப்ஸ் (Baby care tips in tamil): 4

ஏசி அறையில் நுழைந்த உடனே, குழந்தைகளை சட்டை இல்லாமல் தூங்க வைக்கக் கூடாது.

வளர்ந்த பிள்ளைகளுக்கு நெஞ்சுப் பகுதியையும், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தை என்றால், நெஞ்சு மற்றும் பாதத்தை துணியால் மறைத்து தூங்க வைக்கவும்.

குழந்தை பராமரிப்பு டிப்ஸ் (Baby care tips in tamil): 5

16 மற்றும் 17 டிகிரி வெப்பநிலையில் தொடர்ந்து தூங்கும் குழந்தைகளுக்கு, சுவாசப் பாதிப்பு ஏற்படும். பிறந்த குழந்தையை கதகதப்பான அறையில் தான் தூங்க வைக்க வேண்டும்.

அம்மாவில் வயிற்றில் இருக்கும் போது, 30 டிகிரி வெப்பநிலையில் இருந்திருக்கும். எனவே 23 -26 டிகிரி வெப்பநிலையில் ஏசியை வைப்பது தான் நல்லது.

இரட்டை குழந்தை எவ்வாறு உருவாகிறது..?

குழந்தை பராமரிப்பு டிப்ஸ் (Baby care tips in tamil): 6

ஏசி தொழில்நுட்பத்தின் படி, மெஷின் உள்ளே வெளிக்காற்று வரும். ஆனாலும் வெளிக்காற்று உள்ளே வருமாறு ஒரு சிறிய திறப்பு எங்காவது இருக்க வேண்டும்.

அப்போது தான் குழந்தைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். இல்லையெனில், நீங்கள் வெளிவிட்ட காற்றையே குழந்தை சுவாசிக்க நேரிடும்.

குழந்தை பராமரிப்பு டிப்ஸ் (Baby care tips in tamil): 7

கடலை ஒட்டிய நகரங்களில் காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். எனவே அங்கு ஏர் கூலரைப் பயன்படுத்தும் போது, அறைக்குள் இருக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகமாகும்.

அந்த காற்றை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு வீசிங், ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும். எனவே ஒரு ஜன்னலையாவது திறந்து வைக்க வேண்டும்.

 

இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> குழந்தை நலன் 
Advertisement