0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சி தெரியுமா?

குழந்தை வளர்ச்சி நிலை..!

குழந்தை வளர்ச்சி நிலை – குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைக்கு சரியான உடல் எடை, உயரம், உடல் வளர்ச்சி, போன்றவற்றில்  குழந்தை சரியான வளர்ச்சியை அடைந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.   0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சிக்கான சரியான அளவுகோல்கள் உள்ளன, அந்த அளவுகோல்கள் படி இல்லாமல் இருந்தால் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கலாம். அதை செய்ய இந்த பகுதியில் தரப்பட்டுள்ள குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சரி வாங்க 0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சி நிலைகளை பற்றி படித்தறிவோம் வாங்க.

இதையும் படிக்கவும் பிறந்த குழந்தை வளர்ச்சி நிலை ..! முழு வளர்ச்சி அட்டவணை

பிறப்பு முதல் 4 வயது குழந்தையின் வளர்ச்சி அட்டவணைகள்..!

பிறந்த குழந்தை வளர்ச்சி நிலை / பிறந்த குழந்தையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்:

புதிய சூழ்நிலையின் காரணமாக குழந்தையின் உடல் எடை குறையும், இது இயல்புதான். அதன் பிறகு அவர்கள் பெரியவர்களாவதற்காக வளர வளர வளர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.

குழந்தை வளர்ச்சி நிலை பொதுவாக எதில் எல்லாம் இருக்க வேண்டும்?

பொதுவாக குழந்தையின் வளர்ச்சி நிலை உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, புரிந்து கொள்ளும் திறன், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப இருக்கும் வளர்ச்சி, உணர்வு தொடர்பான முதிர்ச்சி ஆகியவை குழந்தையின் வளர்ச்சி நிலையில் இருக்க வேண்டும்.

குழந்தை வளர்ச்சி நிலை – பிறந்த குழந்தையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்:

குழந்தையின் வளர்ச்சி அட்டவணை  (Average baby weight chart)
குழந்தையின் எடை அட்டவணை 
வயதுசராசரிவேறுபாடுவளர்ச்சி விகிதம் (1 மாதம்)
பிறந்தவுடன்3 கிலோ2.5 – 4 கிலோ—-
2 மாதம்5 கிலோ4.5 – 6 கிலோ1 கிலோ
6 மாதம்7 கிலோ5.5 – 8.5 கிலோ0.5 கிலோ
ஒரு வருடம்10 கிலோ8-11.8 கிலோ0.3 கிலோ
3 ஆண்டுகள்20 கிலோ16 – 23.5 கிலோ2.5 கிலோ
 • குழந்தை பிறந்தவுடன் எடையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
 • 6 மாதத்துக்கு ஒரு முறை குழந்தையின் எடையைப் பார்க்கலாம்.
 • 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை எடையைப் பார்க்கலாம்.

குழந்தை வளர்ச்சி நிலை – குழந்தையின் உயரம்:

குழந்தை வளர்ச்சி நிலை (Average baby Height chart)
குழந்தையின் உயரம் 
வயது குழந்தை வளர்ச்சி நிலைவேறுபாடு குழந்தை வளர்ச்சி விகிதம் (ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை)
பிறந்தவுடன்50 CM 47 – 55 CM —-
6 மாதங்கள்65 CM 60 – 70 CM 2.5 CM 
ஒரு ஆண்டு75 CM 69 – 80 CM 1- 6 CM 
4 ஆண்டுகள்100 CM 92 – 110 CM 8 CM 
8 ஆண்டுகள்125 CM  114 – 133 CM 6 CM 
 • குழந்தைகள் பிறக்கும்போது சராசரியாக 50 செ.மீ உயரம் இருப்பார்கள்.
 • வளர வளர குழந்தையின் உயரமும் அதிகரித்துக் கொண்டே போகும்.

குழந்தை வளர்ச்சி நிலை – தலை சுற்றளவு:

குழந்தை எடை அட்டவணை
குழந்தையின் வளர்ச்சி நிலை (Average baby Head chart)
குழந்தையின் தலை சுற்றளவில் ஏற்படும் மாற்றங்கள்
வயது சராசரி குழந்தையின் வளர்ச்சி விகிதம் 
பிறந்தவுடன் 35 CM —-
3 மாதத்தில் 40 CM 1.6 CM 
7 மாதத்தில் 45 CM 0.8 CM 
ஒரு ஆண்டில் 46 CM 0.5 CM 
2 ஆண்டுகளில் 49 CM 0.2 CM 
4 ஆண்டுகளில் 50 CM 0.08 CM 
7 ஆண்டுகளில் 51 CM 0.03 CM 
 • குழந்தையின் தலையின் சுற்றளவில் மாறுதல்கள் தொடர்ச்சியாக நடக்கும்.
 • பிறக்கும்போது குழந்தையின் தலை சராசரியாக 35 செ.மீ இருக்கும்.
இதையும் படிக்கவும் குழந்தைக்கு காலை வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய பானங்கள் !!!

