அரச மரத்தை சுற்றுவதால் குழந்தை பிறக்குமா..? எப்படி..?

arasa-maram-benefits-in-tamil

அரச மரத்தை அதிகாலை சுற்றுவதால் என்ன பயன்?

அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மதேவனும், நடுப்பகுதியில் மஹாவிஷ்ணுவும், நுனிப்பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள். ஆகவேதான். மும்மூர்த்தி வடிவமான அரச மரத்தை பூஜைகள் செய்வதும், பிரதட்சணம் செய்து வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாவங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும் என்கிறது சாஸ்திரம்.

சரி அரச மரத்தை சுற்றுவதால் குழந்தை பிறக்குமா ? எப்படி என்பதை இப்போது நாம் படித்தறிவோம் வாருங்கள்..!

இரட்டை குழந்தை வேண்டுமா? அப்போ இதை டிரை பண்ணுங்க !!!

விஞ்ஞான உண்மை:

அரச மரத்தை சுற்றினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசனை நம்பி புருசனை கைவிட்டாள்” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.

இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் “என்ற பழமொழி உண்டு.

இதன் பொருள் அரச மரம், குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே.

அரச மரத்தின் காற்று, கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது.

அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

குழந்தை வளர்ப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் !!!

கருப்பை கோளாறுக்கு:

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.

பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும். அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்து, பொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

குழந்தைக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும் – கொஞ்சம் அறிவோம்..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.