குழந்தை வளர்ச்சி நிலை – குழந்தையின் பற்கள் வளர்ச்சி:

 • குழந்தை பிறப்பதற்கு முன்னரே அவர்களின் ஈறுகளுக்கு அடியில் பல் உருவாக ஆரம்பித்துவிடும்.
 • 6 – 7 மாதம் – மையப்பகுதியில் வெட்டு பற்கள் உருவாகும்.
 • 8+ மாத குழந்தைகள் – மேல் தாடையில் கீழ் தாடையில் கோரைப்பற்கள் உருவாகும்.
 • 2 வயது – கடவாய் பற்கள் உருவாகும்.
 • 3 வயதுக்கு முன்பு – 20 பற்கள் தோன்றியிருக்கலாம். இவையெல்லாம் பால் பற்கள்தான். இவை விழுந்து புதிதாக முளைக்கும். இவை தற்காலிகமான பற்கள்.
 • பெற்றோர்கள் இந்த பால் பற்கள் விஷயத்தில் அலட்சியமாக இருக்க கூடாது. குழந்தைகள் உணவைக் கடித்து சாப்பிடுவதற்கு இந்த பால் பற்கள் உதவுகின்றன. எனவே, கவனம் தேவை.
 • சுத்தமாக, சரியாக பற்களை பராமரிக்க வேண்டும்.
 • முகப்பொலிவை, அழகை தருவதும் பால் பற்கள்தான்.
 • பால் பற்களை சரியாக பராமரித்தால், பற்கள் விழுந்து மீண்டும் முளைக்க கூடிய நிரந்தர பற்கள் சரியானதாக இருக்கும்.

குழந்தையின் மைல்கற்கள் – வளர்ச்சி சரியா? எந்த வயதில் எதை செய்ய வேண்டும்?

1-வது மாதம் – தலையைத் தூக்குதல்

2-வது மாதம் – சிரித்தல், புன்னகைத்தல்

3-வது மாதம் – பொருட்களை பிடிக்க முயற்சி செய்தல்

4-வது மாதம் – பொருட்களை பிடித்தல்

5-வது மாதம் – பொருட்களை கெட்டியாக பிடித்தல், சரியாக உட்காருதல்

6-வது மாதம் – அசையும் பொருட்களை பிடித்தல்

7-வது மாதம் – உதவி இல்லாமல் தானே உட்காருதல்

8-வது மாதம் – பிறர் உதவியுடன் நிற்க பழகுவது

9-வது மாதம் – பொருட்களை பிடித்து, நின்று கொண்டு இருப்பது

10-வது மாதம் – தரையில் தவழுதல்

11-வது மாதம் – எதையாவது பிடித்துக் கொண்டு நடப்பது

12-வது மாதம் – எதையாவது பிடித்துக்கொண்டு தரையில் இருந்து எழுந்து நிற்பது.

ஒரு வயது ஒரு மாதம் – படி ஏறுதல், 2-3 வார்த்தைகளை பேசுதல்

1 வயது 2-வது மாதம் – உதவி இல்லாமலே நிற்பது

ஒரு வயது 3-வது மாதம் – பிறர் உதவி இல்லாமல் தானே நடப்பது

ஒரு வயது, 9 மாதம் முதல் 2 வயது வரை

 • சின்ன சின்ன வார்த்தைகளை வைத்து வாக்கியமாக பேசுதல்.
 • பிளாக்ஸில் (செவ்வக கட்டங்கள்) விளையாடுதல்.

2 வயது (குழந்தை வளர்ச்சி நிலை)

 • ஆடைகளை தானே போடுவது
 • ஷூ போடுவது
 • சாக்ஸ் போடுவது
 • சட்டை போடுவது
 • பிளாக்ஸில் (கட்டங்களில்) விளையாடுவது

3 வயது (குழந்தை வளர்ச்சி நிலை)

 • பிளாக்ஸில் விளையாட்டில் முன்னேற்றம் இருக்கும்.
 • தன் பெயரை சொல்லுதல்.
 • தான் ஆணா பெண்ணா எனக் குழந்தைகள் தெரிந்து கொள்ளும்.
 • குதித்து விளையாடுதல்.
 • 3 சக்கர சைக்கிள்களில் விளையாட ஆரம்பித்தல்.

3 – 4 வயதில் (குழந்தை வளர்ச்சி நிலை)

 • நன்றாக குழந்தைகள் பேசும்.
 • உணவை எடுத்து தானே சாப்பிட ஆரம்பிக்கும்.
 • பல வார்த்தைகள் குழந்தைகளுக்கு தெரிந்து இருக்கும்.
 • தன் தேவை என்ன எனக் குழந்தைகளுக்கு சொல்ல தெரியும்.
 • அடிப்படையான மொழி வார்த்தைகளை, எண்களை சொல்லி கொடுத்தால் குழந்தைக்கு மனப்பாடமாக சொல்ல தெரியும்.
 • இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்த்து குழந்தைகளின் வளர்ச்சியில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
 • ஏதாவது சில வளர்ச்சிகளில் பிரச்னை இருந்தால் தொடக்கத்திலே கண்டுபிடித்து, சிகிச்சை செய்வது நல்லது.
 • குழந்தையின் வளர்ச்சி இயல்பாக இருக்கிறதா என ஒருமுறை செக் செய்து கொள்வது நல்லது.
இதையும் படிக்கவும் ஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com